மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அல்லாஹ் வடிவமைக்கும் அழகிய சமூகம்

இந்த மாத இந்தியா 17
k. ரியாஸ், மே 16-31, 2025



இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள்


வெறுப்பை உமிழும் பாஜக MP

மத்தியப்பிரதேச  மாநிலம் போபாலில் கடந்த மாதம் நடந்த பொது நிகழ்வில் பேசிய பாஜக Mக அலோக் சர்மா, ‘லவ்  ஜிஹாத்  வழக்குகளில் சிக்கியவர்களுக்குக்  கருத்தடை செய்யப்படுவதை  அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.பொதுமக்களை  ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியதுடன் இதுபோன்ற சம்பவங்கள் எங்கு பதிவானாலும், என்னை நேரடியாக  அழையுங்கள். தேவைப்பட்டால், உடனடியாக காவல் நிலையங்களைச் சுற்றி வளையுங்கள்’ என்று வெறுப்பை உமிழ்ந்தார்.

பஹல்காமை முன்வைத்து பரப்பப்படும் வெறுப்பு

மேற்கு வங்கத்தின் கோபால் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அகய்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பொதுக் கழிப்பறையின் சுவரில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஒட்டி சமூக பதற்றத்தை ஏற்படுத்தியதன்  பின்னணியில் சனாதனி ஏக்தா மன்ச் என்ற இந்துத்துவா  அமைப்பைச் சார்ந்த சந்தன் மலகர்(30), புரோக் யாஜித் மொண்டல்(45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது ‘இந்துஸ் தான் முர்தாபாத்’, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ போன்ற வெறுப்பு வாசகங்களையும் எழுதத் திட்ட மிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவர் ‘பஹல்காமில் நடந்த கொலை களுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் தான் இது’ என நீதிமன்றத்தில் கூறினார்.

வெறுப்புப் பழி

‘சட்டவிரோத பாகிஸ்தானியர்கள், வங்கதேசிகள் குறித்த தரவுகளை தெலுங்கானா முதல்வர் வெளி யிட வேண்டும்’ என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரகுநந்தன் ராவ் தெரிவித்தார். தெலுங் கானா  மாநிலத்தில் நடந்த பல வகுப்புவாத கலவரச் சம்பவங்களைக் குறிப்பிட்ட  அவர், ‘கோயில் சேதப்படுத்தப்பட்ட சம் பவம்,  குரங்குகளால் நடந்தது என போலீசார் நடத்திய சிசிடிவி ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதை மதரஸா மாணவர்கள் தான் செய்தார்கள்’ என்றார்.

வெறுப்பு முழக்கம்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகரில் ஏப்ரல் 28ஆம் தேதி வலதுசாரி இந்துக் குழுக்களால் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தின் போது நடத்தப்பட்ட போராட்டத்தில் பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது அப்பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியது.

வரம்பு மீறும் வகுப்புவாதிகள்

ஏப்ரல் 30 அன்று உத்தரகாண்டிலுள்ள நைனிடாலில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு வயதான முஸ்லிம் நபர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து மருத்துவப் பரிசோதனை செய்த போதிலும், அந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட நபர் வேலை செய்த கடையில் உள்ள முஸ்லிம்களைத் தாக்கினர். மேலும் ஒரு மஸ்ஜித், முஸ்லிம்களின் கடைகளைத் தாக்கினர்.

மிரட்டல்

ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் மாணவர்கள், தொழிலதிபர்களை வெறுப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான அவரின் முயற்சியின் காரணமாக இந்த மிரட்டல் வந்திருப்பதாகக் கூறினார்.

அநாகரிகம்

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு பூங்காவில் இரண்டு  முஸ்லிம் பெண்கள்  தொழுகை நடத்திய பிறகு, வலதுசாரிக் குழுவான இந்து சகால் சமாஜைச் சேர்ந் தவர்கள் பசுவின் சிறுநீரைத் தெளித்து சுத்திகரிப்பு சடங்கைச் செய்தனர்.

தாக்கப்படும் காஷ்மீர் மாணவர்கள்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருந்தக மாணவர், ஏப்ரல் 27 அன்று, நாக்பூரின் காம்ப்டி பகுதியில் உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டார். தோடா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர், தனது நண்பருக்காகக் காத்திருந்தபோது உள்ளூரில் உள்ள ஒரு குழு அவரிடம் எங்கிருந்து வந்திருக்கிறாய்? ஏன் இங்கு இருக்கிறாய்? எனக் கேட்டு அவர் பதில் அளிக்கத் தயங்கியதும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரது நண்பர் திரும்பி வந்ததும் அவர்கள் மாணவர்கள் என்று தெளிவுபடுத்தினார், அதன் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களை விடுவித்தனர்.

விரட்டப்படும் காஷ்மீர் வியாபாரிகள்

ஏப்ரல் 23 அன்று முசோரியில் இரண்டு காஷ்மீர் சால்வை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டு, தங்கள் உடைகளை மூட்டை கட்டி அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். காஷ்மீரைச் சேர்ந்த மேலும் 16 தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் படி மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தத் தொழிலாளர்கள் அங்கு அமைதியாகத் தொழில் செய்து வருவதாகக் கூறிய ஒரு தொழிலாளி இது இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு தெரிந்தும் யாரும் எங்களைப் பாதுகாக்க வரவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். எனவே பாதுகாப்புக்குப் பயந்து அனைத்து விற்பனையாளர்களும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறினர். வியப்பூட்டும் விதமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரிகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்

ஏப்ரல் 27 அதிகாலையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் அரசு ரயில்வே காவல்துறை(GRP)  அதிகாரி நாசர் தௌலத் கான் பணியில் இருந்த போது, பார்க்கிங் வளாகத்தில் மூன்று இளைஞர்கள் மது அருந்துவதைக் கண்டு அவர்களிடம் பொது இடத்தில் மது அருந்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டு கோபமடைந்த நபர்கள் நாசரின் முஸ்லிம் அடையாளத்தால் அவரை இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளால் திட்டி, தாக்கத் தொடங்கினர். நாசரின் சக ஊழியர்களான சந்தீப், கமல் தலையிட முயன்ற போதிலும், நீங்கள் இந்துச் சகோதரர்கள் விலகிச் செல்லுங்கள் என கூறிவிட்டு நாசரைத் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் தாக்கினர்.

