மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பிற்கு ரேமோன் மகசேசே விருது
அப்துல் சத்தார், செப்டம்பர் 16-30, 2025


பெண் கல்விக்காக லாப நோக்கமின்றிச் செயல்பட்டு வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான எஜுகேட் கேர்ள்ஸ் (Educate Girls) அமைப்பிற்கு 2025ஆம் ஆண்டுக் கான 67ஆவது ரேமோன் மகசேசே விருது (Ramon Magsasay Award) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரேமோன் மகசேசே விருதின் 67ஆவது ஆண்டு விழா பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மெட்ரோபாலிட்டன் தியேட்டரில் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. 2025ஆம் ஆண்டு விருதுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதில், தொலைதூர கிராமங்களில் பள்ளிக்குச் செல்லாத பெண்களின் கல்விக்காக சேவையாற்றி வரும் இந்திய அமைப்பான எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்புக்கு வழங்கப்
படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ரேமோன் மகசேசே விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக, எஜுகேட் கேர்ள்ஸ் வரலாறு படைத்துள்ளது’ என ரேமோன் மகசேசே விருது அறக்கட்டளை தெரிவித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு, சபீனா ஹுசைனால் நிறுவப்பட்ட எஜுகேட் கேர்ள்ஸ் 50 பள்ளிகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 30,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சென்றடைந்துள்ளது. இந்த அமைப்பு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் சுமார் 67 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வியைத் தொடர எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு உதவி செய்துள்ளது.

இந்த அமைப்பில் சுமார் 13,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய அரசின் நிதி உதவியைப் பெற்று பெண் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

இதற்கு முன் இந்தியாவின் தனிநபர்களுக்கு ரேமோன் மகசேசே விருது வழங்கப்பட்டிருந்தாலும், ஓர் இந்திய அமைப்புக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பிலிப்பைன்சின் மறைந்த முன்னாள் அதிபர் ரேமோன் மகசேசேவின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம், சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

‘இந்த விருது எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் வரலாற்றுச்
சிறப்புமிக்கது’ என அந்த அமைப்பின் தலைவர் சபீனா ஹுசைன் தெரிவித்துள்ளார்.



உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்