மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ஐநா வரலாற்றின் முதல் பெண் பொதுச் செயலாளர்
குளச்சல் ஆசிம், 1-15 டிசம்பர் 2025


ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றில் ஐ.நா சார்பு அமைப்புகளில் முக்கியமான சர்வதேச சுற்றுலாப் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்கும் முதல் பெண் பொதுச் செயலாளராக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷெய்கா நாசர் அல் ஒவைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா சபையின் கீழ் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுற்றுலாப் பிரிவின் கடந்த 50 ஆண்டுகளில் ஷெய்கா நாசர் அல் ஒவைசி முதல் பெண் Secretary General To U.N. Tourism எனும் பெருமைக்குரியவர்.

கடந்த மே மாதம் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டாலும் நவம்பர் 10ஆம் தேதி ரியாத்தில் நடைபெற்ற 160 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஐ.நா சுற்றுலாக் கவுன்சில் 126ஆவது மாநாட்டில் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.

2026 ஜனவரி முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஐ.நா சுற்றுலாப் பிரிவின் தலைமைப் பொறுப்பை இவர் வகிப்பார். Abudhabi Chambers Tourism Group, Abudhabi Business Women Councilபோன்ற நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பு உட்பட அமீரகத்தில் ஹோட்டல் துறையில் துணைத் தலைவராக இருக்கும் ஷெய்கா நாசர் அல் ஒவைசி ஐ.நா பொறுப்பை திறம்பட நிறைவேற்ற உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்