
நம் நாட்டின் பிரச்னைகள் நெருக்கடிகள் என்ன?அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பங்களிப்பு என்ன?இனி வரும் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்?என்பதை விரிவாக எடுத்துரைக்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் அவற்றில் ஆறு பெரும் பிரச்னைகளை முதன்மைப்படுத்துகிறேன்.
1. முரண்பாடுகள்
முற்போக்குச் சிந்தனை கொண்ட நல்லுள்ளங்களும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள்.அதே சமயத்திலே பிற்போக்குத்தனமான சிந்தனை,நடத்தை கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.இது ஒரு முரண்பாடு.நம் நாடு பல சாதனைகளைச் செய்து வருகிறது.வளர்ந்து வரும் நாடாகவும் நம் நாடு திகழ்கிறது.அதே வேளையில் மிகவும் பின்தங்கிய நாடுகளை விட நாம் சில விவகாரங்களில் பின்தங்கி இருக்கின்றோம்.இது ஒரு முரண்பாடு.உலகத்திலே மிகப்பெரும் பணக்காரர்களுடைய பட்டியலை எடுத்துக்கொண்டால் அதிலே இந்தியர்கள் மிக அதிகளவில் இருக்கின்றார்கள்.அதே சமயத்திலே நம்முடைய நாட்டிலே பரம ஏழைகளாக இருக்கக்கூடியவர்களும் இங்கே இருக்கின்றார்கள்.
இங்கே சில மாநிலங்கள் சில சமூகக் குழுக்கள் தங்களுடைய தனிமனித வருமானம்,தனிமனித முன்னேற்றத்திலும் மிகப்பெரும் அளவிலே ஓங்கி நிற்கின்றார்கள்.ஆனால் சில மாநிலங்களுடைய நிலைமை ஆப்பிரிக்க நாடுகளை விடவும்,உள்நாட்டுப் போரில் திணறிக் கொண்டிருக்கின்ற நாடுகளை விடவும் மோசமாக இருக்கின்றது. வளர்ச்சியில் மிகப்பெரும் இடைவெளி உள்ளது.நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.ஆனால் இடைவெளி மிக அதிகமாக இருக்கின்றது.
2. அணிதிரட்டல்கள்,பிரிவுகள்,பிளவுகள்
இது நம் நாட்டிலே இன்று மிகப்பெரும் தலையாய நெருக்கடியாக நிற்கின்றது.மதத்தின் அடிப்படையிலே மக்களைக் கூறு போட்டு பீதியைக் கிளப்பி வெறுப்பை உற்பத்தி செய்து அரசியல் ஆதாயம் தேடுவதை ஒரு வெற்றிகரமான உத்தியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.வேறு எங்குமே இந்த மாதிரியான நிலைமையை நாம் பார்க்க முடியாது. அரசியலிலே வெற்றி அடைய வேண்டும் என்றால் பயத்தைக் கிளப்பு!அச்சத்தை ஏற்படுத்து!வெறுப்பைக் கிளப்பு!வெறுப்பின் அடிப்படையிலே அணி திரட்டல்கள் செய்து அரசியல் ஆதாயம் தேடு!என்ற நிலையை இன்று பார்க்க முடிகிறது.இன்று நீதியை விட அடையாளம் முக்கியமாகப் போய்விட்டது.சரியா தவறா என்று பார்க்க மாட்டார்கள். யார் என்று பார்ப்பார்கள்.இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி.
