மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • EWS இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரான தீர்ப்பு, உண்மையை உலகறியச் செய்த பத்திரிகையாளர், யூசுஃப் நபியின் ஏழாண்டு பசுமைப் புரட்சித் திட்டம் போன்ற புதுமையான தலைப்புகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது டிசம்பர் 1-15 இதழ்.
  • டிசம்பர் 1-15 இதழில் வரலாற்றாய்வாளர் செ.திவான் அவர்களின் சிறப்பு நேர்காணலும் வெளிவருகிறது.

இஸ்லாம்

அவமானத்திற்குரிய அடையாளக் கொடிகள்
1 - 15 September 2022


நபி(ஸல்) கூறினார்கள் :
"நம்பிக்கைத் துரோகம் செ#த ஒவ்வொருவருக்கும் ஒரு கொடி நடப்படும்.
அது அவனுடைய துரோகத்துக்கும் வாக்குறுதியை மீறிய குற்றத்துக்கும்
அடையாளமாக இருக்கும்'.
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), நூல் : புகாரி

நபி(ஸல்) கூறினார்கள்:
"முந்திச் சென்றுவிட்டவர்களையும் பிந்தைய காலத்தில் வந்தவர்
களையும் அல்லாஹ் மறுமைநாளில் ஒன்று திரட்டுகின்றபோது
ஒவ்வொரு மோசடிக்காரனுக்கும் நம்பிக்கைத் துரோகிக்கும் ஒரு கொடி
உயர்த்தப்படும். அதன் பிறகு இன்ன மனிதனின் மகனான இன்ன மனிதன்
செ#த மோசடி இது! துரோகம் இது! என்று அறிவிக்கப்படும்.'
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி), நூல் : முஸ்லிம்

அன்றைய கால அரபுகள் ஏதேனும் ஒன்றை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால் சந்தையில் உயரமான கொடிக் கம்பு ஒன்றை நட்டு விடுவார்கள். மக்கள் அந்தக் கொடியைத் தொலைவிலிருந்தே பார்த்துப் புரிந்துகொள்வார்கள்.

இதே போன்று மறுமைநாள் அன்றும் மோசடிப் பேர்வழிகளை விளம்பரப்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவருக்கும் அவர்களைப் பற்றிய விவரங்களைக் கிடைக்கச் செ#வதற்காகவும் அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட கொடிகள் உயர்த்தப்படும். மக்கள் மத்தியில் அவர்கள் கேவலமடைய வேண்டும், தம்முடைய மானமும் மரியாதையும் கண்ணியமும் கப்பலேறுவதைக் கண்கூடாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

"இன்ன ஆசாமி சரியான மோசடிப் பேர்வழி! கேவலமான ஆளு! உலக வாழ்க்கையின்போது இவன் சரியான ஏமாற்றுப் பேர்வழியாக, மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்திருக்கின்றான், மோசடி செ#வதையும் துரோகம் இழைப்பதையும்தாம் தம்முடைய முழுநேரத் தொழிலாக ஆக்கிக் கொண்டவன்' என மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் இவையெல்லாமே.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்