மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அல்லாஹ் வடிவமைக்கும் அழகிய சமூகம்

இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள்
K. ரியாஸ், மே 01 - 15, 2025


இந்த மாத இந்தியா 16

 

 


தொடரும் வெறுப்பு முழக்கம்

ஏப்ரல் 12 அன்று கொல்கத்தாவில், இந்து தேசியவாதக் குழுக்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகங்கள் கொண்ட காவிக் கொடிகளை முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மீது வைக்க முயற்சித்தனர்.

‘ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுபவர்கள் மட்டுமே இந்தியாவில் வாழத் தகுதியானவர்கள் என்றும், மற்றவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்தனர். இந்த இஸ்லாமிய வெறுப்புச் செயல் வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடையது.

சிறுவர்கள் மீது வெறுப்புத் தாக்குதல்

ஏப்ரல் 13, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மகாராஜ்பூர் காவல் வட்டத்தின் சர்சால் பகுதியில், 13 வயது முஸ்லிம் சிறுவன் ஒருவன் சிறார்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தான். அந்தக் குழு கோரியபடி, சிறுவன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை உச்சரிக்க மறுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மூன்று சிறார்கள் முதலில் சிறுவனை வணங்கித் தங்கள் கால்களைத் தொடுமாறு கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவன் மறுத்தபோது, மத முழக்கத்தை உச்சரிக்குமாறு அவர்கள் கோரினர். சிறுவன் தொடர்ந்து மறுத்த போது, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கண்ணாடி பாட்டிலை உடைத்து, அதன் ஒரு துண்டைப் பயன்படுத்தி தொடையில் குத்தியதாகக் கூறப்படுகிறது. சிறுவன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில் ஊஐகீ பதிவு செய்யப்பட்டது, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மத வெறுப்புச் சாயம்

காசியாபாத்தில், இந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்தில் பகதூர் ஷா ஜாபரின் ஓவியத்தை ஔரங்கஜேப் என்று தவறாக நினைத்து அதன் மீது கருப்பு வண்ணத்தைத் தெளித்தனர். ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தின் அத்துமீறல்

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்(IGNOU) பழங்குடி குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவரும், டெல்லியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான லியாக்கத் அலீ ஏப்ரல் 18ஆம் தேதி தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள நவ்ஷேராவில் உள்ள லாம் கிராமத்திற்கு அருகே சென்றபோது, ரஜோரி மாவட்டத்தில் 58 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் வீரர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, அவருக்குத் தலையில் பலத்த காயங்களுடன் ஏழு தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து இந்திய ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த இந்தச் சம்பவம், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. பொதுமக்கள் பகுதிகளில் ராணுவத்தின் அத்துமீறல் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

வெறுப்புப் பதிவர்

கேரளாவைச் சேர்ந்த அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான கே.ஆர். இந்திரா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமிய வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் பதிவைப் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும், மதப் பேரணிகளை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக வன்முறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தப் பதிவை பின்னர் இந்திரா நீக்கினார். இந்தப் பதிவின் ஆத்திரமூட்டும் வெறுக்கத்தக்க தன்மை இருந்தபோதிலும், கேரள காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பது குறித்து அவர்கள் செயல்படாதது குறித்து கவலைகளை எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.ஆர். இந்திரா பிளவுபடுத்தும், வகுப்புவாத அறிக்கைகளை வெளியிடுவதில் வரலாறு கொண்டவர். 2020ஆம் ஆண்டில், பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் முஸ்லிம்கள் குறித்த தனது கருத்துகளுக்காக அவர் பரவலான விமர்சனங்களைப் பெற்றார். உலகைக் காப்பாற்ற கருத்தடை மருந்துகளைக் குடிநீரில் கலந்து முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திரா பரிந்துரைத்தார்.

வெறுப்பு ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்காளத்தில் புதிய வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து அந்தப் போராட்டத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக ‘வங்காள முஸ்லிம்களே திரும்பிச் செல்லுங்கள்’ என்று கோரி, டெஹ்ராடூனில் இந்து ரக்ஷா தள உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஸ்ஜித் இடிப்பு

ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள பட்கல் கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான அக்ஸா மஸ்ஜித், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என நகராட்சியால் இடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் இந்தக் கட்டடம் சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெரிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்

டெல்லி பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து விவாதிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி வளாகத்தில் ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டுள்ளது.