3. வெகுமக்கள் அரசியல் (கணிணீதடூடிண்ட்)
வெகு மக்கள் ரசனைக்கு உட்பட்டு கொள்கைகளை வகுக்கின்ற,மாற்றிக் கொள்கின்ற ஓர் உத்தி.ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சொன்னால் அது எதேச்சதிகாரம் என்றார்கள்.ராணுவப் புரட்சிதான் ஜனநாயகத்துக்கு உலை வைக்கக்கூடிய பேராபத்தாக மக்கள் நினைத்தார்கள்.நம்மு டைய நாடு அதிலிருந்தது பாதுகாப்பாக இருந்தது.ஆனால் இன்று பாப்புலிசம் என்கின்ற வகையிலே இங்கே ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.என்ன கொள்கைகள் மக்களுக்கு நலன் பயக்கும் என்பது குறித்துப் பேச மாட்டார்கள்.மாறாக மக்களுடைய உணர்வுகளை மையப்படுத்தி எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கின்ற இந்த பாப்புலிச உத்தி ஜனநாயகத்திற்கு உலை வைக்கக் கூடியதாக இருக்கிறது.
4. சுரண்டப்படும் பெண்கள்
பெண்கள் நம்முடைய நாட்டிலே இரண்டு வகைகளிலும் சுரண்டப்படுகின்றார்கள்.ஒன்று பாரம்பரியமான முறையில்,ஆணாதிக்க சிந்தனைப் போக்குகளின் அடிப்படையிலே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்,வேலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.தலித்கள்,ஆதிவாசி,கிராமத்து,நகரத்துப் பெண்கள் எல்லோருமே இந்தப் பாரம்பரியக் கூண்டுக்குள்ளே அடைக்கப்பட்டு சுரண்டப்படுகின்றார்கள்.மற்றொரு பக்கம் நவீன சிந்தனையின் அடிப்படையிலே,விற்பனைப் பொருளாகப் பார்க்கின்ற சிந்தனையின் அடிப்படையிலே அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்,நசுக்கப்படுகின்றார்கள்.
5. மடைமாற்றப்படும் இளைஞர்கள்
நம்முடைய நாட்டிலே மிகப் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் இருக்கின்றார்கள்.இந்த இளைய சக்தி நமக்கு விலை மதிப்பற்ற ஒரு சொத்தாக இருக்க வேண்டும்.இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் செழிப்பிற்கும் மிகப்பெரும் பங்களிக்கக் கூடியவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும்.ஆனால் இளைஞர்கள் வெறுப்புக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்,பிரிவுச் சிந்த னைகளிலே அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.சமூக வலைதளங்களிலே அவர்களுடைய சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.அவர்களிடம் வெறுப்பு பற்ற வைக்கப்படுகின்றது.ஆற்றலுக்குப் பதில் இளைஞர்கள் ஒரு பேரழிவாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
6. சரியும் ஒழுக்கம்
நம்முடைய நாட்டிலே சுரத்தில்லாமல் செயல்படுகின்ற போக்கு நீடித்திருக்கின்றது.மெத்தப் படித்தவர்களும் சரி மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் சரி அவர்களும் இதற்கு ஆளாகிக் கொண்டிருப்பது ஒரு மிகப்பெரும் முரண்பாடு.இதனை மிடில் கிளாஸ் மொராலிட்டி என்று சொல்வோம்.
நடுத்தர மக்களுடைய ஒழுக்க,தார்மிகப் பண்புகளைக் கொண்ட அந்த மனசாட்சி சமூகத்தை,நாட்டை நெறிப்படுத்தக்கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று அந்தக் கூட்டு மிடில் கிளாஸ் மொராலிட்டியும் நயவஞ்சகத்துக்கு ஆளாகி இருக்கிறது.தவறுகள் கொண்டாடப்படுகின்றன.ஆபாசப் படங்கள் சகித்துக் கொள்ளப்படுகிறது.இளைஞர்கள் மிக எளிதாகப் பாலியல் வக்கிரங்களின் பக்கம் தள்ளப்படுகின்றார்கள்.
