2025 அக்டோபர் 20ஆம் நாள் துபாயில் நடைபெற்ற 4th International Cancer And OncologyConference இல் சிறந்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்து விருது பெற்றுள்ளார் ஆஷிகா ஷெரின்.
கோழிக்கோடு அரக்கிணறைச் சேர்ந்த உஸ்மான் சபியா தம்பதியர் மகள் ஆஷிகா. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயோ டெக்னாலஜி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை சுற்றுச்சூழல் அறிவியல் தேர்ச்சி பெற்ற ஆஷிகா ஷெரின் தற்போது சென்னையில் Saveetha Instituteof Medical and Technical Sciencesஇல் அறிவியல் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவியாக உள்ளார்.
உலகம் முழுவதும் இருந்து பிரபல மருத்துவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்ட Global Insights in Cancer and Public Health
Strategies எனும் மையக் கருத்தில் துபாயில் நடைபெற்ற 4ஆவது சர்வதேச புற்றுநோய் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆஷிகா ஷெரின் சமர்ப்பித்த ‘ஓரல் கேன்சர் முன்னரே தெரிந்து கொள்ள உதவும் நவீன சிகிச்சை முறைகள்’ குறித்த ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு Best Poster Presenter Award வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆஷிகா ஷெரின் ஆராய்ச்சி மேற்படிப்பைத் தொடர்வதற்கு அவரின் கணவர் நுஃபைல் உறுதுணையாக இருந்து வருகிறார்.
ஆஷிகா ஷெரின் கேரள மாநில இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (GIO) துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வருகிறார். ஆஷிகாவிற்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.
ஆஷிகா ஷெரின்