மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை

லுக்மான் எனும் அறிஞர்
மௌலானா மௌதூதி (ரஹ்), டிசம்பர் 1-15 2022


17. ஷிர்க் எனும் பலதெய்வ வழிபாட்டை மறுத்துரைப்பதில் பகுத்தறிவுப்பூர்வமான வலுவான ஆதாரத்தை முன்வைத்த பிறகு இப்பொழுது அரபு மக்களுக்கு இவ்வாறு எடுத்துக்காட்டப்படுகிறது: பகுத்தறிவுப்பூர்வமான இவ்விஷயம் இன்றைக்கு உங்களின் முன்னிலையில் முதன்முறையாகச் சமர்ப்பிக்கப்படும் விஷயம் அல்ல. மாறாக முன்பும்கூட பகுத்தறிவுள்ள, விவரம் தெரிந்த மக்கள் இதே விஷயத்தையே கூறியிருக்கிறார்கள். உங்கள் மத்தியில் புகழ்பெற்ற அறிஞர் லுக்மான் என்பவர் எவ்வளவோ காலம் முன்பே இதைப்போன்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இந்த அழைப்புக்கு, "ஷிர்க் எனும் பலதெய்வ வழிபாடு பகுத்தறிவுக்குப் புறம்பான கொள்கை எனில் இதற்கு முன்னர் யாருக்கும் இந்த விஷயம் புலப்படவில்லையே ஏன்?' என்று நீங்கள் கேள்வி கேட்க முடியாது.

லுக்மான் எனும் ஆளுமை அரபு மக்களிடத்தில் ஒரு தத்துவ ஞானி, அறிஞர் எனும் ரீதியில் மிகவும் புகழ்பெற்ற ஆளுமையாக இருந்தார். ஜாஹிலிய்யத் எனும் அறியாமை நிறைந்த காலத்திய கவிஞர்கள் எடுத்துக்காட்டாக இம்ரவுல் கைஸ், லபீத், அஃஷா, தரஃபா போன்றவர்களின் கவிதைகளில் அறிஞர் லுக்மான் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அரபு மக்களிடையே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த சிலரிடத்தில் லுக்மானின் தத்துவம் நிறைந்த கருத்துகள் அடங்கிய தொகுப்புகளும்கூட இருந்தன. சில அறிவிப்புகளில் இவ்வாறாக வருகிறது: ஹிஜ்ரத் (மதீனாவுக்குப் புலம்பெயர்தல்) நடைபெறுவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு நபி(ஸல்) அவர்களின் அறிவுரையால் கவரப்பட்ட மதீனா நகர ஆரம்பகால மனிதர் ஸுவைத் பின் ஸாமித் என்பவர் ஹஜ் செய்வதற்காக மக்கா நகர் சென்றார். அங்கே நபி(ஸல்) அவர்கள் தமது வழக்கத்திற்கு ஏற்ப  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஹாஜிகளின் ஒவ்வொரு கூடாரத்திற்கும் சென்று இஸ்லாத்தின் அழைப்பை எடுத்துரைத்தவாறு சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.

ஸுவைத் நபியவர்களின் சொற்பொழிவைச் செவியுற்றபொழுது நபியவர்களிடம் "தாங்கள் எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைப் போன்ற சில விஷயங்கள் என்னிடத்திலும் உள்ளன' என்று சொன்னார். அப்பொழுது நபியவர்கள், "அது என்ன?' என்று கேட்டார்கள். அவர், "லுக்மானின் ஏடு' என்று பதில் கூறினார். பிறகு நபியவர் களின் வேண்டுகோளின்படி அவர், அந்த ஏட்டின் சில பகுதிகளை நபியவர்களுக்குச் சொல்லிக் காண்பித்தார். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், இவை மிகவும் நல்ல விஷ யங்களாக உள்ளன. ஆனால் இவற்றை விடவும் சிறந்த வாக்குகள் என்னிடம் உள்ளன என்றார்கள்.

அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸுவைதுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். அதனைச் செவியுற்ற அவர், ஐயமின்றி இது லுக்மானின் ஏட்டை விடவும் சிறந்ததாகும் என்று ஒப்புக்கொண்டார். (நூல்: இப்னு ஹிஷாமின் ஸீரத்துந்நபி, பாகம் 2. பக்கம் 67 68. உஸ்துக் ஃகஅபா பாகம் 2. பக்கம் 378)

வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்: (ஸுவைத் பின் ஸாமித்) எனும் இந்த மனிதர், மதீனாவில் தனது தகுதி, வீரம், கவி, உரைநடை, சிறப்பு ஆகியவற்றின் அடிப் படையில் உயர் சிறப்பாளர் எனும் பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார். ஆனால் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பிறகு அவர் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றபொழுது சில ஆண்டுகளுக்குப் பிறகு புஆஸ் எனும் போர் நடைபெற்றது. அதில் அவர் கொலை செய்யப்பட்டார். அவரது கூட்டத்தினர் மத்தியில் நிலவியிருந்த பொதுக்கருத்து நபி (ஸல்) அவர்களை அவர் சந்தித்த பிறகு இஸ்லாத்தில் சேர்ந்து முஸ்லிமாகிவிட்டார் என்பதுதான்.

வரலாற்றின் அடிப்படையில் லுக்மான் எனும் ஆளுமை தொடர்பாக பெரிதும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் காலத்தின் இருண்ட நூற்றாண்டுகளில் வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்ட ஏடென்று எதுவுமில்லை. எனவே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த செவிவழிச் செய்திகள்தான் தகவல்களுக்கு அடிப்படையாக இருந்தன. அத்தகைய அறிவிப்புகளின் கண்ணோட்டத்தில் லுக்மான் என்பவரை  ஆத் குலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் என்றும் ஏமன் தேசத்தின் ஒரு மன்னர் என்றும் சிலர் தீர்மானிக்கின்றனர்.

மௌலானா சையத் சுலைமான் நத்வி, இதே அறிவிப்புகளின் அடிப்படையில், அஹ்லுல் குர்ஆன் எனும் நூலில், இந்தக் கருத்தை எழுதியுள்ளார்கள்: ஆத் குலத்தார் மீது இறைத்தண்டனை வந்தபிறகு ஹூத் நபி (அலை) அவர்களுடன் தப்பித்திருந்தார்களே அத்தகைய இந்தக் குலத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளர்களின் சந்ததிகளில் ஒருவர்தான் லுக்மான். மேலும் ஏமனில் அந்தக் குலத்தார்கள் நிறுவியிருந்த அரசாட்சியை நடத்திய மன்னர்களில் லுக்மானும் ஒருவர்.

ஆனால் மூத்த நபித்தோழர்கள், தாபிஈன்களில் சிலருடைய அறிவிப்புகள் முற்றிலும் இதற்கு மாற்றமாக உள்ளன. லுக்மான், ஒரு கறுப்பின அடிமை என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே அபூஹுரைரா(ரலி), முஜாஹித், இக்ரிமா, காலித் ரிப்ஈ(ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.

லுக்மான் என்பவர் நூபா என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் அன்சாரி(ரலி) கூறுகிறார்கள். ஸயீத் பின் முஸையப்(ரஹ்) அவர்களோ எகிப்தின் கறுப்பின மனிதர்தான் லுக்மான் என்பதாகக் கூறுகிறார்கள்.

இம்மூன்று கூற்றுகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக ஒப்பாகவே அமைந்திருக்கின்றன. ஏனெனில் கறுப்பின மக்களைக் குறித்து, அந்தக் காலத்தில் பொதுவாக ஹபஷிகள் (அபிசீனியர்கள்) என்றுதான் அரபு மக்கள் கூறிக்கொண்டிருந்தனர். மேலும் நூபா என்பது, எகிப்தின் தென்பகுதியில்  சூடானின் வடபகுதியில் அமைந்துள்ள பகுதியின் பெயர் ஆகும். எனவே மூன்று கூற்றுகளில் ஒரு மனிதருக்கு எகிப்தியர் என்றும் நூபி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஹபஷியர் என்றும் தீர்மானிப்பது வெறும் வார்த்தை அளவிலான வேறுபாடுதான். அர்த்தத்தைப் பொறுத்து எந்த வேறுபாடும் இல்லை.

