மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

முழுமை

மன மயக்கத்தை விலைக்கு வாங்கலாமா?
· தஃப்ஹீமுல் குர்ஆன் · மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : மௌலவி ஓ.ஒ. மஸ்தான் அலீ பாகவி, 16-30 OCTOBER 2022


 

 

5. ஒருபுறம்  இறைவனிடம் இருந்து இந்த அருட்கொடையும் வழிகாட்டலும் வந்துள்ளன. அதன்மூலம் சில மனிதர்கள் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மறு புறம் இதே நற்பேறு பெற்ற மனிதர்களின்   சுற்றுச்சூழலில்  இத்தகைய துர்பாக்கியத்திற்குரிய மனிதர்களும் இருக் கின்றார்கள். அல்லாஹ் அருளிய வசனங் களை எதிர்ப்பதில் இம்மாதிரியான போக்கினை மேற்கொண்டவாறு இருக்கிறார்கள்.

6. வசனத்திலுள்ள அரபு வாக்கியம் "லஹ்வுல் ஹதீஸ்' என்பதாகும். மனிதனை முழுக்க முழுக்கத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு, பிற விவகாரங்களை மறக் கடிக்கச் செய்யக்கூடிய விஷயங்கள் என்பது இதன் பொருளாகும். இந்த அகராதிப் பொருளைப் பொறுத்தவரையில் இவ் விஷயங்களில் இழிவுக்குரிய அம்சம் இல்லைதான். ஆனால் பயன்படுத்தலைப் பொறுத்தவரையில், கெட்ட விஷயங் களுக்கு வீணான, முறைகேடான விஷயங் களுக்கு லஹ்வுல் ஹதீஸ் என்று சொல்லப் படுகிறது. உதாரணமாக, வம்பு வளர்க்கும் பேச்சுகள், மூடத்தனமõன பேச்சுகள், கேலி கிண்டல், கட்டுக்கதைகள், புராணக் கதைகள், பாட்டிசைத்தல் இவற்றைப் போன்ற பிற விஷயங்கள். 

லஹ்வுல் ஹதீஸ் (எனும் மன மயக்கச் செய்தி)களை வாங்குதல் என்பதற்கு இப் படியும் அர்த்தம் கொடுக்கலாம்  அதாவது ஒரு மனிதன், சத்தியத்தின் செய்தியை விட்டுவிட்டு அசத்தியத்தின் செய்தியை மேற்கொள்ளுதல், நேர்வழியை விட்டும் முகம் திருப்பிக்கொண்டு, உலகிலும் மறுமை யிலும் அவனுக்கு எந்த நன்மையாகவும் இல்லாத விஷயங்களை மேற்கொள்ளுதல் என்றும் அர்த்தம் கொடுக்கலாம். ஆனால் இது, மஜாஸி எனும் பகர்ப்பு அர்த்தமாகும். இந்தச் சொற்றொடரின் அசல் அர்த்தம் என்னவெனில், ஒரு மனிதன் தனது செல்வத்தைச் செலவுசெய்து முறையற்ற விஷயத்தை விலைக்கு வாங்குதல் ஆகும். ஒன்றுக்கும் அதிகமான நபிமொழி அறிவிப்புகள் இந்த விளக்கத்திற்குத்தான் வலுசேர்த்துக் கொண்டிருக்கின்றன.

இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பை இப்னு ஹிஷாம்(ரஹ்) அவர்கள், எடுத்தெழுதியுள்ளார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த இறைநிராகரிப்பாளர்கள் (இஸ்லாத்திற்கு எதிராக) அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டும்கூட முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அழைப்பு பரவிக்கொண்டு வந்தபொழுது, நள்ர் பின் ஹாரிஸ் என்பவன், குறைஷிகளிடம் சொன்னான்: "இந்த மனிதரை எந்த முறையில் நீங்கள் எதிர்க்கிறீர்களோ அந்த முறையினால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த மனிதர் உங்களிடையே குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து நடுத்தர வயதை அடைந்திருக்கிறார். இன்றுவரையில் தமது குணவொழுக்கத்தில் உங்கள் அனைவரையும் விடச் சிறந்தவராக அவர் திகழ்கிறார்.

