மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

பெருகும் நோய்கள்: காரணங்களும், தீர்வுகளும்!
கப்ளிசேட், 16-30 - November - 2021


இன்றைக்கு உலகமே நோய்களால் சூழப்பட்டிருக்கிறது. இதற்கு மனிதனின் பேராசையே முதல், முழு காரணமாகிறது. இயற்கையைச் சிதைத்து, இயற்கையின் சமநிலைகளைச் சிதைத்து மனிதன் போடும் ஆட்டங்களால் வந்த வினையே நோய்கள். விண்வெளியிலிருந்து விழும் மிகப் பிரமாண்ட நட்சத்திரங்களையும், எரிகற்களையும், புற ஊதாக் கதிர்களையும் தடுக்கும் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கி வைத்துள்ள மனிதன் பல அழிவுகளைச் சந்திக்கிறான். ஏராளமான தொழிற்சாலைகளின் கழிவுகளைச் சரியான முறையில் கையாளத் தவறியதாலும் மேலும் பல காரணங்களாலும் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே போகிறது. அதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயருகிறது. பனிமலைகள் உருகி ஏற்படும் நீர் மட்ட உயர்வின் விளைவாக தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தின் வளம் கெடுகிறது. பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், முறையற்ற தொழில் கொள்கைகள், இயற்கை வளங்களைச் சீரழித்தல், இயற்கை வளங்களை அளவுக்கு மீறி சுரண்டுதல், காடுகள் அழிப்பு, வன உயிரினங் களை வேட்டையாடுதல் என இயற்கையின் சமநிலைகளைச் சீர்குலைக்கும் மனிதனின் பேராசைகள் நோய்களுக்கான அச்சாரமாக அமைகிறது. நோய்களுக்கான மற்றொரு மிக முக்கிய காரணம் சமச்சீரற்ற உணவு முறைகளாகும். உணவுப் பொருள்கள் அத்தனையும் இரசா யன உரங்களாலும், இரசாயன பூச்சிக்கொல்லிகளாலும் முழுவதும் விசமாக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு உணவு நஞ்சாக மாறிவரும் சூழலில் நிறைய பண்பாட்டு மாற்றங்களால் துரித உணவுகளின் வருகை மிகப்பெரிய உடல் நலக்குறைவுகளை ஏற்படுத்துகிறது. இன்றைய துரித உணவுகளும், பாக்கெட் களில் அடைக்கப்பட்டுள்ள நொறுக்குத் தீனிகளும் எவ்வளவு உடலைப் பாதிக் கும் என்ற புரிதல் கூட ஏற்படாதது வியப் பளிக்கிறது. ஒரு நாளைக்குப் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதா லும், ஒளிரும் திரைகளை ஓய்வில்லாமல் பார்த்துக்கொண்டே இருப்பதாலும், கண்களின் விழித்திரைகள் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண் பார்வையில் குøற பாடுகள் ஏற்பட்டு, அதிக பவர் கொண்ட கண் கண்ணாடிகளும் (ண்ணீஞுஞிtச்ஞிடூஞுண்), காண்டெக்ட் லென்சுகளும் இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது.