பிறகு ரௌளுல் உன்ஃப் எனும் நூலில் ஸுஹைலி அவர்களின் விளக்கப்படியும் முரவ்வஜுத் தஹப் எனும் நூலில் மஸ்ஊதி அவர்களின் விளக்கங்களின்படியும் இந்தக் கேள்விக்கும்  அதாவது இந்த சூடானி அடிமையின் கருத்துகள் அரேபியாவில் எப்படி தீவிரமாகப் பரவின எனும் கேள்விக்கும் விளக்கம் கிடைக்கிறது. இவ்விரு நூலாசிரியர்களும் கூறியுள்ளனர்: இந்த மனிதர் உண்மையில் நூபி பகுதியைச் சேர்ந்தவர்தான். அதிலும் மத்யன், ஐலா (தற்போதைய அகபா) பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இதனால்தான் அவருடைய மொழி, அரபு மொழியாக இருந்தது. அத்துடன் அவருடைய தத்துவக் கருத்துகள் அரேபியாவில் பரவிவிட்டன.

இதற்கும் மேலாக ஸுஹைலி அவர்கள் இவ்வாறும் விளக்கம் அளித்துள்ளார்கள்: லுக்மானுல் ஹகீம் என்பவரும் லுக்மானுல் ஆத் என்பவரும் இரு வெவ்வேறு மனிதர்கள் ஆவர். ஒரே மனிதர்தான் இரு பெயர்களில் அழைக்கப்பட்டார் என்று சொல்வது சரியல்ல. (பார்க்க: ரௌளுல் உன்ஃப் பாகம் 1. பக்கம் 266. மஸ்ஊதீ பாகம் 1. பக்கம் 57)

இந்த இடத்தில் இன்னொன்றையும் விளக்குவது அவசியமாகும். மேற்கத்திய அறிஞர் தேர்ன்பூர்க்(ஈஞுணூஞுணஞணிதணூஞ்) என்பவர் பெய்ரூத் நூல் நிலையத்தின் அம்ஸாலு லுக்மானில் ஹகீம்(ஊச்ஞடூஞுண் ஈஞு ஃணிணுட்ச்ண ஃஞு குச்ஞ்ஞு)  லுக்மானுல் ஹகீமின் பொன்மொழிகள் எனும் பெயரில் அரபுமொழிக் கைப்பிரதி ஒன்றை வெளியிட்டார். உண்மையில் அது கற்பனையாகப் புனையப்பட்ட விஷயமாகும். மஜல்லத்துல் லுக்மான் எனும் நூலுடன் தூரமான தொடர்புகூட அதற்கு இல்லை. இந்தப் பொன்மொழிகள், கி.பி. 13ஆம் நூற்றாண்டில் யாரோ ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட பொன்மொழிகளாகும்.

இந்நூலின் அரபுநடை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். மேலும் அதைப் படிப்பதன் மூலம், உண்மையில் இந்நூல், வேற்று மொழிநூலில் இருந்து பெயர்க்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

அந்நூலாசிரியர் அல்லது அதன் மொழிபெயர்ப்பாளர் தாமே சுயமாக எழுதியதை லுக்மானுல் ஹகீம் எழுதியதாகக் கூறிவிட்டார்.

மேற்கத்தியவாதிகள் இது போன்ற பொய்யான விஷயங்களைத் தேடிப்பிடித்துத் தேடிப்பிடித்து வெளி உலகிற்குக் கொண்டுவந்ததன் நோக்கம் இதைத் தவிர வேறொன்றுமில்லை: குர்ஆனில் விளக்கப்பட்டுள்ள கதைகளைக் குறித்து அவை வரலாற்றில் இல்லாத பொய்க்கதைகள் என்று எப்படியாவது நிரூபித்துக் காட்டிட வேண்டும், மதிப்பிழக்கச் செய்திட வேண்டும் என்பதுதான். என்சைக்ளோபீடியா ஆஃப் இஸ்லாம் எனும் கலைக்களஞ்சியத்தில் லுக்மான் எனும் தலைப்பில் ஹீலர் என்பவரின் கருத்துகளை ஒருவர் படித்தார் எனில், அவருக்கு இப்படிப்பட்ட மனிதர்களின் தீய எண்ணத்தைப் பற்றி தெரியாமல் இருக்காது.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்