அனைவரைக் காட்டிலும் உண்மையாளராக  நம்பிக்கை நாணயம் மிக்கவராக இருக்கிறார். இப்பொழுது அவர் ஒரு ஜோசியக்காரர், சூனியக்காரர், கவிபாடுபவர், பைத்தியக்காரர் என்றெல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள் எனில், இப்படியான உங்களுடைய பேச்சுகளை யார்தான் நம்புவார்கள்? சூனியக்காரர்களை மக்கள் அறிந்திருக்கவில்லையா? அவர்கள் எவ்வகையான மந்திரங்களை முனங்குகிறார்கள் என்று! ஜோசியக்காரன் எவ்வகை யான விஷயங்களை இட்டுக்கட்டுகிறான் என்பது மக்களுக்குத் தெரியாதா, என்ன?

கவிதைகளையும் கவிஞர்களையும் அறியாதவர்களாகவா மக்கள் இருக்கிறார்கள்? பைத்தியத்தின் பாதிப்புகளைப் பற்றி மக்க ளுக்குத் தெரியாதா, என்ன? இப்படிப்பட்ட எந்தப் பழிச்சொல்தான் முஹம்மத் நபி அவர்களின் மீது பொருந் தக்கூடியதாக உள்ளது? (எந்தப் பழிச் சொல்தான் இப்படியுள்ளது? அதாவது) அது விஷயத்தில் சாதாரண மக்களை உறுதியாக நம்பச்செய்து முஹம்மத் நபியின் பக்கம் கவனம் செலுத்த விடாமல் தடுக்கலாம் எனும் வகையில் எந்தப் பழிச்சொல்தான் உள்ளது? அப்படி எதுவும் இல்லை. எனவே சற்றுப் பொறுங்கள்! அதற்கான தக்க சிகிச்சையை நான் செய்கிறேன்' என்று கூறி னான். அதன் பிறகு நள்ர் பின் ஹாரிஸ் என்பவன், மக்காவில் இருந்து ஈராக் சென்றான். அந்நிய மொழிபேசும் அரசர்களின் வரலாறுகளை யும், ருஸ்தும், இஸ்ஃபந்தியாரின் கதைகளையும் அங்கிருந்து வாங்கிக்கொண்டுவந்து, கதைசொல்லும் பொதுக்கூட்டங்களை ஆங்காங்கே பரவலாக நடத்தத் தொடங்கினான்.

மக்களின் கவனம் குர்ஆனை விட்டும் விலகிட வேண்டும்; இந்தக் கதைகளில் மூழ்கிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தான். (நூல்: ஸீரத்து இப்னு ஹிஷாம். பாகம் 1. பக்கம் 320, 321) இதே அறிவிப்பை வாஹிதி(ரஹ்) அவர்கள், அஸ்பாபுன் நுஸூல் (வசனங்கள் அருளப்பட்ட பின்னணிகள்) எனும் தமது நூலில் கல்பி, முகாத்தில் ஆகிய இருவரிடம் இருந்து எடுத்தெழுதியுள்ளார். மேலும் இப்னு அப்பாஸ்(ரலி), இதற்கும் அதிகமாக இந்த ஒரு தகவலையும் சேர்த்துள்ளார்கள்.  அதாவது, நள்ர் என்பவன் பாட்டிசைக்கும் அடிமைப் பெண்களையும் இந்நோக்கத்திற்காக விலைக்கு வாங்கினான்.

நபி(ஸல்) அவர்களின் பேச்சுகளைச் செவியேற்றதனால் இன்னார் கவரப்படு கிறார் என்று அவன் கேள்விப்பட்ட உடன் அந்த மனிதரின் மீது தனது ஓர் அடிமைப் பெண்ணைச் சாட்டினான்.  இன்ன மனிதரை நன்றாகக் கவனித்துக்கொள். இசைப் பாட்டுகளை அவர் செவியுற வேண்டும். இதன் நோக்கம், அவர் உன்னில் முழு ஈடுபாடாகி அவரது மனம் அங்கிருந்து விடு பட்டு விட வேண்டும் என்பதுதான் என்று அவளிடம் கூறினான். மனித இனத்தின் பெரும்பெரும் குற்றவாளிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படுத்திக் கொண்டிருந்த அதே சூழ்ச்சி தான் இதுவும். விளையாட்டு வேடிக்கைகளிலும் இசையிலும் நடனத்திலும் பொதுமக்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

