மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை

பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்..!
· தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 01-15 August 2022


மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெற வேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத்  அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்.60

அல்லாஹ்தான்61 உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களுக்கு உணவளித்தான்.62 பின்னர் அவன் உங்களை மரணமடையச் செய்கின்றான்; பிறகு மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். என்ன, நீங்கள் இணைவைக்கும் தெய்வங்களில் யாராவது இவற்றுள் எதையாவது செய்பவர் இருக்கின்றாரா?63 அவன் தூய்மையானவன்; இம்மக்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களைவிட்டு அவன் மிக உயர்ந்தவன். மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும்.64 (நபியே! இவர்களிடம்) கூறும்: "பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள். முன்பு வாழ்ந்து சென்ற மக்களின் கதி என்னவாயிற்று என்பதை! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்.'65

எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக; அல்லாஹ்விடமிருந்து எவராலும் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாத ஒருநாள் வருமுன்!66 அந்நாளில் மக்கள் பிளவுண்டு, தனித்தனியே பிரிந்து சென்றுவிடுவர். எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும்.67 மேலும், எவர்கள் நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்காகவே (வெற்றியின் வழியைத்) தயார்படுத்துகின்றார்கள்; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து கூலி வழங்குவதற்காக!  திண்ணமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.

· அத்தியாயம் 30 அர்ரூம் · திருவசனங்கள் : 3945

60. எந்த அளவுக்கு அது பெருகும் என்பதற்கு எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் எந்த அளவுக்குத் தூய்மையான எண்ணத்துடனும் எந்த அளவுக்குத் தன்னலம் பாராமலும் எந்த அளவுக்கு இறை உவப்பைப் பெறுவதற்கான தீவிரமான வேட்கையுடனும் இறைவழியில் பொரு ளைச் செலவிடுகின்றாரோ அந்த அளவுக்கு இறைவனும் அவருக்கு அதிகமதிகமாக நன்மைகளை அளிப்பான். ஒருவர் இறைவழியில் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை அளித்தாலும் இறைவன் அதனை வளர்த்து உஹத் மலைக்குச் சமமாக ஆக்கி விடுகின்றான் என்று நபிமொழி ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

61. இங்கிருந்து இறைமறுப்பாளர்களுக் கும் இணைவைப்பாளர்களுக்கும் விளக்குவதற்காக ஏகத்துவம், மறுமை ஆகிய கருத்தோட்டங்களின் பக்கம் உரைத்தொடர் மீண்டும் திரும்பிவிடுகின்றது.

62. உங்களுக்கு உணவளிப்பதற்காக பூமியில் அனைத்து விதமான வளங்களையும் வழிவகைகளையும் ஏற்படுத்திவிட்டான். இந்த வளங்களின் சுழற்சியின் மூலமாக ஒவ்வொரு மனிதருக்கும் தமக்குரிய பங்கு கிடைத்துவிடுகின்ற வகையிலான ஏற்பாடு களைச் செய்துவிட்டான்.

63. நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக் கின்ற இணை தெய்வங்களில் ஒருவன்கூட படைப்பாளன் அல்லன்; ஒருவன்கூட உணவளிப்பவன் அல்லன்; ஒருவனுக்குக்கூட வாழ்øவயும் மரணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கின்ற வல் லமை இல்லை; மேலும், மரணமடைந்த பிறகு எவரையும் உயிர் பெறச் செய்கின்ற ஆற்றலும் அவற்றில் ஒன்றுக்கும் இல்லை. ஆக, அவர்களிடம் அப்படியென்னதான் பெரிய சிறப்பு இருக்கின்றது என்று நீங்கள் அவர்களை இணைதெய்வங்களாய் ஆக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்?

