மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

வணிக ஒழுங்கு
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 1 - 15 ஜனவரி 2024


வணிக ஒழுங்கு

‘நபி(ஸல்) அவர்கள் கைபரின் ஆளுநராக ஒரு மனிதரை அனுப்பினார்கள். அவர் அன்பு நபிகளாரிடம் ஜனீப் என்கிற உயர் ரகப் பேரீச்சைக் கனிகளைக் கொண்டு வந்து கொடுத்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘கைபரில் விளைகின்ற பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரம் கொண்டவைதாமா?’ என வினவினார்கள். அதற்கு அந்த மனிதர் சொன்னார்: ‘இறைவன் மீது ஆணையாக, இல்லை இறைத்தூதரே! இரண்டு ஸா சாதாரணமான பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக ஒரு ஸாஅ* தரமான பழங்களையும் அல்லது மூன்று ஸாஅ சாதாரணமான பேரீச்சம் பழங்களைக் கொடுத்து ஒரு ஸாஅ தரமான பழங்களையும் வாங்குவோம்’.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அப்படிச் செய்யாதீர். அதற்கு மாறாக, சாதாரணமான பேரீச்சம் பழங்களைப் பணத்துக்கு விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு தரமான பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!’

அறிவிப்பாளர்கள் : அபூ ஸயீத் குத்ரி(ரலி), அபூ ஹூரைரா(ரலி)

நூல் : நஸாயீ

சாதாரண பேரீச்சம் பழங்களைக் கொடுத்து தரமான ஜனீப் ரக பேரீச்சம் பழங்களை வாங்கும் போது இரண்டு கிலோ சாதாரண பேரீச்சம் பழங்களுக்கு ஒரு கிலோ தரமான பேரீச்சம் கிடைத்தது. அதாவது தரமான பேரீச்சம் பழத்தின் விலை இரண்டு மடங்காயிற்று!

அதே சமயம் மூன்று கிலோ சாதாரண பேரீச்சம் பழங்களுக்கு இரண்டு கிலோ தரமான பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அதாவது தரமான பேரீச்சம் பழத்தின் விலை ஒன்றரை மடங்காயிற்று!

இவ்வாறாக, ஜனீப் ரக பேரீச்சம் பழத்தின் விலை சாதாரண பேரீச்சம் பழத்தின் எடையைப் பொருத்து ஏறியது; அல்லது இறங்கியது. நிர்ணயமான விலை இல்லாத நிலை!

இந்தக் குறையைப் போக்குவதற்காக நபி(ஸல்) அவர்கள் பணம் கொடுத்து பேரீச்சம் பழங்களை வாங்கும்படிப் பணித்தார்கள். இவ்வாறு பணம் கொடுத்து வாங்கும்போதும் கொடுக்கும்போதும் விலையில் ஏற்ற இறக்கம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. நிர்ணயமான விலையில் கொடுக்கல் வாங்கல் நிகழும்.

 

(* ஸாஅ என்பதற்கு இரண்டு கையளவு என்று பொருள்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்