மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

இஸ்லாம்

இதைவிட மோசமான நம்பிக்கைத் துரோகம் வேறென்ன?
16 - 31 August 2022


நபி(ஸல்) கூறினார்கள்: "வாக்குறுதிகளை மீறுகின்ற ஒவ்வொருவருக்கும் மறுமைநாள்
அன்று ஒரு கொடிக் கம்பு இருக்கும். அவன் செ#த வாக்குறுதி மீறலின் தரத்துக்கேற்ப
அதன் உயரம் இருக்கும். பொது மக்களின் ஆட்சியாளனாக, தலைவனாகப் பொறுப்பேற்ற
பிறகு வாக்குறுதிகளை மீறியவனை விட மோசமான துரோகம் வேறு இல்லை என்பதை
நன்கு அறிந்து கொள்ளுங்கள்.'
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி), நூல் : முஸ்லிம்

மனிதன் இந்த உலகில் வாக்குறுதிகளை மீறி நடந்தாலோ மக்களை ஏமாற்றுவதிலும் மோசடிகளிலும் ஈடுபட்டாலோ அது மறுமைநாளில் அவனுக்கு இழிவையும் கேவலத்தையும் மட்டுமே பெற்றுத் தரும். இன்று இந்த உலகில் எவர் எந்த அளவுக்கு மோசடியிலும் நம்பிக்கைத் துரோகத்திலும் ஈடுபடுகின்றாரோ அந்த அளவுக்கு மறுமையில் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாவார்.

ஆட்சியாளர்களும் தலைவர்களும் பொறுப்பேற்ற பிறகு செ#கின்ற வாக்குறுதி மீறல்தான் உலகத்தில் மிக மிக மோசமான நம்பிக்கைத் துரோகம் என்பதை இந்த நபிமொழி அறிவிக்கின்றது. ஆட்சியாளராகப் பொறுப்பேற்றவர் நீதியுடன் நடந்து கொள்வதும் மக்களையும் நீதியில் நிலைத்திருக்கச் செ#வதும் ஆட்சியாளர் மீதான மிகப் பெரும் பொறுப்பாகும்.

இந்நிலையில் அவர் தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழித்து மக்களின் உயிரையும் உடைமைகளையும் பறித்து அழிச்சாட்டியம் செ#கின்றார் எனில் மக்களின் உரிமைகளைப் பறித்து கொடுமை இழைக்கின்றார் எனில் அதனை விடப் பெரிய நம்பிக்கைத் துரோகம் வேறு இருக்க முடியாது. எவரேனுமொரு சாமானியர் செ#கின்ற நம்பிக்கைத் துரோகத் தோடு ஆட்சியாளரின் நம்பிக்கைத் துரோகத்தை ஒப்பிட முடியாது.

ஏனெனில் ஆட்சியாளர் நம்பிக்கைத் துரோகம் செ#கின்றபோது அதனால் பாதிக்கப் படுகின்றவர்கள் விரல் விட்டு எண்ணி விடத்தக்கவர்களாக இருக்க மாட்டார்கள். அதற்கு மாறாக மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் அவருடைய பங்குக்கு மிக மிக அதிகமான அளவில் இழிவும் கேவலமும் வந்து சேரும்.

ஆட்சியாளர் மோசடிக்காரனாக, நம்பிக்கைத் துரோகியாக இருப்பது மிகப்பெரும் கொடுமை ஆகும். மக்களின் ஆகுமான எதிர்பார்ப்புகளை அவன் நிறைவேற்றத் தவறுகின்றான். இது மக்கள் மீது அவன் இழைக்கின்ற கொடுமையாகும். ஆட்சியாளருக்கு தாம் அளித்த பைஅத்  உறுதிமொழியை முறித்துவிடுவது மக்கள் ஆட்சியாளருக்குச் செ#கின்ற நம்பிக்கைத் துரோகமாகும். ஷரீஅத் அனுமதிக்கின்ற எந்தவொரு காரணமும் இன்றி தலைவனுக்கோ, ஆட்சியாளருக்கோ மக்கள் கீழ்ப்படிய மறுப்பதும் ஒத்துழைக்க மறுப்பதும் மக்கள் செ#கின்ற நம்பிக்கைத் துரோகமாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்