மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இறைவனை அதிகமாக  நினைவு கூருங்கள்!
தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 2025 ஜனவரி 16 - 31


 

 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். மேலும்  காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துககொண்டிருங்கள்.77 அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான். அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சு கின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான்.78 அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம்  சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள்.79 மேலும் அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியைத் தயார் செய்து வைத்துள்ளான்.

 

  • அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப்  · திருவசனங்கள் : 41 - 44

 

  1. எதிரிகள் தரப்பிலிருந்து நபிகளார்(ஸல்) மீது பொய்களும் அவதூறுகளும் பழித்துரைகளும் சரமாரியாகப் பொழியப்படும் போது சத்திய மார்க்கத்துக்கு ஊறு விளைவிக்கின்ற எண்ணத்துடன் நபிகளாரை இலக்காக்கி அவதூறுப் புயல் கிளப்பப்படும் போது, அத்தகைய சந்தர்ப்பங்களில் நம்பிக்கையாளர்கள் அந்த கேடுகெட்ட பேச்சுகளைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருத்தல் கூடாது; எதிரிகள் பரப்புகின்ற ஐயங்களுக்குத் தாமும் பலியாகிவிடவும் கூடாது; எதிரிகளுக்குப் பதில் தருகின்ற விதத்தில் தாமும் பழித்துரைப்பதிலும் வசைபாடுவதிலும் இறங்கிவிடவும் கூடாது.இறைக்கட்டளைக்கான விளக்கம் இதற்கு முன்பு குறிப்பு எண் 63இல் தரப்பட்டுள்ளது. ‘காலையிலும், மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருங்கள்’ எந்நேரமும் நிலையாக என்பது இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள் என்றே பொருள். துதித்துக் கொண்டிருத்தல் என்பது வெறுமனே தஸ்பீஹ் மணிகளை உருட்டுவதாகாது; அதற்கு மாறாக அல்லாஹ்வின் தூய்மையை எந்நேரமும் பறைசாற்றிக் அதற்கு மாறாக அவர்கள் செய்ய வேண்டியதென்னவெனில், பொதுவான நாள்களைக் காட்டிலும் மிக அதிகமாக, தனிக் கவனத்தோடு அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூர வேண்டும். ‘அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்’ என்கிற கொண்டே இருப்பதாகும்.      

 

  1. இறைமறுப்பாளர்களும் இணைவைப் பாளர்களும் உங்கள் மீது கொட்டுகின்ற வெறுப்பு, குரோதம், எரிச்சல், ஆத்திரம் ஆகிய அனைத்துக்கும் காரணம் இறைவனின் தூதரின் பொருட்டு உங்கள் மீது பொழிந்திருக்கின்ற கருணைதான் என முஸ்லிம்களுக்கு உணர்த்துவதுதான் இதன் நோக்கமாகும்.  இறைத்தூதரின் மூலமாகத்தான் உங்களுக்கு ஈமான்  இறைநம்பிக்கை எனும் நற்பேறு கிடைத்தது. இறைமறுப்பு, இணைவைப்பு போன்ற இருள்களிலிருந்து வெளியேறி இஸ்லாமியப் பேரொளியின் பக்கம் உங்களால் மீள முடிந்தது. மேலும் மிக மிக உயர்வான ஒழுக்கங்களும் கூட்டுவாழ்வு தொடர்பான மாண்புகளும் மலர்ந்துவிட, அவற்றின் காரணமாக நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர்களாக உயர்ந்து நிற்கின்றீர்கள்; அந்த எரிச்சலால்தான் அந்தப் பொறாமைக்காரப் பேர்வழிகள் நபிகளார்(ஸல்) மீது தங்களின் ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இறைவனின் இந்தக் கருணையும் அருள்கொடையும் பறிபோய்விடுகின்ற அளவுக்கு நீங்கள் எந்தவொரு நடத்தையையும் மேற்கொள்ளாதீர்கள்’ என்று முஸ்லிம்களுக்கு உணர்த்தப்படுகின்றது. ‘ஸலாத்’ என்கிற சொல் ‘அலா’ எனும் முன் இடைச் சொல்லுடன் சேர்த்து இறைவன் தரப்பிலிருந்து இறையடியார்கள் தொடர்பாக ஆளப்படுகின்ற போது அது கருணை, பரிவு, கிருபை, கனிவு போன்ற பொருள்களைத் தரும். மேலும் வானவர்கள் தரப்பிலிருந்து மனிதர்கள் தொடர்பாக ஆளப்படுகின்ற போது அது கருணைக்கான இறைஞ்சுதல் என்கிற பொருளைத் தரும். அதாவது வானவர்கள் மனிதர்களுக்காக மாண்பும் உயர்வும் நிறைந்த இறைவனிடம், ‘நீ இவர்கள் மீது நல்லருளைப் பொழிவாயாக! உன்னுடைய வெகுமதிகளைக் கொண்டும் அருட்கொடைகளைக் கொண்டும் அவர்களை செழித்தோங்கச் செய்வாயாக!’ என்று பிரார்த் திக்கின்றார்கள். ‘யுஸல்லி அலைக்கும்’ என்பதற்கு ‘மாண்பும் உயர்வும் நிறைந்த அல்லாஹ் உம்மை தம் முடைய அடியார்கள் மத்தியில் நற்பெயரையும் சீரையும்  சிறப்பையும் வழங்குகின்றான்; மேலும் உம்மை எந்த உயர்ந்த படித்தரத்துக்கு உயர்த்துகின்றான் எனில் படைப்புகள் அனைத்தும் உம்முடைய புகழ் பாடத் தொடங்கி விடுகின்றன; மேலும் வானவர் களும் உம்முடைய புகழ், வாழ்த்து குறித்து பேசத் தொடங்கி விடுகின்றார்கள்’ என்றும் பொருள் கொள்ளலாம்.  

 

  1. மூலத்தில் ‘அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம்  சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள்’ என்கிற வாசகங்கள் இருக்கின்றன. இதற்கு மூன்று பொருள்கள் கொள்ள முடியும். முதலாவதாக,  மாண்பும்  உயர்வும் நிறைந்த அல்லாஹ்வே ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்கிற வாழ்த்தோடு அவர்களை  வரவேற்பான்.  அத்தியாயம்  யாஸீனில் ‘கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை கூறப்படும்’ (திருக்குர்ஆன் 36:58) எனச் சொல்லப்பட்டுள்ளது.இரண்டாவதாக, வானவர்கள் அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள். இன்னும்  சொல்லப் போனால் அத்தியாயம் அந்நஹ்லில் அவர்கள் எத்தகையவர்களென்றால்,தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்: ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக  சுவனத்தில் நுழையுங்கள்’ (திருக்குர்ஆன் 16:32) எனச் சொல்லப்பட்டுள்ளது.  மூன்றாவதாக, இவர்களே ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்வார்கள். இது அத்தியாயம் யூனுஸில் ‘இறைவா! நீயே தூய்மையானவன்’ என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும்,  ‘சாந்தி நிலவட்டும்’ என்பதே அவர்களின்  வாழ்த்தாக இருக்கும். மேலும், ‘அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!’ என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும். (திருக்குர்ஆன் 10:10)

 

 (தொடரும்)



  • தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்