மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அந்த நேரம் வரும் போது...
1 - 15 September 2022


(நபியே!) இறந்தவர்களைச் செவியேற்கச் செ#ய நிச்சயமாக உம்மால் முடியாது.76
புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை உம்முடைய அழைப்பைச் செவியேற்கும்படிச்
செ#யவும் உம்மால் முடியாது.77 மேலும், குருடர்களை வழிகேட்டிலிருந்து வெளி
யேற்றி, அவர்களை நேர்வழியில் கொண்டு வரவும் உம்மால் முடியாது.78 ஆனால்,
எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களா# இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செ#ய
முடியும்.


நீங்கள் பலவீனமான நிலையிலிருந்தபோது உங்களைப் படைக்கத் தொடங்கியவன்
அல்லாஹ்தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத்
தந்தான். பின்னர் அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும் முதிய
வர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான்.79
மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், யாவற்றின்மீதும் ஆற்றலுøடயவனாகவும் இருக்கின்றான். மேலும், அந்த நேரம் வரும்போது80 குற்றவõளிகள், "நாங்கள்
ஒரு நாழிகை நேரத்திற்கு மேல் தங்கவில்லை' என்று சத்தியம் செ#து கூறுவார்கள்.81
இதே போன்றுதான் இவர்கள் (உலக வாழ்க்கையில்) ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.82


ஆனால், ஞானமும், இறைநம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவர்:
"அல்லாஹ்வின் பதிவேட்டிலுள்ளபடி, மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் நாள்வரை
நீங்கள் தங்கியிருந்திருக்கின்றீர்கள். இதோ, எழுப்பப்படும் அந்த நாள்தான் இது.
ஆயினும், நீங்கள் அறியாதவர்களா# இருந்தீர்கள்.' ஆக, அக்கிரமக்காரர்களுக்கு
அந்நாளில் அவர்களுடைய சாக்குப்போக்கு எந்த பலனையும் அளித்திடாது. மன்னிப்புக்
கோரும்படி அவர்களிடம் கூறப்படவும் மாட்டாது.83


நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமாக புரியவைத்திருக்கின்றோம். நீர்
எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்துவிட்டவர்கள் "நீர் அசத்தியத்தில்
இருக்கின்றீர்' என்று கூறுவார்கள். இவ்வாறு அறிவில்லாதவர்களின் இதயங்களில்
அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான். எனவே (நபியே!) பொறுமையாக இருப்
பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.84 உறுதியான நம்பிக்கை கொள்ளா
தோர் உம்மை மதிப்பற்றவராக (அலட்சியத்துக்குரியவராக) காணக்கூடாது.85

 

76. எவர்களின் மனசாட்சி செத்துப் போ#க்கிடக்கின்றதோ, எவர்களிடம் ஒழுக்க வாழ்வின் கடைசிச் சுவடுகூட எஞ்சியிருப் பதில்லையோ, எவர்கள் தங்களின் பிடிவாதத்தாலும் மனஇச்சைகளுக்கு அடிமையாகிப் போனதாலும் சத்தியச் செ#தியை அடை யாளம் கண்டு அதனை ஏற்றுக் கொள்கின்ற திறனை இழந்து நிற்கின்றார்களோ அவர்கள்தாம் இங்கு "இறந்தவர்களா#க்' குறிப்பிடப் படுகின்றார்கள்.

77. சத்தியச் செ#தி காதில் விழுந்தாலும் அதனைக் கேட்டுணர்வதைத் தடுக்கின்ற திறன் படைத்த பூட்டுக்களைத் தங்களின் இதயங்களின்மீது போட்டுக் கொண்டவர்கள்தாம் இங்கு "செவிடர்களா#க்' குறிப்பிடப்படுகின்றார்கள். இத்தகைய மனிதர்கள் இன்னும் ஒருபடி மேலாக சத்தியத் தூதின் ஓசை தங்களின் காதுகளில் விழுவதையும் தடுத்துநிறுத்த முயல்வார்களேயானால் சத்தியத் தூதின் பக்கம் அழைப்பு விடுப்ப வரைப் பார்த்த மாத்திரத்தில் ஓடத் தொடங்கிவிடுவார்களேயானால் அவர் களுக்கு எதனைத்தான் போதிப்பது? எப்படித்தான் எடுத்துரைப்பது?