’ABVP நிகழ்வுகளுக்கு விஐபி மரியாதை அளிக்கப்படுகிறது, ஆனால் வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான பிரச்னைகளில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்களைத் தடுக்க காவல்துறை அதிக அளவில் வருகிறது’ என்று மாணவர்கள் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

வெறுப்புப் பிரதமர்

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூழலில் ‘வக்ஃப் சொத்துகள் நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இளம் முஸ்லிம்கள் வாழ்க்கைக்காக பஞ்சர்களைச் சரிசெய்ய வேண்டிய அவசியமில்லை’ என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறியது எதிர்க்கட்சித் தலைவர்கள், விமர்சகர்களிடமிருந்து கடுமையான எதிர் வினையைத் தூண்டியுள்ளது.

நாட்டின் வேலையின்மை நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அதே வேளையில் சாதிய, இஸ்லாமிய வெறுப்புக் கருத்துகளை மோடி கூறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘நாட்டின் நலனுக்காக கீகுகு தனது சித்தாந்தத்தையும் வளங்களையும் பயன்படுத்தியிருந்தால், மோடி தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டியிருக்காது’ என்று அசாத்துதீன் ஒவைசி ஙீ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிஜாப் மீதான வெறுப்பு

உத்தரப்பிரதேசம் முசாபர் நகரில் உள்ள காலாப்பூரில் 12ஆம் தேதி ஒரு முஸ்லிம் பெண்ணும் ஆணும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 10பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி அதில் ஒரு நபர் அந்த முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்ற முயற்சிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து கூறிய முஸ்லிம் பெண், அவர்கள் ஹிஜாபை அகற்றுவதைத் தடுக்க முயற்சித்த போது அவர்கள் அந்தப் பெண்ணை ஆபாச வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் தாக்கியதாகக் கூறினார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட சலூன்

புனேவின் கோத்ருட் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தொழிலாளி உஜ்வாலா கவுட், கோத்ருட்டில் உள்ள அர்ஷ் யுனிசெக்ஸ் சலூனின் ஊழியரான ஒரு முஸ்லிம் இளைஞர் லவ் ஜிஹாதில் ஈடுபட்டதாகக் கூறி சலூனைச் சேதப்படுத்தி, அதன் ஊழியர்களைத் தாக்கினர், அவர் ஓர் இந்துப் பெண்ணை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சலூன் கடை நடத்தும் ஜாவேத் தாக்கப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைக்காக கோத்ருட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையில், கோத்ருட் டி.சி.பி சந்தீப் தேஷ்மானே, ‘லவ் ஜிஹாத்’ வழக்கு எதுவும் இல்லை என்றும் சிறுமி கலிமாவை ஓத கட்டாயப்படுத்தப்பட்டதற்கான எந்த தொழில்நுட்ப ஆதாரமும் இல்லை எனவும் கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட ஹக்

போராம் பயஸ்தி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது முஸ்லிம் விவசாயியும், புலம்பெயர் கூலித் தொழிலாளியுமான ஜஹானூர் ஹக் என்பவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் சித்ரவதை செய்து, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியான கம்பெனி கமாண்டர் பல்வந்த் ஹக்கை கீழே தள்ளி, அவரது மார்பின் மீது ஏறி நின்று, அவரது இடுப்புக்குக் கீழே சுட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு ஆகுஊ வீரர் அவரது தலையில் இரண்டாவது முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின், உடல் கூச் பெஹாரில் உள்ள MJN மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. ஆனால் மருத்துவ நிபுணர் கிடைக்காத காரணத்தால் உடற்கூராய்வு அடுத்த நாள் வரை தாமதமானது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, வலது புருவத்திற்கு மேலே துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தபோதிலும், உடற்கூராய்வு அறிக்கையில் மண்டை ஓடு பரிசோதனை செய்யப்படவில்லை. இது சாத்தியமான தடயங்களை அழித்திருக்கலாம் அல்லது நடைமுறை ரீதியான அலட்சியமாக இருக்கலாம் என்ற ஐயங்களை எழுப்புகிறது. ஹக்கை ஒரு கடத்தல்காரன் என்று முத்திரை குத்தி ஆகுஊ இந்த கொலையை நியாயப்படுத்தியதாகத் தெரிகிறது. இருப்பினும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விசாரணையும் தொடங்கப்படவில்லை. உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுவரொட்டி வழக்கு

உத்தரப்பிரதேசம் நரௌலி நகரத்தில் உள்ள கடைகளின் சுவர்களில் ‘சுதந்திர காஸா, சுதந்திர ஃபலஸ்தீன்’ என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக சம்பல் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியப் பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் இஸ்ரேலியப் பொருட்களைப் புறக்கணிக்கவும் அந்தச் சுவரொட்டி அழைப்பு விடுத்துள்ளது. இச் சம்பவத்தில் அசிம், சைஃப் அலீ, ரஹீஸ், மத்லூப், ஃபர்தீன், அர்மான், அர்பாஸ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டதாக சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் எந்தப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சம்பல் காவல்துறை தெளிவுபடுத்தவில்லை


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்