இதைப் பார்த்து கூட்டு மனசாட்சி சிலிர்த்து எழுவதில்லை.ஒரு பக்கம் மது மிக ஆதிக்கம் செலுத்தி மதுபானக் கூடங்களின் கலாச்சாரம் உச்சத்தில் இருக்கின்றது.ஆனால் அதை விட்டுவிட மனமின்றி இந்தக் கூட்டு மனசாட்சி தட்டுத் தடுமாறி திணறிக்கொண்டிருக்கின்றது.இவை எல்லாமே நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக,தடையாக இருக்கின்றன.வளர்ச்சிக்கான சாத்தியங்களை இவை உலை வைக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பங்களிப்பு
இந்த நாடு சந்திக்கக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகள் அனைத்துக்குமே தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து
சொல்லி வருகிறது. நாம் பிரச்னைகளை மட்டும் பேசுவதில்லை. பிரச்னைகளுக்கான தீர்வையும் சொல்லி வருகிறோம். கொள்கை விற்பன்னர்களிடம் அந்தத் தீர்வுகளை எடுத்து வைக்கின்றோம். கருத்து உருவாக்குவதற்குத் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இது ஜமாஅத்தின் மிகப்பெரிய பங்களிப்பு.
இந்த நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் நமக்குப் பொறுப்பு இருக்கிறது. பூமியிலே மனிதனை இறைவன் பிரதிநிதியாக்கி இருக்கிறான். அதனுடைய தாத்பரியம் இதுதான். இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு, இந்த நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு என்னுடைய பங்களிப்பைச் செய்வது என் மீது கடமை. இதற்காகத் தொடர்ந்து ஜமா அத் முயற்சித்து வந்திருக்கின்றது.
நடத்தையை மையமாகக் கொண்ட நீதியையும் கண்ணியத்தையும் சார்ந்த வளர்ச்சிதான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வளர்ச்சிக்கான பார்வை. வளர்ச்சி வளர்ச்சிக்காக இருப்பது என்பது புற்றுநோய்க்கான அடையாளம் என்று சொல்வார்கள். புற்றுக் கிருமிகள் வளர்ந்து கொண்டே போகக் கூடியது.
வளர்ச்சி என்றால் வெறும் வளர்ச்சி அல்ல. மாறாக உண்மையான வளர்ச்சி என்று சொன்னால் நீதி சார்ந்த, மாண்பு சார்ந்த, மதிப்பு சார்ந்த, நல்ல நடத்தை சார்ந்த, விழுமம் சார்ந்த வளர்ச்சி. இந்த வளர்ச்சி நீதியின் அடிப்படையில் ஏற்பட வேண்டும் என்று ஜமாஅத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.இந்தத் திசையின் பக்கம் மக்களுடைய கவனத்தை ஈர்ப்பது,வளர்ச்சிக்கான இந்தச் சித்திரத்தைத் தெளிவு படுத்துவது,எது வளர்ச்சி என்பதைப் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவது ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்தின் மிகப் பெரும் பங்களிப்பாக இருக்கின்றது.
இந்த நாட்டிலே தலித்களுடைய கண்ணியம் எப்படிக் குலைக்கப்படுகிறது ஆதிவாசிகளுடைய கண்ணியம் எப்படி மறுக்கப்படுகிறது,ஏழை எளிய மக்களுடைய கண்ணியம் எப்படிப் பந்தாடப்படுகின்றது?ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கே கொண்டு ஏழைகளின் கண்ணியம்,தலித்களின் கண்ணியம்,ஆதிவாசிகளின் கண்ணியம் இவற்றை எல்லாம் மீட்டெடுக்கின்ற வகையிலே,உறுதிப்படுத்துகின்ற வகையிலே வளர்ச்சி இருக்க வேண்டும் என்கின்ற ஒரு பரந்த பார்வையை ஜமாஅத் முன்வைக்கின்றது.நீதியும் கண்ணியமும் சார்ந்த வளர்ச்சிதான் நம்முடைய வளர்ச்சிக்கான மாடல்
வளர்ச்சிக்கான கனிகள் எல்லோருக்குமே போய்ச் சேர வேண்டும்.வளர்ச்சியின் பலன்கள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். ஆனால் இன்றைய நிலைமை என்ன?நம்முடைய எஈக வளர்ந்து கொண்டே போகிறது.8% வளர்ச்சி என்று பேசுகின்றோம்.ஆனால் அது நீதி சார்ந்ததாக இருக்கிறதா?எல்லா மக்களுக்கும் அந்த வளர்ச்சிக்கான கனிகள் கிடைத்திருக்கின்றவா?