தாக்கப்பட்ட முஸ்லிம் குடும்பம்

 

2025 ஏப்ரல் 5 அன்று உத்தர காண்ட் மாநிலம் டோய்வாலாவில் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஒரு முஸ்லிம் குடும்பம் கொடூரமாகத்  தாக்கப்பட்டது. சுமார் 5,6 பேர் கொண்ட ஆண்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் பெயர்களையும் மதத்øதயும் கேட்டு, அவர்கள் முஸ்லிம்கள் என்பதை அறிந்ததும் இரும்புக் கம்பிகள், கத்திகளால் தாக்கினர். தாக்குதலில் அவர்களின் வாகனமும் சேதமடைந்தது. இரத்தக் காயங்களுடன் அவர்கள் சாலையில் நிற்கும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்கள் மீது பாயும் வெறுப்பு

 

பீகார் மாநிலம் பேலாவில் உள்ள ஹசன்பூர் கிராமத்தில், ஏப்ரல் 5 அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, இந்துச் சிறுவர்கள் குழுவினால் முஸ்லிம் குழந்தைகள் தாக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்குமாறு கட்டாயப்படுத்தினர், மறுத்தால் அவர்களின் கழுத்தை அறுத்து மரத்தில் தொங்கவிடுவதாக மிரட் டினர்.

தாக்கப்பட்ட முஸ்லிம் காவலர்

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள மல்லிதாலில் சப்இன்ஸ் பெக்டர் ஆசிப் கான், கலவரக்காரர்களால் கொடூர மாகத்  தாக்கப்பட்டார்.  அவரது  சீருடைகிழிக்கப்பட்டது, மேலும் கொலை மிரட்டல் விடுக் கப்பட்டது.

வெறுப்புத் தாக்குதல்

ஏப்ரல் 29 அன்று, பீகாரில் உள்ள சமஸ்திபூரில் வசிக்கும் காரி முஹம்மது ரியாஸ், ஒடிசாவின் கெந்துஜார் மாவட்டத்தில் உள்ள பார்பில் என்ற நகரத்திலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

சம்பல்பூரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு, மோதிஜரான் பகுதியில் உள்ள மதரஸா பைசான் இ அலிக்குச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறினார். அப்போது நான்கு பேர் அவரிடம் எங்கிருந்து வந்துள்ளாய் என வினவி அவரின் ஆதார் அட்டையை காண்பிக்குமாறு கேட்டு அவரை பங்களாதேஷி, பாகிஸ்தானி என இன்னும் பல இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளால் திட்டி மரக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பிரிவினை முழக்கங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், பஹல்காமில்  சுற்றுலாப்  பயணிகள்  கொல்லப்பட்டதற்கு எதிராக இந்து யுவவாஹினி ஏற்பாடு செய்த போராட்டத்தில், பங்கேற்பாளர்கள்  முஸ்லிம்களைக்  குறிவைத்து, ‘இந்த நாடு முல்லாக்கள்,  காஜிகளுக்கு அல்ல, வீர சிவாஜிக்குச் சொந்தமானது. எங்கள் மதத்தைச் சொன்ன பிறகு அவர்களைக் கொல்வோம்’ என்று மிரட்டினர்.

பகல் படுகொலை

கர்நாடகாவின் மங்களூரு நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புறநகர் பகுதியான குடுபுவில், கேரளாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர் 25க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். உள்ளூர்வாசிகள் ‘இந்து மைதானம்’ அல்லது ‘சாம் ராட் மைதானம்’ என்று அழைக்கப்படும்  கிரிக்கெட்  மைதானத்திற்கு அருகில்  உள்ள   பத்ரா கல்லூர்டி கோயிலுக்கு அருகில் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக் கின்றனர்.

‘இது பிற்பகல் 3 மணியளவில் நடந்தது. அவர் தடிகளால் தாக்கப்பட்டார், குத்தப்பட்டார், உதைக்கப்பட்டார். அவர் நிறுத்துமாறு கெஞ்சிக் கொண்டே இருந்தார்’ என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் செய்தியாளர்களிடம் கூறினார். ‘சிலர் தலையிட முயன்றனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் அவர் சரிந்து விழும் வரை நிறுத்தவில்லை’ என்றார்.

வெறுப்பைக் கக்கும் ஊடகங்கள்

அண்மைக்காலச்  செய்தி அறிக்கைகளில் ‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தையை ஒரு குற்றத்துடன் இணைத்து ஒட்டுமொத்த சமூகத் தையும் அவதூறு செய்ததற்காக இரண்டு முக்கிய இந்தி செய்தித்தாள்களான தைனிக் பாஸ்கர், நவ் துனியா மீது சட்டப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தியதற்காகவும், தவறான தகவல்களைப் பரப்பியதற்காகவும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் மஃரூப் அஹமது கான் கோரியுள்ளார்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்