மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை

பெற்றோருக்கு நன்றி செலுத்து!
மௌலானா மௌதூதி (ரஹ்), 1-15 ஜனவரி 2023


22. இங்கிருந்து இந்த வசனத் தொடரின் கடைசி வரையில் முழு வாசகமும் இடையீட்டு வாக்கியமாக அமைந்துள்ளது. லுக்மானின் அறிவுரை தொடர்பான மேல் விளக்கமாக அமைவதற்காக உயர்வுமிக்க அல்லாஹ் அந்தத் தொடரைத் தனது கருத்தாக அருளியிருக்கின்றான்.

23. இந்தச் சொற்களில் இருந்து இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத், இமாம் அபூ யூசுஃப், இமாம் முஹம்மது(ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) ஆகியோர் இந்தக் கருத்தை  ஆய்ந்தெடுத்துள்ளார்கள்: குழந்தையின் பால்குடிப் பருவகாலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்தக் காலத்திற்குள் குழந்தைக்கு யாரேனும் ஒரு பெண் பாலூட்டினாள் எனில், ஹுர்மத்தே ரளாஅத் (எனும் பால்குடியை முன்னிட்ட திருமணத் தடை) உறுதியாகிவிடும். தவிர அதற்குப் பின்னர் பாலூட்டினால் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளதாக ஓர் அறிவிப்பு உள்ளது.

ஆனால் இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்கள் கூடுதல் பேணுதலுக்காக வேண்டி(பால்குடிக் காலத்தை மேலும் அரையாண்டு நீட்டித்து) இரண்டரை ஆண்டுகள் என்பதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். மேலும் அத்துடன் இமாமவர்கள் இதையும் கூறியிருக்கிறார்கள்: இரண்டு ஆண்டுகளிலோ அதற் குக் குறைவான காலத்திலோ குழந்தைக்குப் பால்குடியை மறக்கச் செய்தால்  அதன் விளைவால் குழந்தை தனது உணவுக்காகப் பால் அருந்தத் தேவையில்லை என்றிருந்தால், அதன் பிறகு ஏதேனும் ஒரு பெண்ணிடம் (அந்தக் குழந்தை) பால்குடிப்பதனால் பால்குடித் திருமணத் தடை எதுவும் உறுதிப்படாது. ஆனால் குழந்தையின் அசல் உணவு பாலாகவே நீடிக்கிறது எனில்  மற்ற உணவையும் சிறிதளவு உட்கொள்கிறது எனில், (இரண்டு ஆண்டு அல்லது அதற்கும் குறைவான) அந்தக் காலகட்டத்தில் பால்குடிப்பதன் மூலம் பால்குடித் திருமணத்தடை உறுதியாகிவிடும். ஆகையினால் குழந் தைக்குக் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகள் பாலூட்டியே ஆக வேண்டும் என்பது இவ்வச னத்தின் நோக்கம் அல்ல. இவ்விஷயம் அல்பகறா அத்தியாயத்தில் (ஒரு நிபந்தனை வாக்கியத்துடன்) கூறப்பட்டுள்ளது:

"அன்னையர் தங்களின் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும், (தன் குழந்தைக்குப்) பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்பிய மனிதனின் பொருட்டால்!' (திருக்குர்ஆன் 2: 233)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், (திருக் குர்ஆன் 31:14 ஆம் வசனத்தின்) இந்த வார்த்தைகளில் இருந்து கருவுறுதலின் குறைந்தபட்ச காலம் ஆறு மாதமõகும் எனும் கருத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். கல்வியாளர்கள் பலர் அந்தக் கருத்துக்கு உடன்பட்டிருக்கிறார்கள். இதனால்தான் குர்ஆனில் இன்னோர் இடத்தில் கூறப் பட்டுள்ளது: "அவனைக் கருவில் சுமக்க வும் பால்குடிப்பை மறக்கடிக்கவும் முப்பது மாதங்கள் பிடித்தது' (திருக்குர்ஆன் 46:15) (பால்குடி மறக்கடிப்புக்கு 2 ஆண்டுகள், கருவில் சுமக்க 6 மாதங்கள்: மொத்தம் 30 மாதங்கள்)

இது மிகவும் முக்கியமானதொரு சட்ட நுட்பமாகும். சரியான அல்லது தவறான (குழந்தைப்) பிறப்பு தொடர்பான நிறைய பிரச்னைகளுக்கு இது தீர்வாக அமைகிறது.

24. எனக்கு இணையானது என்று எதனைக் குறித்து நீ அறியமாட்டாயோ அதனை!

25. பிள்ளைகளும் பெற்றோர்களும் அனைவரும் திரும்ப வேண்டியது என் பக்கமே!

26.  கூடுதல் விளக்கத்திற்குப் பார்க்க: தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் (29) அன்கபூத் அடிக்குறிப்பு 1112.

27. அறிஞர் லுக்மானின் இரண்டாவது அறிவுரையை இங்கு எடுத்துரைப்பதன் நோக்கம் கொள்கை கோட்பாடுகளைப் போல் குணவொழுக்கம் தொடர்பாகவும் என்னென்ன அறிவுரைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமர்ப்பிக்கிறார்களோ அவையும் கூட விநோதமான புதுமையான விஷயங்கள் அல்ல என்று சுட்டிக்காட்டுவதுதான்.

28. அல்லாஹ்வின்  அறிவுஞானத்திலிருந்தும் அவன் பிடியிலிருந்தும் எந்த விஷயமும் தப்பிச் செல்ல முடியாது. கற் பாறையின் அடியிலுள்ள ஒரு தானியமணி உங்களைப் பொறுத்து மறைவானதாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்து கண்ணெதிர்விவரம் போன்றதாகும். வானங்களிலே ஏதேனும் ஓர் அணு உங்களிலிருந்து மிக மிகத் தொலைவாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வுக்கு அது மிகவும் அருகிலுள்ளதாகும். பூமியின் அடி யாழங்களில் கிடக்கும் ஏதேனும் ஒன்று உங்களைப் பொறுத்துக் கடுமையான இருளி லுள்ளதாகும். ஆனால் அவனைப் பொறுத்து முழுக்க முழுக்க வெளிச்சத்தில் உள்ளதாகும். எனவே நல்ல, கெட்ட எந்த ஒரு செயலையும் எந்நிலையிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் மறைத்துச் செய்திட உங்களால் முடியாது. அவன் அதனைத் தெரிந்துகொள்கிறான் என்பது மட்டுமல்ல, மாறாக விசாரணைக்கான நேரம் வரும் பொழுது உங்களின் ஒவ்வொரு செயலுக்கான பதிவேட்டை உங்களின் முன்னிலையில் கொண்டுவந்து வைத்து விடுவான்.

(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்