மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

இஸ்லாம்

தரம் தாழ்ந்த செயல்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் * தமிழில் : அபூ ஹானியா, 01-15 August 2022


நபி(ஸல்) கூறினார்கள்:

"மனிதன் தன்னுடைய மனைவியுடன் உடலுறவு கொண்டிருக்க, மேலும் அவளுடைய மனைவி அவனுடன் உறவு கொண்டிருக்க அவன் அது பற்றிய இரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிவதுதான் மறுமைநாளில் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அமானிதத்தில் (நம்பிக்கையில்) மோசடி செய்த செயலாகக் கருதப்படும்.

மேலும் மற்றுமோர் அறிவிப்பில் "(இவ்வாறு தன் மனைவியுடனான உடலுறவு தொடர்பான இரகசியங்களை மற்றவர்களிடம் அம்பலப் படுத்திக் கொண்டு திரிபவன்தான்) அல்லாஹ்விடத்தில் மறுமை நாளில் மிக மிக மோசமான தீய மனிதன் ஆவான்' என்று சொல்லப் பட்டுள்ளது.'

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி), நூல் : முஸ்லிம்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான இரகசியங்களாக உடலுறவு தொடர்பான விவகாரங்கள் இருக்கின்றன. அவை மிகப் பெரும் அமானிதங்களாக இருக்கின்றன. இந்த அமானிதத்தைக் கட்டிக் காப்பது, எவருக்கும் தெரியாமல் பாதுகாப்பது கணவன் மீதான கடமையாகும். கணவன் இந்த அமானிதத்தைப் பேணி நடக்கவில்லை எனில், தனக்கும் தன் மனைவிக்கும் இடையிலான இரகசியங்களையும் உடலுறவு தொடர்பான விவரங்களையும் மற்றவர்களிடம் அம்பலப்படுத்திக் கொண்டு திரிகின்றான் எனில் அது கடைந்தெடுத்த மோசடி ஆகும்.

மறுமை நாளில் அவன் இது குறித்து மிக மிகக் கடுமையான விசாரணைக்கு ஆளாவான். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உடலுறவு தொடர்பான விவரங்கள் தனிப்பட்ட விவரங்களாக இருக்கின்றன. அவற்றை மற்றவர்கள் முன்னால் வெளிப்படுத்துவது தார்மிக ரீதியாக சரியல்ல. ஒழுக்கக் கேடான, இழிவான செயலாகத்தான் அது பார்க்கப் படும்.

அதனையும் தாண்டி அது ஷரீஅத்தின் பார்வையில் மிகவும் கடுமையான கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரிய செயல் ஆகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்