78. குருடர்களின் கையைப் பிடித்து அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நேரிய வழியில் நடத்திக்கொண்டிருப்பது இறைத்தூதரின் பணி அல்ல. அவரோ நேர்வழியின் பக்கம் திசைகாட்டுபவராகத்தான் இருப்பார். ஆனால் எவர்களின் இதயத்துக் கண்கள் பார்வைத் திறனை இழந்துவிட்டிருக்கின்றனவோ எவர்களுக்கு இறைத்தூதர்கள் காண்பிக்க முயல்கின்ற பாதையே கண்களில் படுவதில்லையோ அவர்களுக்கு வழிகாட் டுவது இறைத்தூதர்களால் ஆகாத காரியம் ஆகும்.

79. குழந்தைப் பருவம், இளமை, முதுமை ஆகிய அனைத்து நிலைமைகளும் அவனால் படைக்கப்பட்டவையே. எவரை வேண்டுமானாலும் பலவீனமாகப் படைப்பதும், எவரை வேண்டுமானாலும் வலிமையானவரா# ஆக்குவதும், எவரை வேண்டுமானாலும் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை அடைவதற்குள்ளாகவே மரணிக்கச் செ#வதும், எவரை வேண்டுமானாலும் இளமையிலேயே மரணத்தைத் தழுவச் செ#வதும் எவரை வேண்டுமானாலும் முதுமையிலும் நோ# நொடியின்றி திடகாத்திரமான உடல்நலத்துடன் வாழச் செ#வதும், இளமைப் பருவத்தில் வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தவரை முதுமையில் பார்ப்பவர் பாடம் பெறுகின்ற அளவுக்கு உடல் மெலிந்து, கூன் விழுந்து, நலம் குன்றி தவிக்க வைப்பதும் எல்லாமே அவனுடைய விருப்பத்தின்படி நடப்பவைதாம். மனிதன் என்னதான் தன்னைக் குறித்துக் கர்வமும் ஆணவமும் கொண்டவனா# இருந்தாலும் அவன் மீது இறைவனால் விதிக்கப்படுகின்ற நிலைமைகளை எந்தவொரு வியூகத்தைக் கொண்டும் அவனால் மாற்றிக்கொள் ளவே இயலாத அளவுக்கு இறை வனின் ஆற்றலுக்கு முன் கட்டுண்டு கிடக் கின்றான்.

80. மறுமை. அது வரவிருக்கின்றது என்கிற தகவல்தான் இப்போது தரப்படுகின்றது.

81. மரணித்த நிமிடத்திலிருந்து மறுமை நிகழ்கின்ற அந்த நொடி வரையிலான கால இடைவெளி. இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் பத்தாயிரம், இருபதாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டிருந்தாலும்கூட அவர்கள் ஏதோ சில மணி நேரங்களுக்கு முன்தான் படுக்கப்போனதாகவும் இப்போது திடீரென ஏதோ ஒரு விபத்துதான் தங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதாகவும் உணர்வார்கள்.

82. உலகத்திலும் அவர்கள் இதே போன்றுதான் தவறான கணிப்புகளைச் செ#து வந்தார்கள். அங்கும் இவர்கள் சத்தியத்தைப் பார்த்துப் புரிந்துகொள்கின்ற திறனற்றவர்களா# இருந்தார்கள். இதனால்தான், "இந்த மறுமை எதுவும் வராது. மரணத்திற்குப் பின் எத்தகைய வாழ்வும் இல்லை. எந்தவொரு இறைவனுக்கு முன்னால் நின்று நம்முடைய செயல்களுக்கான கணக்கைக் காட்ட வேண்டும் என்கிற அவசியமும் எங்களுக்கும் இல்லை' என்று இவர்கள் வாதிட்டு வந்தார்கள்.

83. "இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் அவர்களிடம் விரும்பப்பட மாட்டாது' என்றும் இதனை மொழிபெயர்க்கலாம். ஏனெனில் பாவ மன்னிப்புக் கோருதல், இறைநம்பிக்கை, நல்லறங்கள் போன்றவற்றின் பக்கம் மீள்வதற்கான அனைத்து வா#ப்புகளையும் அவர்கள் இழந்து விட்டிருப்பார்கள். மேலும் தேர்வுக்கான நேரம் முடிந்து போயிருக்க, தீர்ப்புக்கான வேளை வந்திருக்கும்.

84. இதற்கு முன்பு வசன எண் 47இல் குறிப்பிடப்பட்ட வாக்குறுதி குறித்து தான் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. எந்த மனிதர்கள் இறைத்தூதர்களின் தெளிவான சான்றுகளைப் பொ#யென்று சொல்லி ஏற்க மறுத்தõர்களோ, கேலி செ#தார்களோ, பிடிவாதத்துடன் நடந்துகொண்டார்களோ, இறைவன் அத்தகைய குற்றவாளிகளிடம் பழி வாங்குகின்றான் என்றும், இறைநம்பிக்கை யாளர்களுக்கு உதவி செ#வது இறைவன் மீது கடமையாக இருந்தது என்றும் அங்கு சொல்லப்பட்டிருந்தது.

