மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

சிறுவர் உலகம்

சமரசம் புதிர் போட்டி 1
samarasam staff, ஜனவரி 1-15, 2026



இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடையை 2026 ஜனவரி 20ஆம் தேதிக்குள் கடிதம் மூலமோ, 73050 40386 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ, samarasam.article@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அனுப்பலாம்.

சரியான விடையை எழுதுபவர்களுக்கு ரூபாய் 200 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இப்பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் குர்ஆன், ஹதீஸ், கடந்த சமரசம் இதழ்கள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்பவர் தங்களின் பெயர், முகவரி, அலைப்பேசி எ கச்தூ எண் ஆகியவற்றை அனுப்பவும்.


1. ‘ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு  அருளியிருக்கின்றோம். ஆயினும் இறையச்சம் (தக்வா) எனும் ஆடையே மிகச் சிறந்த ஆடையாகும். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். இதன் மூலம் மக்கள் நல்லுணர்வு பெறக் கூடும்’ இந்த திருக்குர்ஆன் வசனம் எந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது?

அ) அல் அஃராஃப் ஆ) அல் அன்ஃபால்

2. ’ஒருவருக்கு (அவர் பாவியாவதற்கு) தன்னுடைய பொருளை வீணாக்குதலும் அல்லது எவருடைய வாழ்வாதாரம் தன்னுடைய பொறுப்பில் இருக்கின்றதோ அவற்றை அழித்து விடுதலுமே போதுமானதாகும்.’ அபூதாவூதில் இடம் பெற்றுள்ள இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் யார்?

அ) அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) ஆ) அம்ரு பின் ஆஸ்(ரலி)

3. இறைவன்  தந்த  அருட்கொடைகளில் இரண்டை மனிதன் சரியாகப் பயன்படுத்துவதில்லை. அதில் ஒன்று

அ) செல்வம் ஆ) ஓய்வு

4. ‘ஓர் அடியானுக்கு அல்லாஹ் அவனது பாவங்களிடையே அவன் விரும்பும் உலக நன்மைகளை அளிக்கின்றான் எனில் அது ஆகும்.

அ) இப்தலா ஆ) இஸ்தித்ராஜ்

5. கனவுக்கு விளக்கம் அளிக்கும் சட்டக் கலையின் பெயர் என்ன?

அ) தஅபீர் ஆ) ருஃயா

6. அண்மையில் இறைவனிடம் மீண்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் இஸ்லாம் குறித்து எழுதிய நூல்களில் ஒன்று

அ) நான் காதலிக்கும் இஸ்லாம் ஆ) என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)

7. 2025 ஆம் அண்டுக்கான சாகித்திய அகா டமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இன்னும் முறையாக அறிவிக்கப்படாமல் இருக்கும் எழுத்தாளர்

அ) தமிழ்ச் செல்வன் ஆ) தேவி பாரதி

8. 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். யார் அவர்?

அ) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆ) நீதிபதி யஷ்வந்த் வர்மா

9. சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

அ) மார்ச் 13 ஆ) டிசம்பர் 18

10. ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிர் நீக்கும் இறுதித் தருணத்திலும் தம் கையிலிருந்த குச்சியை  வீசி  எதிர்ப்பைக்  காட்டிய போராளி

அ) ஷஹீத் யஹ்யா சின்வார் ஆ) ஷஹீத் இஸ்மாயீல் ஹானியா


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்