மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

கண்கள்
அய்யம்பேட்டை அ.நஜ்முதீன், ஜனவரி 1-15, 2026



கண்களின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கண்கள் மனித உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்பு. நம் வாழ்வில் சுமார் 80 விழுக்காடு தகவல்களை கண்கள் மூலம் பெறுகிறோம். அதாவது கண்கள்தான் ஒளியைப் பெற்றுக் கொண்டு பொருள்களின் வடிவம், நிறம், தூரம், இயக்கம் ஆகியவற்றை உணர்த்துகிறது. மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவற்றைக் கண்கள் மூலம் அறிய முடியும். கண்களில் பெரும்பான்மையாக கருப்பு, நீலம் என இரண்டு வகைகள் உண்டு.

 கருப்பு நிறக் கண்கள்

கருப்பு நிறக் கண்களில் மெலலின் Melalinஇயற்கை வேதிப்பொருள் (பிக்மெண்ட்) அளவு அதிகமாக இருக்கும். இதனால் சூரிய ஒளியைக் கட்டுப்படுத்தி சுலபமாகப் பார்க்க முடியும். இத்தகைய கண்கள் உள்ளவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் உள்ளனர்.

நீல நிறக் கண்கள்

நீல நிறக் கண்களில் மெலலின் அளவு குறைவாக இருக்கும். இதனால் அதிகமாக வெளிப்படும் சூரிய கதிர்களின் ஒளியைப் பார்ப்பது கடினமாக இருக்கும். இத்தகைய கண்கள் உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உள்ளனர்.

கண்களில் இரண்டு வகை உள்ளது போல சூரிய ஒளியில் மூன்று வகை உள்ளது.

1. வெளிச்சம் அதிகமாக வெளிப்படும் ஒளிக்கதிர்கள் (Infrared Rays) அதிக சிவப்புக் கதிர். சூரியனிலிருந்தும் நெருப்பிலிருந்தும் மின் விளக்கிலிருந்தும் வெளிவரும் வெப்பக் கதிர்கள்.

2. சாதாரண கண்களால் பார்க்கக் கூடிய ஒளி அலைகளை Visible Light என்பார்கள். சூரிய ஒளியில் இருக்கும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இளஞ்சிவப்பு, ஊதா (வானவில் நிறங்கள்) போன்ற நிறங்கள் அனைத்தும் Visible Light ஆகும்.

3. மிக சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்கள். கண்களால் பார்க்க முடியாத ஒளி அலைகளை Ultra Violet என்பார்கள். (அதி தீவிர ஊதா ஒளி (அல்லது) அதிக ஊதா கதிர் வீச்சுகள். இது மனிதக் கண்களுக்குத் தெரியாத ஒரு வகை கதிர் வீச்சு. (கண் கண்ணாடி விற்கும் கடைகளில் கண்களைப் பாதுகாக்கக் கூடிய கண்ணாடியை (Sun Glasse) UV (Ultra Violet) என்பார்கள்.

கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் சூரியன் இருக்கும் நிலையில் அதன் ஒளிக் கதிர்களை மனிதனால் சில விநாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மறுமை நாளில் (The Day of Judgement) அன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்து விடும் என இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : புகாரி 1474-1475, அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) கண்களைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வின் போது கண்கள் நீல நிறமாக இருக்கும் என்று கூறுகிறது. ‘மறுமை நாளில் குற்றவாளிகளின் கண்கள் நீல நிறமாக இருக்கும்’. (திருக்குர்ஆன் 20:102)

மிக சக்தி வாய்ந்த ஒளி அலைகள் (ஊதா கதிர்வீச்சு) அன்று வீசும். குற்றவாளிகளின் கண்கள் நீல நிறமாக மாறிவிடும் என்பதை குர்ஆன் 1447 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது. அதாவது குர்ஆன் அறிவியல் பூர்வமõகவும், மனிதனுக்கு நேர்வழி காட்டக் கூடியதாகவும் உள்ளது என்பதை அறியலாம்.

குற்றவாளிகளின் கண்கள் ஏன் நீல நிறமாக மாறுகிறது என்றால், இந்தப் பூமியில் இறைவனை மறந்தவர்களாக யாரெல்லாம் வாழ்ந்தார்களோ அவர்களின் கண்கள் நீல நிறமாக மாறியதால் தன் பேரொளியைப் பார்க்க முடியாதவாறு இறைவன் செய்து விடுவான்.

கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக நாம் மாறிவிடக்கூடாது. கண்களைத் திறந்து பார்ப்போம். சிந்திப்போம். செயலாற்றுவோம்!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்