64. ரோமானியர்களுக்கும் பாரசீகர்களுக் கும் இடையில் மூண்டிருந்த, ஒட்டு மொத்த மத்தியக் கிழக்கையும் தன்னுடைய நெருப்பால் பற்ற வைத்த அந்தப் போர் குறித்து மீண்டும் சுட்டிக்காட்டப்படுகின்றது. "மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ' என்பது இணைவைப்பு, இறை மறுப்பு ஆகிய கோட்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதன் விளைவாகவும், மறுமை யைப் புறக்கணிப்பதாலும் தவிர்க்க முடியாத விளைவாக மனிதனின் ஒழுக்கத்திலும் நடத்தையிலும் வெடிக்கின்ற பெரும்பாவங்கள், சீர்கேடுகள், தீய நடத்தைகள், கொடுமைகள், அக்கிரமங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். "அதனால் அவர்கள் விலகிவிடக்கூடும்' என்பதற்குப் பொருள், "இறைவன் மனிதர்களை மறுமையில் தண்டிப்பதற்கு முன்பாக இந்த உலகத்திலேயே அவர்களுக்கு  அவர்களின் ஒட்டுமொத்த செயல்களின் விளைவைக் காண்பிக்காவிட்டாலும்  அவர்களின் சில தீய செயல்களின் தீய விளைøவக் காண்பித்துவிடுகின்றான். அவற்றைப் பார்த்து அவர்கள் சத்தியத்øதப் புரிந்துகொள்வார்கள்; தங்களுøடய சிந்தனைகளின் தவற்றை உணர்ந்துகொள்வார்கள்;

இவ்வாறாக காலங்காலமாக இறைத்தூதர்கள் எந்தத் தூய்மையான கோட்பாட்டை மக்க ளுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அதற்கும் மேலாக மனிதனின் நடத்தையையும் செயல்களையும் சரியான அடித்தளங்களில் நிலை நிறுத்த உதவுகின்ற ஒரே சித்தாந்தமாக எந்தக் கோட்பாடு இருக்கின்றதோ அந்தக் கோட் பாட்டின் பக்கம் அவர்கள் திரும்பிவிடக் கூடும்' என்பதாகும். இதே கருத்து குர்ஆனில் இன்னும் பல இடங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எடுத் துக்காட்டாக, அத்தியாயம் 9:126; அத்தியாயம் 13:21; அத்தியாயம் 32:21; அத்தியாயம் 52:47 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்.

65. பேரழிவை ஏற்படுத்துகின்ற வகை யில் ரோமானியர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையில் நடந்து வருகின்ற போர் ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. இதற்கு முன்பும் எப்படியெல்லாம் மிகப்பெரும் சமூகங்கள் அழித்தொழிக்கப்பட்டன என்பது பற்றிய பதிவுகளால் கடந்த கால வரலாறு நிறைந்து கிடக்கின்றது. மேலும் எந்தத் தீய செயல்களின் விளைவாக இந்தச் சமூகங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டார்களோ அந்தச் செயல் களின் ஆணிவேராக இணைவைப்புதான் (இன்று எதிலிருந்து விலகியிருக்கும்படி உங்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றதோ அதே இணைவைப்புதான்) இருந்தது.

66. அந்த நாள் வருவதை இறைவனும் தடுக்க மாட்டான். மற்றவர்கள் ஏதேனும் ஒரு வகையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியத்தையும் அவன் விட்டுவைக்கவில்லை.

67. இது ஒரு கருத்துச் செறிவுமிக்க வாசகம் ஆகும். இறைமறுப்பாளர்களை அவர்களின் இறைமறுப்பின் விளைவாக சூழ்ந்துகொள்ளக்கூடிய ஊறுகள், கேடுகள் அனைத்தும் இந்த வாசகத்தில் அடக்கப்பட்டுவிட்டுள்ளது. கேடுகளையும் ஊறுகளையும் விவரிக்கின்ற விரிவான பட்டியல்கூட இந்த அளவுக்கு அனைத்தையும் தழுவியதாக இருக்க முடியாது.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்