இதன் நோக்கம், வாழ்க்கையின் உறுதியான பிரச்னைகளின் பக்கம் கவனம் செலுத்தும் உணர்வே அவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதுதான்! இந்த மாயை உலகில்  எந்த அழிவை நோக்கி தாம் இழுத்துச் செல்லப் சமரசம் 29 1631 அக்டோபர் 2022 படுகிறோம் எனும் விவரமே அவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதுதான். லஹ்வுல் ஹதீஸ் என்பதற்கு இதே விளக்கத்தை, நபித்தோழர்கள், அவர்களின் அடுத்த தலைமுறையினரான தாபிஈன்களில் பெரும்பாலோர் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வசனத்தில் உள்ள லஹ்வுல் ஹதீஸ் என்பதன் கருத்து என்ன? என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பாட்டி சைப்பதுதான் அது' என்று மூன்று தடவை அழுத்தமாகக் கூறினார்கள். (நூல்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஷைபா, ஹாகிம், பைஹகி) இதே கருத்தைத் தரும் பல அறிவிப்புகள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) முஜாஹித், இக்ரிமா, ஸயீத் பின் ஜûபைர், ஹஸன் பஸரி, மக்ஹூல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) ஆகியோரி டம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல் பாஹிலி(ரலி) அறிவித்த பின்வரும் ஹதீஸை, இப்னு ஜரீர்(ரஹ்), இப்னு அபீ ஹாத்திம்(ரஹ்), இமாம் திர்மிதி(ரஹ்) ஆகியோர் பதிவு செய்துள் ளார்கள்: "பாட்டுப்பாடும் அடிமைப் பெண்களை விற்பதும் வாங்குவதும், வியாபாரம் செய்வதும் ஹலால்(அனுமதிக்கப்பட்டது) அல்ல; அவர்களை விற்பனை செய்து கிரயம் வாங்குவதும் ஹலால் அல்ல.' மற்றோர் அறிவிப்பில் இதன் கடைசி வார்த்தைகள்  அவர்களின் கிரயத்தைச் சாப்பிடுவது ஹராம்(தடுக்கப்பட்டது) ஆகும் என்பதாக உள்ளன.

மற்றோர் அறிவிப்பில் இதே அபூஉமாமா (ரலி) அவர்களிடம் இருந்து பின்வரும் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: "அடிமைப் பெண்களுக்குப் பாட்டுப்பாட கற்றுக்கொடுப்பதும் அவர்களை விற்பதும் விலைகொடுத்து வாங்குவதும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) அல்ல. அவர்களின் கிரயம் ஹராம் ஆகும்.' இம்மூன்று நபிமொழிகளில் இருந்து "ம(ன்ய்)யஷ்தரி லஹ்வல் ஹதீஸ்...' என்று தொடங்கும் இந்த வசனம், இப்படிப்பட்ட விஷயங்களின் பின்னணியில் அருளப்பட்டதாகும் எனும் கருத்தும் தெளிவாகக் கிடைக்கிறது. நீதிபதி அபூபக்ர் பின் அரபு(ரஹ்) அவர்கள் அஹ்காமுல் குர்ஆன் எனும் தமது நூலில் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்) ஆகிய இருவரின் மேற்கோள்களுடன் அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸை எழுதியுள்ளார்கள்: "எவரேனும் பாட்டுப்பாடும் அடிமைப் பெண்ணின் அவையில் அமர்ந்து அவளது பாட்டுகளைச் செவியுற்றால் மறுமை நாளில் அவனுடைய காதுகளில் உருக்கப்பட்ட ஈயம் ஊற்றப்படும்.'

(இந்தத் தொடரில் இதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது அந்தக் காலத்தில் பாட்டுப்பாடும் கலை என்பது முற்றாக ஏன், முழுக்க முழுக்க அடிமைப் பெண்களின் மூலமே உயிர்பெற்றிருந்தது. சுதந்திரமான பெண்கள் அந்தக் காலகட்டம் வரையில் கலைஞர்களாக ஆகியிருக்கவில்லை. இத னால்தான் பாட்டுப்பாடும் பெண்களை விற்பது  வாங்குவது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்; அவர்களின் விலையைக் குறிப்பிடுவதற்குக் கிரயம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார்கள். (மேலும் அரபுமொழியில் அடிமைப் பெண்ணுக்குச் சொல்லப்படுகின்ற கய்யினா எனும் சொல்லைப் பாட்டுப்பாடும் பெண்களுக்குப் பயன் படுத்தியுள்ளார்கள்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்