விளக்கம்: கற்றதற்கேற்ப செயல்பாடு இல்லாமல் போகுமேயானால் கல்வியும் அறிவும் எஞ்சியிருக்கவில்லை எனப் புரிந்துகொள்ள வேண்டும். அறிவாலும் கற்ற கல்வியாலும் நன்மைகள் வென்றெடுக்கப்படவில்லையெனில் புத்தகத்தின் தாள்களில் அந்தக் கல்வி எஞ்சி இருப்பதால் எத்தகைய சிறப்பான பயனும் இருப்பதில்லை.
குர்ஆன் சொல்வதற்கேற்ப நாம் செயல்பட்டோம் எனில் குர்ஆனின் மூலமாக நமக்கு மறுமையில் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி. நம்முடைய வெற்றிக்கான உத்தரவாதமாக குர்ஆன் இருக்கும். ஆனால் குர்ஆனைக் குறித்து அலட்சியமாக இருந்தவாறு நாம் நம்முடைய வாழ்வை ஓட்டினோமேயானால் அதன் பிறகு குர்ஆனே நமக்கு எதிரான வலுவான ஆதாரமாய் ஆகிவிடும்.
நம்முடைய அந்த நடத்தை குறித்து எந்தவொரு சாக்குப்போக்கும் நம்மால் இறைவனிடம் சொல்ல முடியாமல் போகும். இன்னொரு அறிவிப்பில் "குர்ஆன் உங்களுக்குச் சாதகமான ஆதாரமாக இருக்கும். அல்லது குர்ஆன் உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்' என்கிற வாசகங்களும் இடம்பெற்றிருக்கின்றன.