மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

மன்னிப்பவரே மகத்தான மனிதர்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஜீலை 16-31,2025



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மூஸா பின் இம்ரான்(அலை) அவர்கள் இறைவனிடம் வினவினார்கள்: ‘என் அதிபதியே! உன்னுடைய அடியார்களில் உன்னுடைய பார்வையில் மிக அதிகக் கண்ணியத்துக்கு உரியவர் யார்?’ இறைவன் பதிலளித்தான்: ‘சக்தி பெற்றிருந்த நிலையிலும் மன்னித்து விடுகின்ற மனிதன்(தான் மற்றெல்லா மனிதர்களைவிடவும் கண்ணியத்துக்குரி யவன்)’.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : பைஹகி


உண்மையில் மனிதன் ஓர் ஒழுக்கப் படைப்பு ஆவான். அவனுடைய ஒழுக்கம் முழுமை பெறுகின்றபோதுதான் அவன் முழுமையடைகின்றான். ஒழுக்கத் தளத்தில் அவன் எந்த அளவுக்கு உயர்ந்து நின்கின்றானோ அந்த அளவுக்கு அவன் இறைவனாலும் அதிகக் கண்ணியமானவனாக அறிவிக்கப்படுவான். அவனுடைய ஒழுக்கத்  தரத்தைப்  பொருத்தே  படைப்புகள்  மத்தியிலும் அவன் மதிக்கப்படுவான். அவனுடைய ஒழுக்க நிலையின் அடிப்படையில்தான் பிற மனிதர்கள் மத்தியிலும் அவன் மீதான மரியாதை தோன்றும்.

ஒருவர் ஒழுக்கத்திலும் குணத்திலும் உயர்ந்த படித்தரத்தை அடைந்திருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வது எப்படி என்பதற்கான விடை இந்த நபிமொழியில் தரப்பட்டுள்ளது. பழிவாங்குகின்ற, தண்டிக்கின்ற சக்தியும் வலிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும் அவர் மற்றவர்களின் தவறுகளையும் பிழைகளையும் பொறுத்துக்கொள்கின்றார்; தமக்குக் கேடு விளைவித்தவர்களை மன்னித்துவிடுகின்றார் எனில், அவர் ஒழுக்கத் தளத்தில் உயர்ந்து நிற்கின்றார்;  மிக  உயர்ந்த  படித்தரத்தை  எய்தியிருக்கின்றார்; இறைவனிடத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றார் என்றே அதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்