மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

இஸ்லாம்

தலைமையும் கீழ்ப்படிதலும்!
* மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் * தமிழில் : அபூ ஹானியா , 16-31 July 2022


நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்: "எந்த மனிதர் கீழ்ப்படிந்து நடத்தலைத் தவிர்க்கின்றாரோ அவர் மறுமை நாளில் எந்த நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பார் எனில் அவரிடம் (தம்முடைய செயலுக்கு ஆதரவாக) எந்தவொரு ஆதாரமும் சான்றும் இருக்காது.1 உறுதிப் பிரமாணம் செய்யாத நிலையில் ஒருவர் மரணமடைகின்றார் எனில் அவருடைய மரணம் அசத்தியத்தைப் பின்பற்றுகின்ற நிலையில் நிகழ்ந்த மரணமாகும்.'2 அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல் : முஸ்லிம்

1. இஸ்லாத்தில் கூட்டமைப்பாக கட்டுக்கோப்புடன் வாழ்வதற்கு அடிப்படையான, முதன்மையான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பைத் தவிர்த்து விட்டு இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அமைதி நிலைநிறுத்தப்படுவதும், இஸ்லாம் வழங்குகின்ற வளங்களும் மலர்ச்சிகளும், முஸ்லிம் சமுதாயத்தின் வலிமை ஆகிய அனைத்துமே இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆற்றலையும் நிலைத்தன்மையையும் உறுதியையுமே சார்ந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் இஸ்லாமிய அரசின் நிர்வாகிக்குக் கீழ்ப்படிந்து நடப்ப தைத் தவிர்க்கின்றார் எனில் அவர் உண்மையில் இஸ்லாம் பெரிதும் கட்டமைக்க, வலுப் படுத்த விரும்புகின்ற கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்குபவர் ஆகின்றார்.

இப்படிப் பட்ட மனிதர் தன்னுடைய இந்த குற்றச் செயலை நியாயப்படுத்துகின்ற விதத்தில் இறைவனிடம் எதனையும் சொல்ல முடியாமல் திணறுவார். இறைவனிடம் அவர் ஒரு குற்றவாளியாகத்தான் நிறுத்தப்படுவார். மேலும் அந்த நாளில் அந்த இடத்தில் அவருக்காகப் பரிந்துரைத்து அவருடைய இந்தக் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து அவரை விடுவிக்கக்கூடியவர் எவரும் இருக்க மாட்டார்.

2. ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய நெறிப்படி தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அவர் கூட்டு வாழ்வையும் கூட்டமைப்பையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்; அதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்றே பொருள். தமக்கென ஓர் அமீர்  தலைவர் இல்லையெனில் முதல் வேலையாகத் தமக்கென தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதும் அவருடைய தலைமையில் தம்முடைய கூட்டு வாழ்வைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியதும், தம்முடைய விவகாரங்கள் அனைத்தையும் குறிப்பாக கூட்டு விவகாரங்களை தலைவரின் தலைமையிலும் அவருடைய வழிகாட்டுதலின் படியும் வகுத்துக் கொள்ள வேண்டியதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கடமையாகும். முஸ்லிம் சமுதாயம் இந்த உலகத்தில் மேலோங்கி இருப்பதையே இறைவன் விரும்புகின்றான்.

உலகத்தில் மேலோங்கி எழுச்சி பெற வேண்டுமெனில் கட்டுக்கோப்பாக இயங்குகின்ற கூட்டமைப்பை நிறுவி அதனை வலுப்படுத்துதல் இன்றியமையாததாகும். அது மட்டுமின்றி இந்தச் சமுதாயம் எந்த உயரிய, மேலான இலட்சியங்களுக்காக எழுப்பப்பட்டிருக்கின்றதோ அந்த இலட்சியங்களை வென்றெடுப்பதும் ஒரு தலைமையின் கீழ் கட்டுக் கோப்பாக இயங்குகின்ற கூட்டமைப்பு இல்லாமல் சாத்தியமில்லை.

கொடுமைகளையும் சர்வாதிகாரத்தையும் வரம்பு மீறலையும் முற்றாக அழித்தொழித்து சத்திய மார்க்கத்தை நிலை நிறுத்துதல் தாம் இங்கு உயரிய, மேலான இலட்சியங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்