மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உமர் யாகிக்கு நோபல் பரிசு
K. ரியாஸ், அக்டோபர் 16-31, 2025



2025 அக்டோபர் 8 அன்று ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் வேதியியலுக்கான நோபல் பரிசு கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் யாகி, சுசுமு கிடகாவா, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன் ஆகிய மூன்று The Development of Metal Organic Frame works (MOFs) என்னும் ஆய்விற்காக வழங்கப்பட்டது.

இந்த ஆய்வு காற்று மண்டலத்திலிருந்து வாயுக்களைப் பிடிக்கவும், கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்கவும் பயன்படும். இது பாலைவனக் காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் திறன்களை மையமாகக் கொண்டது.

நோபல் பரிசு பெற்ற யாகிக்கு தோராயமாக 1.2 மில்லியன் டாலர்கள் பரிசா கக் கிடைக்கும். ஆனால் அதைவிட ஜோர்டானில் குழந்தையாக இருந்தபோது தண்ணீருக்காக வரிசையில் நின்ற யாகிக்கு இந்த ஆய்வு மிகவும் நெருக்கமானது.

உமர் எம்.யாகி 1965ஆம் ஆண்டு ஜோர்டானின் அம்மானில் ஃபலஸ்தீனத்தைச் சேர்ந்த ஓர் அகதிக் குடும்பத்தில் பிறந்தார். அவரது வளர்ப்பு எளிமையானது. அவர் தனது பெற்றோர், எட்டு உடன்பிறப்புகள், சில கால்நடைகளுடன் நெருக்கடி மிகுந்த இடத்தில் வளர்ந்தார். இறைச்சிக் கடை நடத்தி வந்த தன் தந்தையின் கோரிக்கையை ஏற்று யாகி 15 வயதில் கல்விக்காக நியூயார்க்கின் டிராய் நகருக்குத் தனியாகக் குடிபெயர்ந்தார்.

கல்வியில் சிறப்பாக விளங்கிய யாகி வேதியியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். தனது வாழ்க்கை முழுவதும் யாகி 300க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் 250,000க்கும் மேற்பட்ட முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. யாகியின் பங்களிப்புகள் அவருக்கு 20க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்