மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை

மூன்று அடிப்படைப் பண்புகள்
தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : மௌலவி ஓ.ஒ. மஸ்தான் அலீ பாகவி, 1 - 15 OCTOBER 2022


அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.1 இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.2 அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள்.3 இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள்.4

· அத்தியாயம் 31 லுக்மான் · திருவசனங்கள் : 15

 

1. ஞானம் நிறைந்த வேதத்தின்  அதன் ஒவ்வொரு வார்த்தையும் விவேகமானதாக உள்ளதே  அப்படிப்பட்ட வேதத்தின் வசனங் களாகும் இவை.

2. இவ்வசனங்கள் நேர்வழி காட்டக்கூடியவை ஆகும். இறைவனிடம் இருந்து அருட்கொடையாய் வந்துள்ளன. ஆனால் யார் நற்செயலின் பாதையை மேற்கொண்டிருக்கிறார்களோ, நல்லவர்களாய்த் திகழ விரும்புகிறார்களோ, யாரிடம் நன்மையின் தேடல் உள்ளதோ அவர்கள்தாம் (இவற்றின் மூலம் பயன்பெறக்கூடியவர்கள் ஆவர்) தீமைகள் குறித்து எச்சரிக்கை செய்யப் பட்ட உடனேயே யார் அவற்றை நிறுத்திவிடுகிறார்களோ, நன்மையின் பாதைகள் அவர்களின் முன்னிலையில் தெளிவாக எடுத்துரைக்கப்படும் பொழுது யார் அவற்றின்படி நடைபோடத் தொடங்கி விடுகிறார்களோ யாரிடம் இந்த உயரிய பண்புகள் அமைந்துள்ளனவோ அவர்கள்தாம் இந்த வழிகாட்டலில் இருந்து  இந்த அருட்கொடையில் இருந்து பயன்பெறக்கூடியவர்கள் ஆவர். ஆனால் தீமை செய்யக்கூடிய, தீமை விரும்பிகளாக உள்ள மக்கள் இந்த வழிகாட்டலிலிருந்து பயன் பெறவும் மாட்டார்கள்; இந்த அருட்கொடையிலிருந்து எந்தப் பங்கும் பெற மாட்டார்கள்.

3. நன்மை செய்பவர்கள் என்று யாரைக் குறித்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அவசியம் இம்மூன்று பண்புகளையும் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது இதன் கருத்தல்ல. உண்மையில் நன்மை செய்பவர்கள் எனும் பொதுவான சொல்லை முதலில் பயன்படுத்தி இவ்விஷயத்தின் பக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: அதாவது நன்மை செய்பவர்கள், இவ்வேதம் தடுக்கக்கூடிய அனைத்துத் தீமைகளில் இருந்தும் விலகிவிடுவார்கள்; இவ்வேதம் கட்டளை யிடக்கூடிய அனைத்து நற்செயல்களின்படி செயல்படுபவர்களாக இருப்பார்கள் என்பதன் பக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிறகு நன்மை செய்பவர்கள் எனப் படும் அந்த மக்களின் மூன்று முக்கிய பண்புகள் மட்டும் (இவ்வசனத்தில்) கூறப் பட்டிருப்பதன் நோக்கம், மீதியுள்ள ஏனைய நற்செயல்களுக்கு இம்மூன்று பண்புகள்தாம் அடித்தளம் என்பதை அதன் மூலம் தெளிவுபடுத்துவதே ஆகும்.

முதலாவதாக தொழுகையை நிலை நிறுத்துகிறார்கள் என்று சொல்லப்பட்டது. தொழுகையின் மூலம் இறைவழிபாடும் இறைபக்தியும் அவர்களின் நிரந்தரமான பழக்கமாக ஆகிவிடுகிறது. இரண்டாவதாக ஜகாத்தைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் பிறர்நலம் பேணும் பண்பும் தியாக ஆர்வமும் அவர்களினுள் உறுதிப்படுகின்றன; இவ்வுலகின் இன்ப சாதனங்களின் மீதான மோகம் அடங்கி விடுகிறது, இறைவனது திருஉவப்பின் மீதான தேட்டம் பொங்கிப் பெருகுகிறது. மூன்றாவதாக, மறுமையை உறுதியாக நம்புகிறார்கள் என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் பொறுப்பார்ந்த முறையில் பதி லளிக்கும் கடமையுணர்வு அவர்களிடம் மேலோங்குகிறது. அதன் நல் விளைவினால் மேய்ச்சல் நிலத்தில் வீணாகச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் கால்நடைகளைப் போல் அந்த மக்கள் ஆவதில்லை. மாறாக  நான் முழுமை யாகச் சுயாதிகாரம் பெற்றவன் அல்லன். ஓர் எஜமானின் அடிமைதான் நான், எனது இந்த அனைத்துச் செயற்பாடுகளைக் குறித்தும் எனது எஜமானின் திருமுன் நான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் எனும் உணர்வுள்ள மனிதனைப் போல் அவர்கள் ஆகிறார்கள்.

