மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

வட்டியின்நுழைவாயில்
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா , Feb 1 - 15


வட்டியின் நுழைவாயில்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் இன்னொருவரிடம் கடன் கொடுத்தால், உங்களிடம் கடன் வாங்கியவர் உங்களுக்கு ஏதேனும் ஒன்றை அன்பளிப்பாக அளித்தாலோ, அல்லது பயணம் போவதற்காக (குதிரையையோ, ஒட்டகத்தையோ) பிராணியைக் கொடுத்தாலோ அவர் அந்தப் பிராணியில் ஏறி எங்கேயும் போகவும் கூடாது.அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட பொருளை வாங்கவும் கூடாது.கடன் கொடுப்பதற்கு முன்பு இத்தகைய கொடுக்கல் வாங்கல் இருந்தாலே தவிர.'

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)
நூல் : இப்னு மாஜா, பைஹகி

இன்னொரு அறிவிப்பில் ‘ஒருவர் இன்னொருவருக்காகப் பரிந்துரை செய்திருந்து,அவரால் பரிந்துரைக்கப்பட்டவர் அவருக்கு அன்பளிப்பு அளிக்க,அதனை அவர் ஏற்றுக்கொள்வாரேயானால் திண்ணமாக அவர் வட்டியின் நுழைவாயில்களில் மிகப் பெரும் நுழைவாயிலின் ஊடே உள்ளே நுழைந்தவராகின்றார்'என்கிற வாசகங்கள்
இடம் பெற்றுள்ளன.

இஸ்லாம் வட்டியைத் தடை செய்ததுடன் அதற்கும் மேலாக வட்டிக்கான மறைமுகமான,நேரடியான அனைத்துவிதமான வடிவங்களையும் வழிவகைகளையும் முற்றாகத் தடை செய்துள்ளது என்பதை மேலே தரப்பட்ட நபிமொழிகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.ஒருவருக்குக் கடன் கொடுத்து அவரிடமிருந்து இலாபத்தை ஈட்டுவதுதான் ரிபா (வட்டி) ஆகும்.இதனால்தான் கடன் பெற்றவரிடமிருந்து அன்பளிப்பைப் பெறுவதும் அவருடைய வாகனத்தைப் பயன்படுத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஒருவருக்காகப் பரிந்துரைத்த பிறகு அவரிடமிருந்து அன்பளிப்பைப் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தம்மால் பரிந்துரைக்கப்பட்ட மனிதரிடமிருந்து அன்பளிப்புப் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.ஏனெனில் சுயிலாப நோக்கமின்றி செய்யப்படுவதுதான் பரிந்துரை.அதற்காக தம்மால் பரிந்துரைக்கப்பட்ட மனிதரிடமிருந்து அன்பளிப்பை ஒருவர் ஏற்றுக்கொள்கின்றார் எனில்,அது அந்த நற்செயலிலிருந்தும் பயனீட்டிக் கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கின்ற ஆசையை வெளிப்படுத்துகின்றது.

வட்டியிலும் இதுதான் நடக்கின்றது.கடன் கொடுக்கின்றவர் அந்த நற்செயலிலிருந்து (தேவையுள்ளவருக்கு பணம் கொடுத்து உதவுகின்ற நற்செயல்) இலாபம் ஈட்டப் பார்க்கின்றார். இத்தனைக்கும் எந்தவிதமான இலாப நோக்கமோ,பிரதிபலனோ எதிர்பாராமல் ஆற்றப்பட வேண்டிய நற்செயல்தான் அது.தன்னுடைய சகோதர-ருக்குத் தேவை ஏற்படுகின்ற வேளையில் அவருக்கு உதவுவதும், அவருடைய கவலைகளைப் போக்குவதும் சகோதரர் என்கிற முறையில் எந்தவொரு மனிதர் மீதும் இருக்கின்ற கடமையாகும். இன்னும் சொல்லப்போனால் தேவையுள்ள மனிதரின் உரிமை அது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்