85. எதிரிகள் போடுகின்ற கூச்சல், இரைச்ச லைக் கண்டு அடங்கிப் போ#விடுகின்ற அளவுக்கும், அவதூறுகளும் பொ#களும் நிறைந்த அவர்களின் பரப்புரைகளைக் கண்டு மிரண்டு போ#விடுகின்ற அளவுக்கும், அவர்களின் ஏளனங்கள், ஏச்சுகள், வசைகள், இழிவான பேச்சுகள், கேலிகள் போன்றவற்றால் மனமுடைந்து போ#விடுகின்ற அளவுக்கும், அவர்களின் மிரட்டல்களையும் அவர்களின் வலிமையையும் பார்த்துப் பயந்து போ# விடுகின்ற அளவுக்கும், அவர்களின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு சறுக்கிவிடுகின்ற அளவுக்கும், சமூக நலன் என்கிற பெயரில் அவர்கள் உங்களிடம் விடுக்கின்ற கோரிக்கைகளைக் கேட்டு அவர்களுடன் சமரசம் செ#துகொள்வதற்கு ஆயத்தமாகிவிடுகின்ற அளவுக்கும் பலவீன மானவர்களா# எதிரிகள் உங்களைக் காணக் கூடாது.

அதற்கு மாறாக அவர்கள் உங்களை எந்த அளவுக்கு இலட்சிய உணர்வும் பிடிப்பும் நிறைந்தவர்களா#, எந்த அளவுக்கு ஈமானி லும் நம்பிக்கையிலும் உறுதியாக நிலைத்து நிற்பவர்களா#, எந்த அளவுக்கு தங்களின் தீர்மானத்தில் தடுமாற்றத்துக்கு இடமே தராத உறுதியுடன் இருப்பவர்களா#, எந்த அளவுக்கு ஒழுக்கத்திலும் நடத்தையிலும் வலுவானவர்களா#க் காண வேண்டுமெனில் எந்தவொரு அச்சுறுத்தலைக் கொண்டும் பயமுறுத்தப்பட முடியாதவர்களா#, எந்த விலை கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாதவர்களா#, எந்தவொரு மாயையிலும் சிக்க வைக்க முடியாதவர்களா#, எந்தவொரு ஆபத்தைக் கொண்டும் இழப்பைக் கொண்டும் சிரமத்தைக் கொண்டும் இலட்சியப் பாதை யிலிருந்து அப்புறப்படுத்தப்பட முடியாதவர்களா#, மார்க்க விவகாரத்தில் எந்தவொரு பேரத்துக்கும் மசியாதவர்களா# நீங்கள் இருக்கவேண்டும்.

இந்தக் கருத்துகள் அனைத்தையும் இறைவனின் முழுமையான, குறைபாடற்ற சொல்வன்மை "உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராகக் காணக்கூடாது' என்கிற வாசகத்தில் அடைத்துள்ளது. இறைவன் நபிகளாரை எந்த அளவுக்கு வலிமை வா#ந்தவர்களாகப் பார்க்க விரும்பி னானோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு உறுதியும் தீரமும் வலிமை யும் நிறைந்தவர்களா# நபிகளார்(ஸல்) மலர்ந்தார்கள் என்பதற்கு பக்கச் சார் பற்ற வரலாறே சான்றளிக்கின்றது. எவர் எந்தக் களத்தில் நபிகளாரை எதிர்த்து மல்லுக்கு நின்றாலும் அவர் அதே களத்தில் நபிகளாரிடம் தோற்றுப் போ#நின்றார்.

இறுதியாக அத்தகைய மாபெரும் ஆளுமையைக் கொண்ட நபிகளார்(ஸல்) எத்தகைய மகத்தான புரட்சியைத் தோற்றுவித்துக் காட்டினார்கள் எனில் அரபுலகின் ஒட்டுமொத்த இறைமறுப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் தங்களின் ஒட்டுமொத்த வலிமை களையும் செலவிட்ட பிறகும், தங்கள் வசம் இருந்த அனைத்து உத்திகளையும் கருவிகளையும் பயன்படுத்திய பிறகும் அதனைத் தடுக்க முடியாமல் தோற்றுப் போனார்கள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்