மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

முழுமை

காற்றெனும் சாட்சி!
16 - 31 August 2022


மேலும், நற்செ#தி கூறுவதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்;68 எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை
சுவைக்கச் செ#வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும்,69 நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்காகவும்,70 அவனுக்கு நீங்கள்
நன்றி செலுத்துவோரா#த் திகழ்வதற்காகவும்தான்! மேலும், நாம் உமக்கு முன்னர் தூதர்களை
அவரவருடைய சமூகத்தாரிடையே அனுப்பினோம். அவர்கள் அம்மக்களிடம் தெளிவான
சான்றுகளைக் கொண்டு வந்தார்கள்.71 பின்னர், எவர்கள் குற்றம் புரிந்தார்களோ72 அவர்களிடம்
நாம் பழிவாங்கினோம். நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம் மீது கடமையாக இருந்தது.
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான்; அது மேகத்தைக் கிளப்பிவிடுகின்றது.
பிறகு அவன் நாடும் விதத்தில் மேகங்களை வானத்தில் பரப்புகின்றான். அவற்றைப்
பல துண்டுகளா#ப் பிரிக்கின்றான். பின்னர் அவற்றுக்கிடையில் இருந்து மழைத்துளிகள்
உதிர்ந்து விழுவதை நீர் காண்கின்றீர். தன் அடிமைகளில் தான் நாடுபவர்கள் மீது அவன்
இந்த மழையைப் பொழிவிக்கும் போது அவர்கள் உடனே மகிழ்ந்து போ#விடுகின்றார்கள்.
ஆனால், அவர்கள் அது பொழியப்படுவதற்கு முன் நிராசையடைந்து விட்டிருந்தார்கள்.
அல்லாஹ்வுடைய அருளின் பலனைப் பாருங்கள். இறந்து கிடக்கும் பூமியை அவன் எவ்வாறு
உயிர்ப்பிக்கின்றான்?73 திண்ணமாக, அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவனாவான்.
மேலும், அவன் யாவற்றின்மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். மேலும், நாம் காற்றை
அனுப்பி, அதனால் அவர்களின் பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் காண்பார்களானால்,74 அப்பொழுது அவர்கள் நன்றி கொன்றவர்களாகி விடுவார்கள்.75

68. கருணை மழை பொழியப்போகின் றது என்கிற நற்செ#தியை உணர்த்து வதற்காக..!

69. கப்பல்களைச் செலுத்துவதற்குத் துணை நிற்கும் வேறொரு வகையான காற்றுகள் குறித்தே இங்கு சொல்லப்படுகின்றது. பண்டையக் காலத்தில் கப்பல்கள், படகுகள் போன்றவை பெரும்பாலும் சாதகமான காற்றுகளைச் சார்ந்தே இயக்கப் பட்டன. எதிர்காற்றோ அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகத்தான் பார்க்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பார்க்கின்றபோது மழையைக் கொண்டு வருகின்ற காற்று குறித்துச் சொன்ன பிறகு இந்த வகையான காற்றுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது இறைவனிடமிருந்து அருளப்பட்ட ஒரு தனி அருள்வளத்தை உணர்த்துவதா# இருக்கின்றது.

70. வணிகத்திற்காகப் பயணம் செ# யுங்கள்.

71. ஒரு வகையான சான்றுகளோ பேரண்டத்தில் திரும்பும் திசையெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மனிதர்கள் தங்களின் வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்கின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் காற்றுகளின் சுழற்சி. அதைக் குறித்து இதற்கு முந்தைய வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது இன்னோர் வகையான சான்றுகள் குறித்துச் சொல்லப்படுகின்றது. இறைத்தூதர்கள் தங்களின் அசாதாரணமான, தூ#மையான நடத்தையின் வடிவிலும், இறைவாக்கின் வடிவிலும், அற்புதங்களின் வடிவிலும், மனித சமூகங்களில் ஏற்படுத்திய உயிர்த்துடிப்புள்ள தாக்கங்களின் வடிவிலும் கொண்டு வந்த அத்தாட்சிகள்தாம் அவை.

இந்த இரண்டு வகையான சான்றுகளும் ஒரே உண்மையைத்தான் சான்றுபகர்கின்றன. அதாவது இறைத்தூதர்கள் போதிக்கின்ற ஏகத்துவம்தான் சத்தியமானது என்பதுதான் அந்த உண்மை. இந்த இரு வகையைச் சேர்ந்த சான்றுகள் ஒவ்வொன்றும் மற்றதை உறுதிப்படுத்துவதா# இருக்கின்றன. பேரண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கின்ற சான்றுகள் இறைத்தூதர்களின் போதனைகள்தாம் சத்திய மானவை என்பதற்குச் சான்று பகர்கின்றன. பேரண்டத்தில் இருக்கின்ற சான்றுகள் எந்த உண்மைகளைச் சுட்டிக்காட்டி உணர்த்துகின்றனவோ அவற்றின் உண்மை நிலையை இறைத்தூதர்கள் கொண்டு வருகின்ற சான்றுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

72. இவ்விரு வகையான சான்றுகளின் பக்கம் ஏறெடுத்தும் பார்க்காமல், கண்மூடித்தனமாக ஏகத்துவத்தை மறுப்பதில் நிலைத்து இருந்தவர்கள்; மேலும் இறைவனுக்கு எதிராகக் கலகத்துக்கு மேல் கலகம் செ#தவாறே இருந்துவிட்டவர்கள்.

