மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

இஸ்லாம்

நாவு இடறி விழாதீர்!
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான், நவம்பர் 16-30


1. சிரிப்பதையும் பிறரைச் சிரிக்க வைப்பதையுமே தம்முடைய முழுநேர வேலையாக ஆக்கிக் கொள்வது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. மேலும் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக ஒருவர் பொய்யுரைக்கின்றார் எனில் அது இன்னும் ஒருபடி மோசமான செயலாகும். அதனால் அவருக்கு பேரிழப்பையும் பின்னடைவையும் தம்மைத் தாமே நொந்து கொள்ள வேண்டிய இழிநிலையைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. நகைச்சுவையும் சிரிப்பும் கேலியும் மிகைத்துப் போகின்றபோது மனிதனின் கண்ணியமும் மதிப்பும் சரிந்துகொண்டே போய்விடுகிறது. அதன் காரணமாக அவர் மீதான மரியாதையும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இன்னும் சொல்லப்போனால் ’அதிகமாக சிரிப்பதைத் தவிருங்கள். ஏனெனில் அதிகமாக சிரிப்பதால் இதயம் செத்துப் போகின்றது. முகத்தின் ஒளி மங்கிப் போகின்றது' என்றும் நபிமொழி ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. (பைஹகி)

மற்ற மனிதர்களைச் சிரிக்க வைப்பதற்காக தன்னுடைய எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்வதும், உயர்ந்த நிலையை எட்டிய பிறகு அதிலிருந்து தாழ்ந்து சறுக்கி விழுவதும், எதுவரையெனில் நரகத்தின் படுகுழியில் போய் விழுவதும் கடைந்தெடுத்த முட்டாள்தனமாகும். ஒருவர் என்னதான் மிக மிக உயர்ந்த படித்தரத்தை அடைந்திருந்தாலும் மதிப்பும் மரியாதையும் மாண்பும் பெற்றிருந்தாலும் நகைச்சுவை, வேடிக்கைப் பேச்சு, சிரிப்பு போன்றவற்றின் காரணத்தால் மிக மிகத் தாழ்ந்த இடத்தில் சரிந்து விழுந்து விடுகின்றார்.

இறைவன் மனிதனுக்கு மிக உயர்ந்த பதவியையும் படிநிலையையும் பொறுப்பையும் கொடுத்திருக்கின்றான். இந்த நிலையில் அவன் தன்னுடைய உயர்ந்த அந்தஸ்துக்கு பங்கம் விளைவிக்கின்ற வகையில் பொறுப்பு உணர்வற்ற பேச்சுகளிலும் தவறான உரையாடல்களிலும் இம்மியளவுகூட பயன் தராத அரட்டையிலும் ஈடுபடுவது சரியல்ல.

2. ஒருவர் கால் தவறி கீழே விழுகின்றபோது அதிகமதிகமாக அவர் எலும்பு முறிவுக்கு ஆளாகலாம். வலியும் வேதனையும் மிகைக்கின்ற அளவுக்குக் காயமடையலாம். அந்த உடற்காயங்களை முறையான சிகிச்சை, ஓய்வு ஆகியவற்றால் குணப்படுத்திவிட முடியும். இழப்பைச் சீர் செய்துவிடவும் இயலும். ஆனால் நாவினால் அவனுடைய மறுமை வாழ்வே பாழாகிப் போவதற்கான மிகப் பெரும் ஆபத்து இருக்கின்றது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்