மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

வழித்துணைச் சாதனங்களும் வாகனமும்..!
* மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஜூன் 16-30





நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மாண்பும் வல்லமையும் நிறைந்த அல்லாஹ் கூறுகின்றான்: ‘நான் அடியானுக்கு உடல் நலத்தை வழங்கினேன். மேலும் வசதி வாய்ப்பு களையும் தந்தேன். (இந்த அருள்வளங்கள் வழங்கப்பட்ட நிலையிலும்) ஐந்தாண்டுகள் கடந்தன. அவன் என்னை நோக்கி வரவே இல்லை. எனவே அவன் ஏதுமில்லாதவன் ஆவான்.’


அறிவிப்பாளர் : அபூஸயீத் குத்ரி(ரலி) நூல் : இப்னு மாஜா, பைஹகி

ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து வினவினார்: ‘இறைவனின் தூதரே! ஹஜ் செய்வதைக் கடமையாக்குவது எது?’ நபிகளார்(ஸல்) விடையளித்தார்கள்: ‘வழித்துணைச் சாதனங்களும் வாகனமும்’

அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி)  நூல் : திர்மிதி, இப்னு மாஜா

நபிகளார் கூறினார்கள்: ‘அரஃபா நாள் அன்று அல்லாஹ் பூமியின் வானத்தில் இறங்குகின்றான். மேலும் ஹஜ் செய்பவர்கள் குறித்து தன்னுடைய வானவர்களின் அவையில் பெருமிதம் கொள்கின்றான். மேலும் கூறுகின்றான்: ‘என்னுடைய அடியார்களைப் பாருங்கள். உடல் களைத்து, தூசு படிந்த தலைமுடியுடன், வழி நெடுக குரல் எழுப்பியவாறு என்னை நோக்கி வந்திருக்கின்றார்கள். நான் அவர்களை மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சிகளாய் ஆக்குகின்றேன்’.

இதனைக் கேட்டதும் வானவர்கள் சொல்வார்கள்: ‘அதிபதியே! அவர்களில் இன்ன மனிதரும் இருக்கின்றார். அவர் தீயவர் என்றும், பெரும் பாவி ஆவார் என்றும் அவரைக் குறித்துச் சொல்லப்படுகின்றது. இன்னும் (பாவிகளான) இன்ன மனிதரும், இன்ன பெண்ணும் அவர்களில் இருக்கின்றார்கள்’. வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் பதிலளிப்பான்: ‘நான் அவர்களையும் மன்னித்துவிட்டேன்’. நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘அரஃபா நாளைக் காட்டிலும் வேறு எந்த நாளிலும் மக்கள் மிக அதிகமான அளவில் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதில்லை’.

அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : ஷரஹ் சுன்னாஹ்



அரஃபா நாள் அன்று உலகத்தார் மீது அல்லாஹ் பரிவுடன் நடந்து கொள்கின்றான். துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள்தான் அரஃபா நாள் ஆகும். இந்த நாளில்தான் ஹஜ் பயணிகள் அனைவருமே அரஃபா மைதானத்தில் ஒன்று திரள்கின்றார்கள்.ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். இது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற திறன் கொண்டது எனில் இதயத்தில் படிந்திருக்கக்கூடிய கடைந்தெடுத்த களங்கத்தையும் முற்றாகத் துடைத்தொழித்துவிடும்.
என்றாலும் இந்த விலைமதிப்புமிக்க தருணங்களையும் நாளையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய உடனே ஹஜ் எந்தெந்த அசிங்கங்களிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் ஒருவருக்கு விடுதலை தருகின்றதோ அவற்றிலேயே மும்முரமாக இறங்கிவிடுவது வேறு கதை.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்