மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அவை இறைவனின் கட்டளை!
16-28 பிப்ரவரி 2025


நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும்,82 அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும்,83 சுடர் வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம். எனவே, எவர்கள் (உம்மீது) நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து திண்ணமாக, பெரும் வெகுமதி இருக்கின்றது எனும் நற்செய்தியினை அறிவிப்பீராக! நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக மணவிலக்குச் செய்துவிட்டால்,84 நிறைவற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பிவைத்துவிடுங்கள்.

· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனங்கள் : 45-49

82. இறைநம்பிக்கை, நல்லறங்கள் ஆகியவை நன்மைகளையே தரும் என்றும் இறைமறுப்பும் தீய செயல்களும் மோசமான கதிக்கே இட்டுச் செல்லும் என்றும் ஒருவர் சுயமாக நற் செய்தியைச் சொல்வதும் எச்சரிப்பதும் வேறு; நற்செய்தியைச் சொல்பவராக, எச்சரிப்பவராக இறைவனிடமிருந்து ஒருவர் அனுப்பப்படுவது வேறு. இந்த இரண்டுக்கும் இøடயிலான வேறுபாட்டை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வ வல்லமையும் மாண்பும் நிறைந்த இறைவனின் தரப்பிலிருந்து ஒருவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுகின்றார் எனில் அவர் விடுக்கின்ற எச்சரிக்கையும் நற்செய்தியும் அதிகாரம் கொண்டவையாய் ஆகிவிடுகின்றன. மேலும் அவருடைய எச்சரிக்கைகளும் நற்செய்திகளும் சட்ட அந்தஸ்தைப் பெற்று விடுகின்றன. அவர் இன்ன நல்லறம் செய்தால் நன்மை கிடைக்கும் என ஏதேனுமோர் நற்செய்தி கூறுகின்றார் எனில் அது இறைவன் அந்த நல்லறத்தை விரும்பத்தக்கதாக, நற்கூலி தரத்தக்கதாக அறிவிக்கின்றான் என்றும் எனவே அதனைச் செய்வது கடமை அல்லது வாஜிப் அல்லது விரும்பத்தக்கது என்றும் அந்த அறத்தைச் செய்பவனுக்குத் திண்ணமாக நற்கூலியும் நன்மையும் கிடைத்தே தீரும் என்றும் அதற்குப் பொருள் ஆகும். அவர் ஏதேனுமோர் செயலினால் விளை யக் கூடிய தீய கதி குறித்து எச்சரிக்கின்றார் எனில் அது இறைவன் அந்தச் செயலை செய்ய வேண்டாம் என்று தடை செய்கின்றான் என்றும், எனவே ஐயத்திற்கிடமின்றி அது ஒரு பாவச் செயலாகும்; ஹராமான செயலாகும் என்றும் திண்ணமாக அதனைச் செய்பவனுக்குத் தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதற்குப் பொருள் ஆகும். இந்த அந்தஸ்தும் சிறப்பும் இறைவனின் தரப்பிலிருந்து நியமிக்கப்படாத சாமான்யர் விடுக்கின்ற எச்சரிக்கைக்கும் நற்செய்திக்கும் ஒருபோதும் இருப்பதில்லை.

83. இங்கும் ஒரு பொதுவான அழைப்பாளரின் பரப்புரைக்கும் இறைத்தூதரின் பரப்புரைக்கும் இடையில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட அதே வேறுபாடு இருக்கின்றது. அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற பணியை எந்தவொரு அழைப்பாளரும் மேற்கொள்ள முடியும். ஆனால் அவர் அந்தப் பணிக்காக அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நியமிக்கப்பட்டவராக இருப்பதில்லை.

அதற்கு நேர் மாறாக இறைத்தூதரோ அல்லாஹ்வின் அனுமதியோடு (Sanction) அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காகக் களம் இறங்குகின்றார். நபியின் அழைப்பு வெறுமனே பரப்புரையாக மட்டும் இருப்பதில்லை. அதற்கும் மேலாக அவருடைய அழைப்புக்குப் பின்னால் அவரை அனுப்பிய அகிலங்களின் அதிபதியின் ஆணையிடும் அதிகார பின்புலம் இருக்கின்றது. இதனால்தான் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பாளரை எதிர்த்து நிற்பது இறைவனுக்கு எதிரான போராக அறிவிக்கப்படுகின்றது. உலக அரசாங்கங்களில் அரசுப் பணியில் இருக்கின்ற அரசு ஊழியர் அரசுக்கு எதிராக இருப்பது அரசுக்கு எதிரான போர் எனக் கருதப்படுவதைப் போன்றுதான் இதுவும்.

