மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

அவரே அதிக உரிமை உடையவர்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 16-28 பிப்ரவரி 2025


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பாகப் பிரிவினை செய்து தரப்படாத, பிரிக்கப்படாத, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் மீது அது தோப்பாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி ஷûஃப்ஆ முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை நிறுவப்பட்டுள்ளது.

இது போன்ற நிலத்தில் எந்தவொரு பங்காளிக்கும் பிற பங்காளிக்குத் தகவல் அளிக்காமல் தம்முடைய பங்கை விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. அந்த இரண்டாவது பங்காளி விரும்பினால் அதை வாங்கிக் கொள்வார்; விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுவார். (மூன்றாமவருக்கு அதனை விற்பதற்கு அனுமதி கொடுத்து விடுவார்).

எவரேனும் ஒருவர் தம்முடைய பங்காளிக்கு அறிவிக்காமல் தன்னுடைய பங்கை விற்றுவிட்டாலும் (அந்த விற்பனையான பங்கை விலைக்கு வாங்குவதற்கு) அந்த இரண்டாவது பங்காளியே அதிக உரிமை உடையவர் ஆவர்.’

அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி) நூல் : முஸ்லிம்

ஷûஃபஅ என்கிற சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல் தான் ஷûஃப்ஆ ஆகும். ஷûஃப்ஆ என்பதற்கு சேர்த்து வைத்தல், இணைத்து வைத்தல் என்று பொருள். ஒரு நிலம் விற்கப்படுகின்ற போது அதனை விலைக்கு வாங்குகின்ற உரிமை மற்றெல் லோரை விடவும் அந்த நிலத்தின் பங்காளிக்கே அதிக உரிமை இருக்கும். அல்லது அந்த நிலத்தின் அருகில் இருப்பவருக்கு அதிக உரிமை இருக்கும். நிலத்தை விலைக்கு வாங்குவதில் ஒருவருக்கு இருக்கின்ற இந்த முன்னுரிமைதான் ஷரீஅத்தில் ஷûஃப்ஆ என்று சுட்டப்படுகின்றது.

தொடர்புடைய நிலத்திலோ, வீட்டிலோ அல்லது தோப்பிலோ எவருக்குப் பங்கு இருக்கின்றதோ அவருக்கு மட்டுமே இந்த முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை இருக்கின்றதே தவிர தொடர்புடைய நிலத்திற்கோ, வீட்டுக்கோ அல்லது தோப்புக்கோ பக்கத்தில் இருப்பவருக்கு இந்த உரிமை இல்லை என்று இமாம் ஷாஃபி, இமாம் மாலிக் ஆகியோர் கருத்துரைத்துள்ளனர்.

ஆனால் இமாம் அபூ ஹனீஃபா அவர்களைப் பொறுத்தவரை தொடர்புள்ள சொத்தில் பங்காளியாக இருப்பவரைப் போலவே தொடர்புடைய சொத்துக்குப் பக்கத்தில் வாழும் அண்டை வீட்டாருக்கும் இந்த உரிமை உண்டு. முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை அண்டை வீட்டாருக்கும் உண்டு என்பது ஆதாரப்பூர்வமான, சரியான நபிமொழிகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. எனவே அண்டை வீட்டாருக்கு இருக்கின்ற இந்த உரிமையை மறுத்து விட முடியாது என்றே இமாம் அபூ ஹனீஃபா கருத்துரைத்துள்ளார்.

விற்பனையாகவிருக்கின்ற நிலம் அல்லது வீட்டின் பங்காளியாக இருப்பவருக்கே ஷûஃப்ஆ முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை உண்டு. அதாவது அவர் இருக்கும்போது வேறு எவரும் அந்தச் சொத்தை விலை கொடுத்து வாங்கி விட முடியாது. முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை என்பது இதுதான்.

அதே சமயம் அவர் தம்முடைய உரிமையை விட்டுக்கொடுக்கின்றார் எனில், தொடர்புடைய சொத்தில் சொத்துரிமை உள்ள பங்காளியாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து பயன் ஈட்டுகின்ற உரிமையில் பங்காளியாக இருப்பவருக்கு (எடுத்துக்காட்டாக போக்குவரத்துக்கான உரிமை, தண்ணீர் இறைத்துச் செல்கின்ற உரிமை, தண்ணீரை வெளியேற்றுகின்ற வழியில் உரிமை) இந்த முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை சேரும்.

அவரும் தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுப்பாரேயானால் அத்தகைய நிலையில் இந்த முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை அண்டை வீட்டாரைச் சாரும். அவரும் தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்து விட்டால் வேறு எவருக்கும் இந்த முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை சேராது. இதிலிருந்து இந்த முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை நிலம், தோப்பு, வீடு போன்ற அசையா சொத்துகளின் விற்பனையோடு மட்டுமே தொடர்புடையது என்பது தெளிவாகின்றது. அசையும் பொருள்களை விற்பனை செய்யும் எவருக்குமே முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை இருக்காது. இந்தச் சலுகை பற்றிய சட்டம் அப்போது பொருந்தாது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ள உரிமை கிடையாது. அதற்கு மாறாக முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையிலான விவகாரத்திலும் இந்த உரிமை கருத்தில் கொள்ளப்படும்.

இரண்டு பேருக்குச் சொந்தமான சொத்து ஒன்றையோ வீட்டையோ ஒருவர்விற்க விரும்பினால் அவர் முதலில் தன்னுடைய அந்த எண்ணத்தை சக பங்காளிக்கு அறிவிக்க வேண்டும். அதனை விலைக்கு வாங்க அவருக்கு விருப்பம் இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். விருப்பம் இருந்தால் அதனை விற்பதில் அவருக்கே முன்னுரிமை தர வேண்டும். இல்லாத பட்சத்தில் தான் பிறருக்கு அதனைவிற்க முனைய வேண்டும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்