நரக நெருப்பில் எரிவது கடுமையான, மோசமான தண்டனை என்பதோடு அது மிகப் பெரும் இழிவுக்குரிய கேவலமான தண்டனையாகவும் இருக்கின்றது.
ஒருவர் இந்த உலகத்தில் தன்னுடைய சகோதரரை அவமானத்துக்கு ஆளாவதிலிருந்தும், கண்ணியம் குலைக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றார்; அதற்காகத் தம்மால் இயன்ற அளவுக்கு அனைத்தையும் செய்கின்றார் எனில், இறைவனும் அப்படிப்பட்ட நல்லியல்பும் கண்ணியமும் நிறைந்த மனிதனை மறுமையின் கேவலத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாப்பான்.
மக்களுக்குக் கண்ணியம் அளிப்பவர் எந்தக் காலத்திலும் கண்ணியத்தை இழந்து விடவும் மாட்டார்; கேவலத்துக்கு ஆளாகவும் மாட்டார். அதே போன்று எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் மானத்தோடு விளையாடுவதிலும் பிறரை அவமதிப்பதிலும் முனைப்போடு இருப்பவர் இறுதியில் மானத்தையும் கண்ணியத்தையும் பறிகொடுப்பார் என்பதும் உண்மையே.