இம்மூன்று தனிப்பண்புகளின் காரணத்தால், இந்"நன்மையாளர்கள்' (அவ்வகை நற்செயலாளர்களைப் போல் ஆவதில்லை அதாவது) நற்செயல் என்பது தற்செயலாக அவர்களிடம் இருந்து வெளிப்பட்டு விடுகின்ற (நன்மையாளர்களைப் போல் ஆவதில்லை. அதுவும்கூட) எந்த முறையில் நற்செயல் வெளிப்படுகிறதோ அதைப்போல் தீமையும்கூட அவர்களிடமிருந்து வெளிப் படலாம் எனும் நிலையுடைய "நன்மையாளர்களைப்' போல் ஆவதில்லை. அதற்கு மாறாக இந்தத் தனிப்பண்புகள், அவர்களது மனதில் ஒரு நிரந்தரமான சிந்தனைப் போக்கையும் குணவொழுக்கத்தையும் உருவாக்கிவிடுகின்றன. அதன் விளைவாக அவர்களிடம் இருந்து நற்செயல் வெளிப்படுதல் என்பது ஒரு முறையான நியதிக்கேற்ப அமைந்து விடுகிறது. தீமை நிகழ்ந்துவிட்டாலும்கூட ஒரு விபத்தைப் போல் நிகழ்கிறதே தவிர (தீமை நிகழ்தலின் பின்னணியில் ஆழமான உந்துதல்கள் எதுவும் இருப்பதில்லை அதாவது) சிந்தனை  குணவொழுக்கப் பாங்கினால் பொங்கியெழக்கூடிய  அவர்களின் உள்ளத்து இயல்பான தேட்டத்தினால் தீமையின் பாதையில் அவர்களை இழுத்துச் செல்லக்கூடிய ஆழமான உந்துதல்கள் எதுவும் இருப்பதில்லை.

4. இந்த வசனங்கள் அருளப்பட்ட காலகட் டத்தில், மக்காவின் இறைநிராகரிப்பாளர்கள் அறிந்து வைத்திருந்ததும் வெளிப்படையாகச் சொல்லிவந்ததும் இதுதான்: முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மக்களும் தங்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதனால்  இவர்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள் என்று வரையறுத்தும் முழு அழுத்தத்து டனும் கூறப்பட்டது. நீங்கள் உங்களின் வீண் கற்பனைப்படி புரிந்து வைத்திருப்பதைப் போன்று  இவர்கள், வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லர். மாறாக உண்மையில் இம்மக்கள்தாம் வெற்றிபெறக்கூடியவர்கள். இந்தப் பாதையை மேற்கொள்ள மறுத்துவிட்டவர்கள்தாம் வெற்றி கிடைக்கப் பெறாதவர்கள் என்று முழு அழுத்தத்துடன் கூறப்பட்டது.

இங்கே குர்ஆனின் சரியான கருத்தைப் புரிந்து கொள்வதில் எந்த மனிதன் கடுமை யாகத் தவறிழைப்பவன் எனில், வெற்றியை வெறும் உலக வாழ்க்கையுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளும் மனிதன்தான்; அதுவும் உலகாயதச் செழிப்பின் அர்த்தத்தில் மட்டும் எடுத்துக் கொள்ளும் மனிதன்தான் கடுமை யாகத் தவறிழைப்பவன் ஆவான். வெற்றியைப் பற்றி குர்ஆன் கூறும் கருத்து என்னவென்று அறிந்து கொள்வதற்கு தஃப்ஹீமுல் குர்ஆனின் கீழ்க்காணும் விரிவான விளக்கக் குறிப்புகளை வாசித்து ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பது அவசிய மாகும்: 2:25. 3:102,130,200. 5:35,90. 6:21. 7:7,8,157. 9:88. 10:17. 16:116. 22:77. 23:1,117. 24:51. 30:38.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்