உடற்பயிற்சிகளும், வெளி விளை யாட்டுகளுமற்ற (Oதtஞீணிணிணூ  ஞ்ச்ட்ஞுண்) ஓர் இளைய சமுதாயம் உருவாகி வருகிறது. வீடியோ கேம்களும், சமூகவலைதளங்களின் செய்திப் பரிமாற்றங்களும், வீணான அரட்டைகளும் (இடச்ttடிணஞ்) இளைய சமூகத்தினர்களின் நேரங் களை விழுங்குவதோடு அவர்களை உடற்பயிற்சி அற்றவர்களாகவும், விளை யாட்டுத் திடல்களை விட்டும் தடுத்தும் விடுகிறது. இதுபோன்ற ஏராள மான காரணங்கள் நோய் களை சிவப்புக் கம்பளம் விரித்து வ ர ÷ வ ற் று சிறிய வயதுகளிலேயே தங்கள் ஆரோக்கியங்களைத் தொலைத்தவர்களாய் ஒவ் வொரு மருத்துவமனை களின் படிக்கட்டுகளை மிதித்தவர்களாய் அலை வது மிக மிக வருத்தமான செய்தியாகும். இன்றைக்கு சராசரியாக 40 வயதில் மாரடைப்பும், இதயநோய்களும் ஏற்பட்டு விடுகிறது. சமீபத்திய கொரோனா காலங்களில் ஏறக்குறைய 17 இலட்சம் பேர் மாரடைப்பு, இதய நோய்களால் இறந்திருக்கலாம் என்று ஒரு மருத்துவ அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக "லான்செட்' என்ற மருத்துவ ஆய்விதழ் கூறுவதோடு 55 வயதிற்குக் கீழுள்ள 40 விழுக்காட்டினருக்குப் புதிதாக மாரடைப்பு நோய் வந்திருப்ப தாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 லிருந்து 40 வயதுள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் 45 வயதிற்கு மேல் வரும் இதய நோய்கள் இந்தியாவில் சராசரியாக 30 வயதிற்குள் ஏற்படுவதாகவும் அந்த இதழ் சுட்டிக்காட்டுகிறது. இப்போது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நீரழிவு நோயாளிகள் (ஈடிச்ஞஞுtடிஞிண்) உள்ளனர். கல்லீரலின் லாங்கர்ஹான் திட்டுகளிலிருந்து சுரந்து வரும் இன்சுலின் என்ற ஹார்மோன் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சமன்படுத்தி வருகிறது. பல்வேறு காரணங் களால் இன்சுலின் சுரப்பு குறைவாகும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அது சிறுநீரிலும் வெளியாகிறது. இதனால் இரத்தத்திலும், சிறுநீரிலும்  ö ச ய் யு ம் பரிசோதனைகளை வைத்து சர்க்கரையின் அளவைக் கணக்கிட்டு மருந்துகள் வழங் கப்படுகிறது. இன்சுலின் அறவே சுரக்காத போது இன்சுலின் நேரடியாக உடம் பில் செலுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் கவனக்குறைவாக இருந்தால் ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழக்க வைத்துவிடும். பெண்களுக்குக் கருப்பையில் ஏற்படும் கட்டிகள் இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட் டது. அதிகப்படியான இரத்தப்போக்குகள், சிறுவயதிலேயே கர்ப்பப்பையை எடுக்கு மளவிற்குக் காரணமாக உணவுகளையே கூறுகின்றனர். ஒரு காலத்தில் 10, 12 குழந்தைகளைச் சாதாரணமாகப் பெற்ற காலங்கள் மாறி இன்று ஓரிரு குழந்தைகளைப் பெறுவதே பெரும் போராட்டமாக மாறிவிட்டது.

ஹீமோகுளோபின் குறைபாடுகள், உடலில் வலுவின்மை போன்ற பல காரணங் களால் பல பிரசவங்கள் சிசேரியனாகவே நடைபெறுகிறது. இன்றைக்குப் பெட்டிக் கடை களைப் போல பெருத்து விட்ட கருத்தரிப்பு மையங்கள் (ஐணஞூஞுணூtடிடூடிtதூ tணூஞுச்tட்ஞுணt ஞிஞுணtணூஞுண்) குழந்தையின்மையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. இன்றைக்குப் பல மடங்கு அதிகரித்திருக்கிற ஒரு நோயாக கேன்சர் இருக்கிறது. புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையான செய்தியாகும். கொரோனா என்ற ஒரு மாயப்பிசாசு உலகையே புரட்டிப்போட்டு இன்று ஓரளவு கட்டுக்குள் வந் திருக்கிறது. ஆனாலும் கொரோனா நோய் முற்றிலு மாக ஒழிந்து விடவில்லை. அத்தனை நோய்களுக்கு மருந்துகளும் ப ø ட க் கப்பட்டிருக்கின்றன என்கிறது இஸ்லாமிய நெறி யியல். மனிதன் படைக் கப்பட்ட காலம் முதல் உலக அழிவு நாளின் இறுதி வரை ஏராளமான பலவிதமான நோய்களும் வந்து கொண்டே இருக்க லாம். மனித சமூகத்தைப் பேரழிவிற்கு உட் படுத்தலாம். ஏராளமான மருத்துவ நிறுவனங்கள், தங்களிடம் ஆராய்ச்சிப் பிரிவுகளை (கீஞுண்ஞுச்ணூஞிட ச்ணஞீ ஞீஞுதிஞுடூணிணீட்ஞுணt) வைத்திருக்கிறது. அதற்கு ஏராளமான நிதிகளை ஒதுக்கி ஆராய்ச்சிகள் செய்கின்றன. தங்கள் நிறுவனம் கண்டுபிடித்துத் தயாரிக்கும் போது அந்த உரிமையை வைத்துக்கொண்டு (ணீச்tஞுணt ணூடிஞ்டt) பல கோடி டாலர்களைச் சம்பாதிக்கிறார்கள். அரசாங்கங்களும் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுகளை வைத்து ஆராய்ச்சி செய் கிறார்கள். கார்ப்பரேட் மயமாகிவிட்ட உலகில் மருத்துவமும் முழுக்க கார்ப்பரேட் மயமாகிவிட் டது. மிகப்பெரிய மருத்துவக் குழுமங்கள் சங்கிலித்தொடராக (ஞிடச்டிண டணிண்ணீடிtச்டூண்) மருத்துவ மனைகளைத் தொடங்குகுகின்றன. உலகின் பல நாடுகளிலிருந்து இந்திய மருத்துவ மனைகளை நோக்கி நோயாளிகள் வரு கின்றனர். குறிப்பாக சென்னையில் மருத்துவ மனைகள் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. பல மருத்துவமனைகள் சிக்க லான பல அறுவை சிகிச்சை களைக்கூட மற்ற பிரபல மருத்துவ நிபுணர்களுடன் டெலிகõன்பிரன்சிங் முறை யில் நேரடியாக அவர்களுடன் ஆலோசனைகள் செய்து அறுவை சிகிச்சை களை வெற்றிகரமாக முடிக்குமளவுக்கு மருத்துவ மனைகள் மிகப்பெரிய தொடர்பை உருவாக்கி யிருக்கின்றன. எல்லா வசதிகளோடும், உள்கட்ட ø ம ப் பு  க ø ள உருவாக்கி, ஏராளமான பரிசோதனைக் கருவிகளை வாங்கி வைத்துள்ள நிலையில், மருத்துவ மனைகள் தங்கள் முதலீட்டிற்கான வரு வாயைப் பெற வேண்டிய நிலையில் உள்ளன. அதற்காகத் தேவையில்லாத பரி சோதனைகளைச் செய்வதாகவும், தேவை யில்லாமல் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதாகவும், பரவலாக பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆனாலும், இது போன்ற பெரிய மருத்துவமனைகளில் பணங்களைச் செலவழித்தாலும், தங்களுக் குச் சிறப்பான சிகிச்சைகள் கிடைப் பதையும் பொதுமக்கள் உறுதிப்படுத்து கின்றனர்.

அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவ கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஏராளமான மருத்துவமனைகளை, ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்துகிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தமிழகத்தில் மூன்று மட்டங் களில் மருத்துவக் கட்டமைப்பு செயல்படுகிறது. மிகச் சிக்கலான நோய் களுக்கான சிகிச்சைகள் மருத்துவக் கல்லூரிகளோடு இணைக்கப்பட்ட பெரிய மருத்துவமனைகளில் வழங் கப் படுகிறது. மாநிலம் முழுவதும் 50 பெரிய மருத்துவமனைகளில் சிகிச் சைகள் வழங்கப்படுகின் றன. இதற்கடுத்த கட்டமாக மாவட்ட அளவில் பொது ம ரு த் து வ ம ø ன க ள் இயங்குகின்றன. இதற்கு அடுத்த கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை நகர்ப் புற சுகாதார நிலையங்கள் 460, பிற பகுதிகளில் 1806 என 2266 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இதற்கு அடுத்த மட்டத்தில் 8713 துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வரு கின்றன. இங்கு மருத்துவர்கள் இல்லாமல் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மட்டுமே இருப்பார்கள். பலவகைகளில் இந்தியாவில் அரசு மருத்துவ சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இங்குதான் 100% பிரசவங்கள், மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. அதில் 65% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில்தான் குழந்தை இறப்பு விகிதங்களும், தாய்மார்களின் இறப்பு விகிதங்களும் மிகக்குறைவாகும். தமிழகத்தில் எல்லா மாவட்ட மருத்துவ மனைகளிலும் இருதயநோய் பிரிவு, காச நோய் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் பிரிவு என தனித் தனியாக பல பிரிவுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இப் போதைய திமுக அரசு "வீடு தேடி மருத்துவம்' என்று வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய் யும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை, அரசாங் கத்தின் இலவச காப்பீட்டுத்திட்டங்கள் போன்றவை ஏழை நடுத்தர மக்களுக்கான அற்புதமான திட்டங்களாகும். இந்தத் திட்டங்கள் பல மனித உயிர்களை இதுவரை காப் பாற்றி இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லோரும் மருத்துவக் காப்பீட்டிற்கு முன்னுரிமை கொடுத்து காப்பீடு செய்கிறார்கள். இந்தியாவில் மருத்துவக் காப்பீடு இன்னும் விரிவாக செய்யப்பட வேண்டும். விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். "வருமுன் காப்போம்' என்ற அடிப் படையில் மக்களுக்கான சுகாதார விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இரசாயனக் கலப்படமற்ற உணவுகள், ஆர்கானிக் வகை உணவுகள், தவறாது உடற் பயிற்சிகள் என்ற அளவில் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுமானால் ஏராளமான நோய் களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதோடு, உயிரிழப்பு, பொருளாதார இழப்பு, மன அழுத்தங்கள், மருத்துவமனைகளுக்கான அலைச்சல்கள் இவற்றிலிருந்து மக்கள் தங் களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்