மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை பெண்ணுலகம்

நீதிக்காகப் போரடும் ஒவ்வொரு பெண்ணின் வலி இது!
பல்கீஸ் பானு, 1 - 15 September 2022


கடந்த 20 ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்த அதிர்ச்சி மீண்டும் எனது உடல் முழுவதும் பரவியது. எனது வாழ்வையும், எனது குடும்பத்தையும் சீரழித்த, எனது 3 வயது மகளை என்னிடமிருந்து பறித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடந்து சென்றனர்.

நான் வார்த்தைகளை இழந்தேன். நான் இன்னமும் மரத்துப் போயுள்ளேன். இன்று என்னால் இதுமட்டும்தான் சொல்ல முடியும். ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட நீதியை எப்படி இப்படி ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்?

நான் நமது நாட்டின் உச்சபட்சமான நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்தேன். நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்தேன். எனது அதிர்ச்சியிலிருந்து மீண்டு வாழ மெதுவாகப் பயின்று வந்தேன்.

இந்தக் குற்றவாளிகளின் விடுதலை எனது அமைதியை என்னிடமிருந்து பறித்துவிட்டது. நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கையைக் குலைத்துவிட்டது. எனது துயரமும், எனது அலைபாயும் நம்பிக்கையும் எனக்கு மட்டுமானது அல்ல.

நீதிமன்றத்தில் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது. இவ்வுளவு பெரிய அநீதியான தீர்ப்பை வழங்குவதற்கு முன் எனது பாதுகாப்பைப் பற்றியும், எனது நலன் குறித்தும் யாரும் விசாரிக்க முன்வரவில்லை.

நான் குஜராத் அரசிடம் வேண்டுவது, இந்தத் தீங்கான முடிவைத் திரும்பப் பெறுங்கள். அச்சமின்றியும், அமைதியாகவும் வாழும் எனது உரிமையைத் திரும்பத் தாருங்கள். எனது குடும்பமும் நானும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செ#யுங்கள்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்