மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அல்லாஹ் வடிவமைக்கும் அழகிய சமூகம்

இந்த மாத இந்தியா 30
K. ரியாஸ், 1-15 டிசம்பர் 2025



இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள்



பெயரில் பரவும் வெறுப்பு

புதிய வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் முகலாயப் பேரரசர் அக்பர், திப்பு சுல்தான் ஆகியோரின் பெயருக்கு முன்னால் ‘தி கிரேட்’ என்று இனி பயன் படுத்தப்படாது என்று கீகுகு தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்தார். தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்(Nஇஉகீகூ) பல மாற்றங்களைச் செய்துள்ளது. ஆனால் எந்த வரலாற்றுப் பெயரும் நீக்கப்படவில்லை என்றார். ‘பல நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்’ என்று அவர் கூறினார்.

தொடரும் அச்சுறுத்தல்கள்

காஷ்மீர் சால்வை விற்பனையாளர்கள், மாணவர்களைத் துன்புறுத்துதல், விவரங்கள் கேட்டு மக்களைத் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்குமாறு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகுவை Jammu and Kashmir Students Association (J&KSA) மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீர் விற்பனையாளர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் பைகள் சோதனை செய்யப்படுவதாகவும், மாணவர்கள் விவரங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் மிரட்டுவது, வாடகை அறைகளிலிருந்து திடீரென வெளியேற்றப்படுவது போன்றவற்றை எதிர்கொள்வதாகவும் ஒஓகுஅவின் நசீர் குவேஹாமி கூறினார். இது போன்ற நடவடிக்கைகள் வகுப்புவாதப் பதற்றத்தை உருவாக்குவதாகவும், அரசியலமைப்பு மதிப்புகளுக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார். நியாயமான விசாரணை, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை, காஷ்மீர் வர்த்தகர்கள், மாணவர்களுக்குப் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை ஒஓகுஅ கோரியுள்ளது.

கட்டமைக்கப்படும் சித்திரம்

2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் தலைவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் எனப் பிறரின் பிணை மனுக்களை எதிர்க்கும்போது, ‘வன்முறையில் ஈடுபடுபவர்களைவிட படித்தவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

டெல்லி காவல்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா முன், குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரணையில் தாமதத்தை ஏற்படுத்தியதாகவும், ஜாமீன் பெற அந்தத் தாமதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வாதிட்டார். 2019, 2020ஆம் ஆண்டுகளில் சகந்த், ஜாமியா, அலிகார், அசன்சோலில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷர்ஜீல் இமாம் ‘ஆத்திரமூட்டும் உரைகள்’ என்று விவரித்ததை நீதிமன்ற வீடியோக்களில் காட்டினார். இமாம் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதை ராஜு சுட்டிக்காட்டினார். ‘இப்போதெல்லாம் மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் தொழில்களைச் செய்யவில்லை, மாறாகத் தேச விரோத செயல்களில் ஈடுபடும் போக்கு உள்ளது’ என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக PTI தெரிவித்துள்ளது.

பரவும் ஐயத்தின் பார்வை

ஜம்மு காஷ்மீரின் தோடா, கிஷ்த்வார் மாவட்டங்களைச் சேர்ந்த 44 தொழிலாளர்கள் குழுவை அசாமில் உள்ள நியூ டின்சுகியா ரயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் ஐயத்திற்குரியவர்கள் என்று முத்திரை குத்தி சிறைப்படுத்தினர். அருணாச்சலப் பிரதேசத்திற்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்தவர்களை போலீசார் அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திய பின்னர் வெளியேற அனுமதித்தனர்.

அவர்களைச் சுற்றியுள்ள மக்கள், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்று கோரினர். நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு காரணமாக ஐயத்திற்குரிய நபர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மின் கட்டிடத் திட்டத்திற்காக ஓர் ஒப்பந்தக்காரரால் பணியமர்த்தப்பட்ட திறமையான தொழிலாளர்கள் இவர்கள் என்று எஸ்எஸ்பி குமார் கூறினார்.