84. நிக்காஹ் எனும் சொல் திருமண ஒப்பந்தத்தைத்தான் குறிக்கும் என்பதை இந்த வாசகம் வெளிப்படையாக திட்டவட்டமாக உணர்த்துகின்றது. சொல் அகராதியில் வல்லமை பெற்ற மொழியியல் அறிஞர்கள் அரபு மொழியில் நிக்காஹ் எனும் சொல்லின் உண்மையான பொருள் என்ன என்பது குறித்து பெரும் அளவில் விவாதித்திருக்கின்றார்கள். ஒரு சாரார் இது திருமண ஒப்பந்தம், உடலுறவு ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல் என்று வாதிடுகின்றார்கள். இன்னும் சிலரோ பொருளின் அடிப்படையில் இவை இரண்டும் ஒரே பொருளைத் தருபவை தாம் என்கிறார்கள். மூன்றாவது சாராரோ இதன் உண்மையான பொருள் திருமண ஒப்பந்தம்தான் என்றாலும் உடலுறவை உணர்த்துவதற்கும் உருவகச் சொல்லாக இது ஆளப்படுகின்றது என் கிறார்கள். நான்காவது தரப்பினரோ இதன் உண்மையான பொருளே உடலுறவுதான் என்றாலும் திருமண ஒப்பந்தத்தை உணர்த்துகின்ற உருவகச் சொல்லாகவும் இது ஆளப்படுவதுண்டு என்றும் சொல்கின்றார்கள். எல்லாத் தரப்பினரும் தம்முடைய நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்க்கின்ற விதத்தில்

அரபு இலக்கியங்களிலிருந்து சான்றுகளைப் பட்டியலிடவும் முயன்றிருக்கின்றார்கள். ஆனால் ராகிப் இஸ்ஃபஹானி அவர்கள் ஆணித்தரமாகவும் வலுவாகவும், ‘நிக்காஹ் எனும் சொல்லின் உண்மையான பொருள் திருமண ஒப்பந்தம் ஆகும். பிறகு இந்தச் சொல்லை உடலுறவை உணர்த்துகின்ற உருவகச் சொல்லாகவும் ஆளத் தொடங்கினார்கள். இதன் உண்மையான பொருள் உடலுறவு என்பதற்கும் திருமண ஒப்பந் தத்தை உணர்த்துகின்ற உருவகச் சொல்லாக வும் இது ஆளப்படுவதற்கும் சாத்தியமே இல்லை’ என்று ஓங்கி முழங்கியிருக்கின்றார். ஏனெனில் அரபி மொழியிலும் சரி, உலகத்தின் எந்தவொரு மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி உடலுறவை உணர்த்துவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆபாசமான சொற்களாய், கொச்சையானவையாய்த் தாம் இருக்கின்றன. எந்தவொரு கண்ணியமான மனிதரும் பண்பாடு மிக்கவர்களின் அவையில் அந்தச்சொற்களைப் பயன்படுத்தவே விரும்ப மாட்டார். அந்தச் செயலை உணர்த்துகின்ற சொல்லாக அது உண்øமயில் இருக்க, எந்தவொரு சமூகமும் திருமணத்தைக் குறிப்பிடுகிற உருவகச் சொல்லாக அதனை பயன்படுத்த மாட்டாது. உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் திருமணத்துக்கு மிகவும் கண்ணியமான சொற்களைத்தாம் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

குர்ஆனையும் நபிவழியையும் பொறுத்த வரை நிக்காஹ் எனும் சொல் ஒரு ஆதாரச் சொல்லாகத்தான் இருக்கின்றது. அது வெறுமனே திருமண ஒப்பந்தத்தைக் குறிக்கும். அல்லது ஒப்பந்தம் செய்து முடித்த பிறகான உடலுறவை அது குறிக்கும். ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாமல் வெறுமனே உடலுறவை உணர்த்துவதற்கு அந்தச் சொல் எந்த இடத்தி லும் ஆளப்பட்டதில்லை. அதுபோன்றதிருமண ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில் உடலுற வில் ஈடுபடுவதை குர்ஆனும் நபி மொழியும் விபச்சாரமாக, தகாத உறவாக சிஃபாஹ் என்று சொல்வார்களே தவிர, நிக்காஹ் அல்ல.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்