மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

இந்தியாவின் இளம் IPS
சஃபின் ஹசன் IPS, செப்டம்பர் 1-15, 2025


குஜராத் மாநிலம் பலன்பூரில் 1995 ஜூலை 21ஆம் நாள் சாலையோர வியாபாரியான முஸ்தபா ஹசன் நசீம் பானு தம்பதிக்குப் பிறந்தார் சஃபின் ஹசன். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் IPS அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கண்ட அவர் தனது இலட்சியக் கனவை 22ஆம் வயதில் வென்று இந்தியாவின் இளம் ஐககு அதிகாரி என்ற முத்திரை பதித்துள்ளார்.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததைப் பாராட்டி அவரது பள்ளியே சஃபினின் உயர் கல்விக்கான செலவை ஏற்றுக்கொண்டது. மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வருகை தந்ததே அவருக்குச் சிவில் சேவைகளில் சேர உத்வேகம் ஏற்பட்டது. கல்லூரிப் பருவத்தில் ஆங்கில மொழியில் பேசச் சிரமப்பட்ட சஃபின் தனது சிவில் சேவை கனவிற்காகக் கடுமையாக உழைத்தார். நம்பிக்கையுடன் UPSC நேர்காணலை ஆங்கிலத்தில் எதிர்கொண்டார்.

இருப்பினும் அவரது பயணம் எளிதானதாக அமையவில்லை. 2017ஆம் ஆண்டு UPSC முதன்மைத் தேர்வின்போது சாலை விபத்தில் சிக்கினார் சஃபின். பலத்த காயங்களுக்கு ஆளான அவருக்கு அறுவை சிகிச்சைகள், நீண்ட ஓய்வு தேவைப்பட்டது. வலியைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் தேர்வில் கலந்து கொண்டு அகில இந்திய அளவில் (AIR) 570 ஆவது இடத்தைப் பெற்றார்.

சஃபின் ஹசன் IPSஆன பின்பும்கூட சமூகப் பணிகளிலும், அரசு சாரா நிறுவனங்களுடன் தன்னார்வத் தொண்டு செய்வதிலும், ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சாதிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு சஃபின் ஹசன் ஓர் நம்பிக்கைப் பாடம்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்