நாள்தோறும் பல்வேறு பொதுக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. வாரம்தோறும் பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. இணையவெளியில் ஏராளமான உரைகள் நிரம்பிக் கிடக்கின்றன. அந்த உரைகளில் சிறந்தவற்றை இப்பகுதியில் தொடர்ந்து பிரசுரித்து வருகிறோம். உரை நிகழ்த்தியவரோ, கேட்டவர்களோ இப்பகுதிக்கு உரைகளை அனுப்பலாம். உரையுடன் புகைப்படத்தையும் உரை இணைப்பையும் samarasam@gamil.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல், பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக் காக ‘இந்து’ என்.ராம், அபுசாலே சரீபு ஆகிய இருவருக்கு காயிதே மில்லத் விருது ஜூலை 13 சனிக்கிழமை அன்று அறக்கட்டளை இயக்குநர் ஏ.ரபீ வரவேற்புரையில் பொதுச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் அறிமுக உரையோடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராயர் தேவசகாயம், தலைமை காஜி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப், முகம்மது இக்பால் சாஹிப், ஏ.எஸ். பன்னீர் செல்வம், மேனாள் துணைவேந்தர் வசந்திதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களைப் பற்றி நீதியரசர் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ், டத்தோ முஹம்மது இக்பால் ஆகியோர் ஆற்றிய உரைகள் இந்த இதழின் மேடையை அலங்கரிக்கிறது.
காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் திருநெல்வேலி பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே பொது வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்திய விடுதலைக்-காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். சுதந்திர மாகச் செயல்படுவதற்கு, நமது நாட்டை நாமே ஆள்வதற்கு உரிய சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காகப் பாடு பட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காந்தியடிகள் மாணவர்களை விடுதலைப் போராட்டத்திற்காக அழைத்தபோது காயிதே மில்லத்
சென்னை கிறித்தவக் கல்லூரியில் B.A படித்துக் கொண்டிருந்தார். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுத வேண்டிய நேரம். மகாத்மா காந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. தேர்வு எழுதாமல் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றார். அப்படியானால் அவருக்கு எப்படிப்பட்ட தியாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தனது படிப்பைக் கூட உதறிவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகப் பாடுபட்ட ஒரு சிறந்த மாமனிதர் காயிதே மில்லத். அவர் 1931ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். 1944இல் சென்னை மாகாணத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செப்டம்பர் 1946இல் இருந்து நவம்பர் 1949 வரை அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்குப் பாடுபட்ட 250க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்-பினர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர். அரசியல் சாசனம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதற்குப் பத்து பாகங்களைக் கொண்ட தொகுப்பு உள்ளது. அதைப் படிக்கும் போது காயிதே மில்லத்தின் பல உரைகளை அறிய முடிகிறது. காயிதே மில்லத் தமிழ் மொழியையும் அரசு மொழியாக ஏன் அறிவிக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த வாதத்தை முன்வைத்தார். அரசியல் சாசன proceedings என்று சொல்வோம் அதில் அந்தக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் சாசன மகா சபையில் பங்கேற்ற டாக்டர் சச்சிதானந்த சின்கா தற்காலிகத் தலைவராகப் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் எவ்விதப் போட்டியும் இன்றித் தலைவராகப் பொறுப்பேற்றார். proceedings ஆரம்பம் ஆனது. பிரிவியூ கவுன்சில் உறுப்பினராக இருந்த டாக்டர் ஜெயகர், ஜவஹர்லால் நேரு அரசியல் சாசனத்தின் முகவுரையை முன்வைத்தபோது டாக்டர் ஜெயகர் கூறினார் ‘பலதரப்பட்ட சமுதாய மக்கள் கொண்ட இந்த நாட்டுக்காக ஓர் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்குகிறோம். இதில் பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்’ என்றார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றொரு தேசியவாதியான டாக்டர் அம்பேத்கரிடம் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார். நான் என்னு-டைய முறை தற்போது வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து அல்லவா எனக்கு வாய்ப்பு வரும் என்று நினைத்தேன் என்று கூறியதோடு அரசியல் சாசனத்தைப் பற்றிய கருத்துகளை மூன்று நாள்கள் எடுத்து வைத்தார். ஒட்டுமொத்தமாக எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருந்து தான் இந்த சாசனத்தை உருவாக்க வேண்டும் என்று ஜெயகர் கூறினார்.
