வீண்பழியும், வெறுப்புத் தாக்குதலும்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பெருநாள் தினத்தன்று, துவாரகாபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவர் ஒரு முஸ்லிம் இளை ஞருடன் சென்றிருக்கலாம் என்று ஐயம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பஜ்ரங் தளம், ஙஏக உறுப்பினர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர்.
மஸ்ஜிதில் குண்டுவீச்சு

மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள ஒரு மஸ்ஜிதில் குண்டுவீசப்பட்டது. விஜய் கவானே, ஸ்ரீராம் சாக்டே ஆகிய இருவர் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பீட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நவ் நீத் கோன்வாட் கூறுகையில், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்படும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது க்அகஅ வழக்கும், புல்டோசர் நடவடிக்கையும் எடுக்கப்படுமா?
ஈத்காவிற்கு மறைமுகத் தடை

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈத்காவில் ஈத் தொழுகை நடத்தப்படாது என்று ஜம்மு காஷ்மீர் வக்ஃப் வாரி யம் அறிவித்துள்ளது. பாஜகவைச் சார்ந்த ஜம்முகாஷ்மீர் வக்ஃப் வாரியத் தலைவரான தர்ஷன் அந்தரபி மூலமாக இத்தகைய அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது. பாரம்பரியமாக ஈத் கூட்டங்களுக்கான முக்கிய இடமான ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பாதுகாப்புக் கவலைகள், பாதகமான வானிலை காரணமாக அண்மைக்காலத்தில் இடையூறுகளை எதிர்கொண்டது. ஈத்கா மைதானத்தில் பல அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் ஒன்று கூடும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓர் அரசியல் நடவடிக்கையெனப் பலரும் விமர்சித்துள்ளனர்.
பசுக்குண்டர்களின் அராஜகம்

கர்நாடகாவின் மூட்பித்ரி தாலுகாவில் உள்ள பெலுவாய் கிராமத்தின் காந்த்வாரா குறுக்கில் 28.03.2025 அன்று எருதுகளை ஏற்றிச் சென்றபோது, பசுக் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ஓட்டுநரான அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து எருதுகளின் உரிமையாளரான கூசா பூஜாரியும் தாக்குதலுக்கு உள்ளானார். ‘சட்டவிரோதமாக எருதுகளைக் கடத்தியதாகக் கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எங்களிடம் இதற்கான உரிய அனுமதி இருக்கிறது என்பதை நாங்கள் கூறுவதற்குக் கூட நேரம் தரபடவில்லை’ என்று அவர்கள் கூறினர்.
நீக்கப்படும் முஸ்லிம்கள்

மார்ச் 24 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் பாவோண்டா சாஹிபில், தீவிர வலதுசாரிக் குழுவான ருத்ரசேனாவின் நிறுவனர் ராகேஷ் தோமர், முஸ்லிம் கடைக்காரர்கள் ஏழு நாள்களுக்குள் தங்கள் கடைகளைக் காலி செய்து நிரந்தரக் குடியிருப்போர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று எச்சரித்தார். நிர்வாகத்திடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கடைக்காரர்கள் பதிலளித்தபோது, அவர்கள் நீக்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தோமர் அவர்களை மிரட்டியுள்ளார்.
இடிக்கப்படும் குடியிருப்புகள்

குருகிராமின் செக்டார் 39இல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமார் 300 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளை ஹரியானா நிர்வாகம் முன்னறிவிப்பு இல்லாமல் இடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்ஷா கிராமத்தில், மேற் கொள்ளப்பட்ட இந்த இடிப்பு, அவர்கள் ‘வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற ஐயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகப் பலர் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் பலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குருகிராமில் வசித்து வருகின்றனர். இப்போது வீடற்றவர்களாக உள்ளனர்.
நாடியா, மால்டா, முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி இது என்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ரிக்ஷா இழுத்தல், தொழிற்சாலை வேலை, தெரு விற்பனை, வீட்டு வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்தத் தொழிலாளர்கள், காலியாக உள்ள நிலத்தில் தகரக் கூரை வேயப்பட்ட தங்குமிடங்களைக் கட்டியுள்ளனர்.
பரவும் திரைப்பட வெறுப்பு