‘உங்களுடைய செல்வம் உங்களில் செல்வம் படைத்தவர்களிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது' என்கிறது திருக்குர்ஆன்.இதுதான் பொருளாதாரத்தைக் குறித்த இஸ்லாத்தின் மையப் புள்ளியாக இருக்கின்றது.செல்வம் ஓர் இடத்திலே குவிந்திருக்கக் கூடாது.உங்களிடையே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாம் முன்வைக்கும் சிந்தனை.இது தவறும் போது ஏழை பணக்காரன் இடைவெளி மிகப்பெரும் அளவிலே ஏற்படுகிறது.
GDP சரியும் போது,சோசலிசம் என்று எல்லோரையும் சார்ந்த வளர்ச்சியின் பக்கம் சென்றோம் என்றால் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்ற விழிம்பிற்குப்
போய்விடுகிறார்கள்.முதலாளித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படப் போகும்போது ஒரு குறிப்பிட்ட நபர்கள் கையிலே ஒட்டுமொத்த நாட்டின் மிகப்
பெரும் செல்வம் குவிந்து விடுகிறது.
இஸ்லாம் இந்த இரண்டு விழிம்புகளுக்கும் இடையே நடுநிலைமையான ஒரு ராஜபாட்டையை நமக்கு முன்னால் வைக் கின்றது.செல்வம் உற்பத்தி செய்யப்படவும் வேண்டும்,அது எல்லோருக்கும் போய்ச் சேரவும் வேண்டும்,பங்கிடப்படவும் வேண்டும்.இந்த விஷயத்திலே ஜமாஅத்தின் பங்களிப்பு என்னவென்று சொன்னால் ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தயாரிக்கின்ற போது நாம் ஒரு விரிவான பரிந்துரைகளை அனுப்புகிறோம்.GDP விநியோகத்தை எல்லா மக்களுக்கும் போய்ச் சேரக்கூடிய வகையிலே அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம்.இஸ்லாம் வழங்குகின்ற இந்தப் பொருளாதாரச் சிந்தனையை சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைக்கின்றோம்.
ஜகாத் சென்டர் இந்தியா,ரிஃபா சேம்பர் ஆஃப் காமர்ஸ் இன்னும் பல்வேறு பைத்துல்மால் நிறுவனங்கள் எல்லாமே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஓர் அழகான
சித்திரத்தை மக்களுக்கு முன்னால் நடைமுறை உதாரணமாக எடுத்துரைக்கின்றது.ஒரு சிறப்பான நடைமுறை இங்கே இருக்கிறது.நீதி அடிப்படையில் இருக்கிறது என்பதை ஜமாஅத் தொடர்ந்து எடுத்து வைத்திருக்கிறது.
அணி திரட்டலுக்கு எதிராக மக்கள் கருத்தைச் செதுக்குவதற்கும்,அவர்களுடைய சிந்தனைகளை மாற்றி அமைப்பதற்கும் ஜமாஅத் முயல்கிறது.மதம் என்பது ஆக்கபூர்வமானது,மனிதனுடைய மனதைப் பக்குவப்படுத்தக் கூடியது. மதம் மனிதவாழ்வை நெறிப்படுத்தக்கூடியது,மனிதர்களை ஒன்று சேர்க்கக் கூடியது என்கிற செய்தியை ஜமாஅத் எடுத்துரைக்கின்றது.செக்குலரிசம் என்கின்ற போர் வையிலே மதசார்பின்மை என்ற அந்த ஐரோப் பிய சிந்தனையை அதன் அடிப்படையிலான அரசியல் கலப்பை ஜமாஅத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கின்றது.