அந்தத் தொடக்க முயற்சி தோல்வி அடைந்தது. பின்னர் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அரசியல் சாசனத்தை
உருவாக்கிய உறுப்பினர்கள் அனைவரும் எந்த அளவுக்குத் தன்னலமற்ற வகையில் இந்த சாசனம் உருவாக்கப்பட
வேண்டும் என்று பாடுபட்டார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது அலீ ஜின்னா அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது காயிதே மில்லத் ‘இது எங்கள் நாடு. நாங்கள் இங்கே தான் இருப்போம். இங்கே தான் இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் நாட்டை விட்டு இடம்பெயர அவசியம் இல்லை’ என்று சொல்லி அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தார். காயிதே மில்லத் 1967இல் ராஜ்யசபா உறுப்பினரானார். 1962, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்களில் போட்டியிட்ட அவர் பரப்புரைக்காகத் தொகுதிகளுக்குச் செல்லவே இல்லை. ஏனென்றால் அவரைப் பற்றி மக்களுக்குத் தெரியும். இவரைத் தேர்ந்-தெடுத்தால் மக்கள் நலனுக்காக பொதுவாகப் பாடுபடுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சென்னை மாகாணத்தில் ஆறு கல்லூரிகள் உருவாகக் காரணமாக இருந்-தவர் காயிதே மில்லத். 1972இல் அவர் இறந்த பிறகு 1974-ஆம் ஆண்டில் அவரது பெயரில் அறக்கட்டளையும் அதைத் தொடர்ந்து கல்லூரியும் தொடங்கப்பட்டது. கல்விதான் மிக முக்கியமானது கல்வி இல்லாமல் நாம் எதையும் செ#ய முடியாது என்பதை வாழ்-வியல் பாடமாகக் கொண்டவர் காயிதே மில்லத்.
டத்தோ முஹம்மது இக்பால் அவர்கள் உரையிலிருந்து..
‘காயித்’ என்ற அரபு அல்லது உருதுச் சொல் அறிவொளி பெற்ற தலைமை, குணங்களை உணர்த்துகிறது. முன்மாதிரியான அர்ப்பணிப்பு உங்களிடம் இருந்தால், ஒரு சமூகம் அல்லது ஒரு நாட்டிற்கு ஒரு பணியில் உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டால், தலைவர் அல்லது தலைமை என்று பொருள்படும் ‘காயிதே’ என்ற பெயர்ச்சொல் ‘மில்லத்’ என்ற வார்த்தையுடன் இணையப் பெற்றால் இரண்டும் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டு வருகின்றன. மில்லத் என்பது சமூகம், நாடு, உலகம் அல்லது பிரபஞ்சம், மனிதநேயம் ஆகியவற்றைக் குறிக்கும். காயிதே மில்லத் அவர்கள் இந்தச் செயல்பாட்டுடன் தொடர்புடையவர் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை, காயிதே மில்லத் கல்லூரி அதனுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். இது ஓர் உயர்ந்த ஆளுமையின் நினைவை நிலைநிறுத்துகிறது. இந்தியர்கள், முஸ்லிம்களின் அழியாத பாரம்பரியத்தை விட்டுச் சென்றவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப். இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அவர் வடிவமைத்த பாதையையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
வரலாற்றின் பகுதிகளுக்கும், காயிதே மில்லத் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய விஷயங்களுக்கும் என்னால் ஆழமாகச் செல்ல முடியாது, எனினும் 2023-ஆம் ஆண்டிற்கான அரசியல், பொது வாழ்க்கையில் விருது பெற்றவர்களைப் புகழ்பெற்ற, கண்ணியமான நபர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் அளித்த அழைப்புக்கும் மரியாதைக்-கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.ம் காயிதே மில்லத் அவர்களின் பெயரால் நிறுவப்பட்ட இந்த விருது, இன்றுவரை நாம் அனைவரும் அதை நினைவில் கொள்வதற்கும், இரண்டு விருதாளர்களையும் வாழ்த்துவதற்கும் இங்கு கூடியுள்ளோம், இது ஒரு பரந்த அளவிலான ஆளுமைகளை அங்கீகரிக்கும் கலங்கரை விளக்கமாகும். கடந்த காலத்தில் அவர்கள் யார் என்றும், தேசியம், சமூகம், துறை ரீதியான கண்ணோட்டங்-களில் அவர்களின் சாதனைகளை அறிவதற்கும், நாமும் அதுபோல் செயல்படுவதற்கும் இந்த நிகழ்வு பெரிதும் துணை நிற்கும்.