மார்ச் 26ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் புது தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் கடைக்காரர்களால் ஹிஜாப் அணிந்த ஒரு பெண்ணும் அவரது தோழியும் இஸ்லாமிய வெறுப் புடன் நடத்தப்பட்ட னர். ‘முதலில், கடைக்காரர்கள் சாவா திரைப்படத்திலிருந்து ‘ஜெய் பவானி’ என்று சத்தமாக முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் என்னைக் கவனித்ததும், அவர்களின் தொனி மாறியது ‘நாங்கள் ஔரங்கஜேபின் குழந்தைகளுக்குத் துணிகளை விற்கவில்லை’ என்று அவர்கள் கூறினர்’ என்று டெல்லி பல்கலைக்கழக மாணவி 19 வயது நிதா சுல்தானா கூறினார்.
தர்ஹாவில் வெறுப்புக் கோஷம்

ஏப்ரல் 6, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், சையத் சலார் காஜி தர்ஹாவில் காவிக் கொடிகளை ஏந்தி தர்ஹாவிற்கு மேல் ஏறி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். கல்லறையை அகற்றி கோயில் கட்ட வேண்டும் என்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நசுக்கப்படும் ஜனநாயக உரிமை

முதல்வர் நிதிஷ் குமாரின் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட முஸ்லிம் தலைவர்களைக் கேள்வி கேட்டதற்காக பீகாரின் கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஃபஸ்லுல் முபீன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிஜிட்டல் தளமான மில்லி கபரின் ஆசிரியர் ஃபஸ்லுல் முபீன், நிகழ்வில் சில முஸ்லிம் பிரமுகர்களின் படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர்கள் வருகையை விமர்சிக்கும் ஒரு பதி வையும் வெளியிட்டார்.
முபீனின் பதிவிற்குப் பிறகு, ஜே.டி(யு)வின் கிசான் செல்லின் தலைவரான அஸ்கர் அலீ காவல்துறையில் புகார் அளித்தார். மூத்த ஜே.டி(யு) தலைவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று முபீன் நம்புகிறார். எஃப்.ஐ.ஆரில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 352, பிரிவு 356(2), பிரிவு 302 ஆகிய வழக்குகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தி அப்சர்வர் போஸ்ட்டிடம் பேசிய முபீன், ‘இந்த முஸ்லிம் தலைவர்கள் ஏன் முக்கியமான விஷயங்களில் அமைதியாக இருந்தார்கள், ஆனால் இஃப்தார் விருந்தில் சாப்பிடச் சென்றார்கள்? என்று நான் கேள்வி எழுப்பினேன். இது எனது ஜனநாயக உரிமை’ என்று கூறியிருந்தார்.
எதிர்ப்புக்குத் தண்டனை?

வக்ஃப் திருத்த மசோதாவை அமைதியாக எதிர்த்துப் போராடியதற்காக தம்பூர் நகரத்தைச் சேர்ந்த 60 நபர்கள் மீது சீதாபூர் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள சட்ட நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு உள்ளா கியுள்ளது. பல இமாம்கள், மௌலானாக்கள் உட்பட பொதுமக்கள் ஈத் தொழுகையின் போது தங்கள் கைகளில் கருப்புப் பட்டைகளை அணிந்திருந்தனர், இது எதிர்ப்பின் அடையாள வடிவ மாகும். சட்ட நடவடிக் கைகளுக்கு லஹர்பூர் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் (குஈM) ஒப்புதல் அளித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா <1,00,000 பாதுகாப்புப் பத்திரத்தைச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் அமைதியாக இருந்தது, வன்முறை அல்லது பொது இடையூறுகள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் அதிகாரிகள் அமைதி மீறல் உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
முஸ்லிம்களை வெளியேற்றும் தீய திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில், இந்து ஜாக்ரன் மஞ்சின் அருண் சர்மா, முஸ்லிம் குடியிருப்பாளர்களை தேவபூமி (கடவுளின் நிலம்) என்று கூறி, அந்த மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அறி வுறுத்தினார். மேலும் அவர்களின் ஆவணங் களையும் கோரினார். இது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.