மதம் என்பது நெறிப்படுத்தக் கூடியது.அது விழுமம் சார்ந்த அரசியலுக்குதான் இட்டுச் செல்லுமே தவிர வெறுப்பையும் வன்மத்தையும் விரோதத்தையும் அது எப்போதும் தூக்கிப் பிடிக்காது.அது கண்ணியத்தைத்தான் பேசுமே தவிர அவமரியா தையையும் அவமதிப்பையும் பேசாது.மதநம்பிக்கை உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர வேண்டும். வெறுப்பின் அடிப்படையிலே மக்களைக் கூறு போடுகின்ற இந்த அவலத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதிலே ஜமாஅத் முனைப்புடன் செயலாற்றி வந்திருக்கின்றது
இதற்காக ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்து உரையாடி வருகிறோம்.வெவ்வேறு ஆன்மிக வழிகாட்டிகளிடம் பேசி இருக்கின்றோம்.அதனுடைய ஒரு செயல்பாட்டு வடிவம்தான் தார்மிக் ஜன்மோர்சா என்கின்ற ஓர் மத நல்லிணக்க அமைப்பு.பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்று சேர்க்கின்ற வேலையிலும் ஜமாஅத் ஈடுபட்டுள்ளது.
பல்சமய உரையாடல்களை ஜமாஅத் ஏற்படுத்தி வருகிறது.மத நம்பிக்கைகள் கோலோச்சுகின்ற இந்த நாட்டிலே பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே இணக்கமாக இருப்பதற்கு என்னென்ன வழிகள் சாத்தியமோ அந்த வழிகள் அனைத்தையும் ஜமாஅத் மேற்கொண்டிருக்கின்றது.நாடு முழுவதும் சமய நல்லிணக்கப் பேரவைகளை (சத்பாவனா மன்ஞ்கள்) ஏற்படுத்தி வருகின்றோம்.நாட்டு முன்னேற்றத்திற்கு மதத் தலைவர்கள் எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என்பதைக் குறித்தும் ஜமாஅத் அவர்களுக்கு எடுத்துரைத்து வந்திருக்கின்றது.
ஆக்கப்பூர்வமான இளைஞர் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்துவதிலும் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.அதன் வெளிப்பாடுகளாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மூலம் இளைஞர்களுடைய சக்தியை செம்மையாகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளிலே அவர்களை ஈடுபடுத்தி வருகின்றோம்.இனவாதம்,வகுப்புவாதம்,வெறுப்பு ஆகியவை மிக உச்சத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்திலே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓர் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்துகிறது.இதுவும் ஜமாஅத்தின் ஒரு மிகப்பெரும் பங்களிப்பு.
பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு பக்கம் பாரம்பரியத்தின் பிடியிலே சிக்கி இருக்கிறார்கள்.இன்னொரு பக்கம் நவீனத்தினுடைய இழுப்பிலே சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.இந்த இரண்டு கொடுமையான சிந்தனைகளிலே அவர்கள் சிக்கி சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
ஜமாஅத் அவர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் இயக்கச் சிந்தனையை ஏற்படுத்தி அவர்களைக் களம் இறக்கி அவர்களைச் சுறுசுறுப்பாக,சிறப்பாக இயங்கக் கூடியவர்களாக மாற்றி அவர்கள் மத்தியிலே மிகப்பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுவும் ஒரு மிகப்பெரும் பங்களிப்பு.பெண்களுக்கு இன்றைக்குப் பல்வேறு விதங்களிலே அநீதி இழைக்கப்படுகிறது.சமத்துவம் அவர் களுக்கு மறுக்கப்படுகிறது.
அவர்களுக்குச் செல்வம் ஈட்டுகின்ற உரிமை மறுக்கப்படுகிறது.வாரிசு உரிமை மறுக்கப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலிலே அவர்களுடைய உரிமைகளை மீட்டெடுப்பதிலும், சமூகத்தினுடைய நடத்தையை செம்மைப்படுத்துவதிலும் ஜமாஅத் மிகப்பெரும் அளவிலே பணியாற்றி இருக்கின்றது.