73. இங்கு அடுத்தடுத்து தூதுத்துவம் குறித்தும் மழையைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்ற விதத்தில் நுட்பமான குறிப்பு ஒன்று இருக்கின்றது. அதாவது மழையின் வருகை உலக வாழ்வுக்கு மிகப் பெரும் அருள்வளமாக ஆகிவிடுவதைப் போன்றே இறைத்தூதர்களின் வருகையும் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு மிகப்பெரும் அருள்வளமா# ஆகிவிடுகின்றது. வானத்திலிருந்து மழை அருளப்பட்டதும் செத்துக்கிடக்கின்ற நிலம் திடீரென்று உயிர்த்துடிப்புடன் சிலிர்த்தெழுகின்றது; பச்சைப் பசேலென்று வயல்கள் செழிக்கத் தொடங்கிவிடுகின்றன. அதே போன்று வானிலி ருந்து அருளப்படுகின்ற வஹீ ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய களங்களில் வெறுமை யாகக் கிடக்கின்ற இந்த உலகத்தை உயிர் பெற்று எழச் செ#துவிடுகின்றது. அதற்குள் நன்மைகளையும் பாராட்டத்தக்க பண்பு களையும் கொண்ட மலர்வனம் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிடுகின்றது. இறை மறுப்பாளர்கள் எந்த அளவுக்கு நற்பேறு அற்றவர்கள் எனில் இறைவனிடமிருந்து இந்த அருள்வளம் அருளப்படுகின்ற போது அதனை ஏற்க மறுக்கின்றார்கள். அதனைத் தங்களுக்கு மிகப்பெரும் அருள்வளம் குறித்து அறிவிக்கின்ற நற்செ#தியாக நினைக்காமல் அழிவை உணர்த்துகின்ற மரணச்செ#தியாக எடுத்துக்கொள்கின்றார்கள்.

74. அருள்வளங்கள் நிறைந்த மழை பொழிந்த பிறகு பச்சைப் பசேலென்று வயல்கள் செழிப்பாக வளர்ந்தோங்கிவிட்ட பிறகு அந்தச் சந்தர்ப்பத்தில் கடுமையான பனி நிறைந்த அல்லது கடுமையான வெப்பம் நிறைந்த காற்று வீச, அது பசுமையான கதிர்களை எரித்தழித்து விடுகின்ற போது...

75. அதன் பிறகு அவர்கள் இறைவனைப் பழிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். "இத்துணை பெரும் துன்பங்களில் ஆழ்த்திவிட்டானே' என இறைவன் மீதே குற்றம் சுமத்துகின்றார்கள். இத்தனைக்கும் இறைவன் அவர்கள் மீது அருள்வளங்கள் நிறைந்த மழையைப் பொழிந்தபோது அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக இறைவனை மதிக்காமல் நடந்துகொண்டிருந்தார்கள். இங்கும் ஒரு நுட்பமான குறிப்பு பொதிந்துள்ளது. அதாவது இறைவனிடமிருந்து அருள்வளங்கள் நிறைந்த தூதுச் செ#தியை இறைத்தூதர்கள் கொண்டு வந்தபோது மக்கள் அவர்களின் பேச்சைக் கேட்பதில்லை; அந்தத் தூதுச் செ#திகளை ஏற்க மறுத்துவிடுகின்றார்கள். பிறகு அவர்களின் அந்த இறைமறுப்புக்கான தண்டனை யாக இறைவன் அவர்கள் மீது கொடுங்கோலர்களையும், அராஜகப் பேர்வழிகளையும் ஆட்சி யாளர்களா#த் திணித்துவிடுகின்றான். அந்த ஆட்சியாளர்கள் அவர்கள் மீது கொடுமைகளை யும் அக்கிரமங்களையும் இழைத்து மனித மாண்புகளையே குழி தோண்டிப் புதைத்து விடுகின்றார்கள். அப்போது இதே மக்கள் இறைவனைச் சபிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். "இத்துணை கொடுமைகளும் அக்கிரமங்களும் நிறைந்த உலகத்தைப் படைத்து விட்டானே' என இறைவன் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்