கடந்த வாரம் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிலிருந்து அசாமில் பதற்றம் அதிகமாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் காட்டும் செய்திகளை ஆன்லைனில் இடுகையிட்டதாகவோ அல்லது பகிர்ந்ததாகவோ குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை, இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இருபத்தொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனாதன வெறுப்புப் பேச்சுகள்

2025 நவம்பர் 21 உத்தரகாண்ட்டின் ஹரித்வாரில் நடைபெற்ற விஸ்வ சனாதன் மகா பீடத்தின் பிரகடனம் சிலா பூஜை விழாவில் பல தீவிர வலதுசாரித் தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாமண்டலேஷ்வர் ஹரிசேத்ன மகாராஜ், மத மாற்றங்களைத் தடுப்பதில் துறவிகள் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

நில ஜிஹாத், லவ் ஜிஹாத் விவகாரங்களுக்காகவும், மதரஸாக்களை மூடியதற்காகவும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியைப் பாராட்டினார். மற்ற மாநிலங்கள் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போதுதான் நாடு முழுவதும் சனாதன் காணப்படும் என்று கூறினார்.

வக்ஃப் வாரியம் இருந்தால் ஏன் சனாதன வாரியம் அமைக்க முடியாது என்று தேவ் கினந்தன் தாக்கூர் கேள்வி எழுப்பினார். மேலும் முஸ்லிம், கிறித்தவக் குழந்தைகள் மதரஸாக்கள், கான்வென்ட் பள்ளிகளில் தங்கள் மத நூல்களைப் படிக்கும்போது இந்துப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்புவதை விமர்சித்தார்.

இந்துக் குழந்தைகளுக்குச் சனாதன தர்மம் பற்றிய வலுவான அறிவு இருந்திருந்தால் அயோத்தி, காசி விஸ்வநாதர், கிருஷ்ண ஜென்மபூமி கோயில் போன்றவை நிறுவப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். அண்மையில் நடந்த சனாதன் இந்து ஏக்தா பாத யாத்திரையையும் அவர் குறிப்பிட்டு, அனைத்து இந்து மத, புனித யாத்திரைத் தலங்களையும் இறைச்சி, மது இல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.

மத போதகர் அனிருத்தாச்சார்யா பாலிவுட் திரைப்படமான பி.கேஐ மேற்கோள் காட்டி, பாலிவுட் லவ் ஜிஹாத் என்று குற்றம் சாட்டினார். பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத், கட்டாய மதமாற்றங்கள் போன்ற முஸ்லிம் விரோதச் சதிக் கோட்பாடுகளைத் தடுக்க வேண்டும். ‘ரோஹிங்கியா, வங்காளதேச குஸ்பைத்தியா (ஊடுருவுபவர்கள்), மக்கள்தொகை மாற்றம், குண்டுவெடிப்பு சதித்திட்டங்களிலிருந்து விடுதலை வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.

நில ஜிஹாத் வெறுப்பு

நவம்பர் 21 உத்தரகாண்ட்டின் ஹரித்வார் ரூர்க்கியில் ஜீவன் தீப் சேவா நியாஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மாநிலத்தின் கலாச்சாரம், மக்கள் தொகை அமைப்பைப் பராமரிப்பதற்கான தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மதமாற்றம், கலவரங்கள், லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத், ஜிஹாத் ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்துவதை அவர் குறிப்பிட்டார். மேலும் அத்தகைய ஜிஹாதி மன நிலைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.

லேண்ட் ஜிஹாத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலங்களை நில ஜிஹாதிகளிடமிருந்து விடுவிப்பதாகவும், சட்டவிரோதம் என்று கூறி 250க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மூடப்படுவதாகவும் அவர் கூறினார். மதரஸா வாரியத்தைக் கலைக்கும் மசோதாவைப் பற்றி அவர் குறிப்பிட்டார். உத்தரகாண்டில் உள்ள அவர்களின் கல்வி வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் மதரஸாக்கள் மட்டுமே செயல்படும் என்று கூறினார்.

வீண்பழி

நவம்பர் 17 உத்தரகாண்ட்டின் நைனிடால் ஹல்த்வானியில் இந்து தேசியவாத ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஒரு கோயிலுக்கு அருகில் ஒரு கன்றின் தலை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல்துறை விசாரணையில் ஒரு நாய் தலையை எடுத்துச் சென்று கோயில் அருகே போடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.

இடிப்புத் திட்டம்

நவம்பர் 17 உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் விஸ்வ இந்து மகாசங்கக் கூட்டத்தில் தலைவர் அனுஜ் சிங், ‘அயோத்தியைப் போலவே, கிருஷ்ண ஜென்ம பூமி, காசி விஸ்வநாதரையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிப்பதற்கான தங்கள் தீர்மானத்தை அறிவித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முடிவால்தான் ராமர் கோயில் கட்டப்பட்டது என்றும், கிருஷ்ண ஜென்மபூமி, காசி விஸ்வநாதரையும் ஆக்கிரமிப்புகள் என்று அவர் கூறியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு அவருக்குப் பலம் அளிக்குமாறும் வலியுறுத்தினார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்