நாம் செய்ய வேண்டியது என்ன?
கதையாடல்களைக் கட்டமைப்பதிலே தலைமை தாங்க(நரேட்டிவ் லீடர்ஷிப்) வேண்டும்.புதிய ஒரு சிந்தனையின் பக்கம் மக்களை இழுத்துச் செல்ல வேண்டும்.நீதியை நாம் நரேட்டிவாக ஆக்க வேண்டும்.நியாயத்தை,ஒரு சமநிலையான போக்கை நாம் மேற்கொள்ள வேண்டும்.அதனையே நரேட்டிவாக நாம் கட்டமைக்க வேண்டும்.
இன்றைக்குப் பொருளாதாரக் கொள்-கையை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு நீடித்த வளர்ச்சிக்கு இது வித்திடுமா என்றால் நிச்சயமாகக் கிடையாது.நீடித்த வளர்ச்சிக்கு இன்றைய பொருளாதாரக் கொள்கையால் சாத்தியமே இல்லை.இந்தப் பொருளாதாரக் கொள்கை அதானி அம்பானி போன்றவர்களைத் தானே உருவாக்கி வைத்திருக்கின்றது.இன்றைக்கு 8 விழுக்காடு GDP வளர்ச்சி இருந்தாலும் அது எல்லோருக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றதா? நாம் சான்றுகளின் அடிப்படையிலே,நல்ல முறையிலே மக்களிடம் எடுத்து வைத்தோம் என்று சொன்னால் ஒரு கதையாடலை நம்மால் உருவாக்க முடியும்.
நாம் நம்முடைய பிரச்னைகளுக்குள்,நலன்களுக்குள்,நம்முடைய ஆதாயங்களுக்குள் நம்மை நாமே சிறைப்படுத்தி விட்டோம் என்றால் நரேட்டிவை உருவாக்குவதன் பக்கம் நம்முடைய கவனம் செல்லாது.நாட்டு மக்களுக்கு இந்த மாண்புகளின் அடிப்படையிலான பேசு பொருளை உருவாக்கித் தருகின்ற அந்த நரேட்டிவ்களை அமைக்கின்ற பணியிலே நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நம்முடைய வேலை எதிர்த்துக் கொண்டே இருப்பது அல்ல.நம்முடைய வேலை புதிதாக ஒன்றைப் பரிந்துரைப்பது.புதிதாக ஒன்றைச் சொல்வது.புதிதாக மக்களுக்குத் திசை காட்டுவது. இதைப் பற்றிய போதனைகள்,கொள்கைகள் நம்முடைய இலக்கியங்களிலே நம்முடைய புத்தகங்களிலே இருக்கின்றது.நரேட்டிவ் பாலிசி,அதனுடைய திசையைக் கட்டமைக்க வேண்டும்.
நாம் தனித்து இருந்துவிடக்கூடாது,தனிமைப்பட்டு விடக்கூடாது.அவர்களோடு உறவாட வேண்டும்,பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் ஒரு மாற்றைக் கொடுக்க வேண்டும். நம்மிடம் ஒரு பொருளாதாரப் பார்வை இருக்கிறது.மாற்றுக்கான மாடல் இருக்கிறது என்பதை நாம் எடுத்துச் சொல்வதுதான் நாம் நடத்துகின்ற நிறுவனங்களின் வேலையாகவும் இருக்கிறது.இவையெல்லாம் நீதியினால் உந்தப்பட்ட வளர்ச்சியாக இருக்கும்.
அவர்களிடம் சிந்தனைகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் தீர்வுகளையும் நாம் முன்வைப்போம்.இதுதான் ஜமாஅத்தினுடைய ஒரு மிகப்பெரும் பங்களிப்பாகஇருக்கிறது.
தமிழில் :T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்