மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அதுவும் ஓர் அறமே!
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, நவம்பர் 16- 30, 2024



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைநம்பிக்கையாளர் ஒருவர் ஒரு மரக்கன்றை நடுகின்றார் அல்லது விதைவிதைத்து உழுதும் நீர் பாய்ச்சியும் விவசாயம் செய்கின்றார், அதன் பிறகு (அதில்) பறவைகள் கொத்தித் தின்கின்றன அல்லது மனிதர்களோ அல்லது பிற பிராணிகளோ அவற்றை உண்கின்றன எனில் அவையனைத்தும் மரத்தை நட்ட, உழுது நீரிட்டு பராமரித்த இறைநம்பிக்கை யாளரின் கணக்கில் என்றும் தொடர்கின்ற தானமாகும்.’

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (2320) முஸ்லிம் (3164)

வேளாண்மை செய்வதாலும் மரம் நடுவதாலும் வேளாண்மை செய்கின்றவருக்கும் மரம் நடுகின்றவருக்கும் பலன் கிடைப்பதுடன் மற்றவர்களும் அதனால் பலன் பெறுகின்றார்கள்.அவர் விளைச்சலை அறுவடை செய்யும்போது முழு விளைச்சலையும் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்வதில்லை. மற்றவர்களுக்கும் நன்மையான காரியங்களுக்கும் கொடுத்தும் நன்மையை ஈட்டிக்கொள்கின்றார். அல்லது தானிய வியாபாரிகளிடம் அவற்றை விற்கவும் செய்கின்றார். இதனால் அவருடைய வேளாண்மையால் அவரும் பயனடைகின்றார். மற்றவர்களும் பயனடைகின்றனர்.

அதேபோன்று அவருடைய விளைச்சலுக்காகக் காத்திருக்கின்ற வேளையிலும் அறுவடை செய்த பிறகும் அவற்றை பறவைகளும் கொத்தித் தின்கின்றன. பிற பிராணி களும் உண்கின்றன. இவ்வாறாக அவர் செய்கின்ற வேளாண்மையால் பறவைகள், பிராணிகள் போன்ற படைப்புகளும் பயன் பெறுகின்றன. இவ்வாறு பறவைகள், பிராணிகள் போன்றவற்றின் உணவுத் தேவையை நிறைவேற்றியதற்காக அதற்கான நற்கூலியை இறைவன் அந்த மனிதரின் கணக்கில் எழுதிக் கொள்கின்றான்.மேம்போக்காகப் பார்க்கும்போது பறவைகளும் பிராணிகளும் அவர் நட்ட மரங்-களிலிருந்து கனிகளையும் அவர் விவசாயம் செய்து அறுவடை செய்வதற்காக விட்டு வைத்திருந்த பயிர்களிலிருந்து தானியங்களையும் கொத்தித் தின்றது அவருக்கு இழப்பாகத் தெரியும். ஆனால் உண்மையில் அவற்றையும் அவருக்குரிய நன்மையாக இறைவன் அவருடைய கணக்கில் எழுதிக் கொள்கின்றான்.

மேலும் அவர் மரம் நட்டு அதனை வளர்த்துப் பராமரித்த பிறகு அது தொடர்ந்து ஆண்டுதோறும் கனிகளைக் கொடுக்கின்றது. இது அவர் இறந்த பிறகும் தொடர்கின்றது. அவர் இந்த உலகில் இல்லாத நிலையிலும் அவர் நட்ட மரத்திலிருந்து கனிகளையும் இலை-களையும் பறவைகளும் பிராணிகளும் மனிதர்களும் உண்டு பயன் பெறுகின்ற போது அவை-ö-யல்லாமே அவருடைய கணக்கில் நிலையான, நீடித்த தர்மங்களாகத் தொடர்ந்து எழுதப்-படுகின்றது.ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் மரம் நட்டும், பயிர் வளர்த்தும் விவசாயம் செய்கின்ற எவரும் எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் இழப்புக்குள்ளாவதேயில்லை..




உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்