மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமீபத்தில் மரணித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் அகில இந்தியத் தலைவருமான மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களைக் குறித்த நினைவேந்தல், முத்தான மூன்று பண்புகள், தேசியக் கொடியும் ஆர்எஸ்எஸ்ஸும் போன்ற புதுமையான செய்திகளுடன் வர இருக்கிறது செப்டம்பர் 16-30 இதழ்.

முழுமை இஸ்லாம்

அகப்பார்வை..!
குளச்சல் ஆசிம், 16-30 SEPTEMBER 2022


இறைவன் வழங்கிய அகக்கண் ஞானத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கொரு உதாரணம் அப்துல்லா.

மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர்காட்டைச் சேர்ந்த அப்துல்லா பிறவியிலேயே இரண்டு கண்களிலும் பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி. ஆனால் சாதாரண மனிதர்களின் உயர்கல்வி முயற்சிகளில் சற்றும் குறையாத அசாதாரண மனிதரும் கூட!

கோழிக்கோடு ஃபாரூக் கல்லூரியில் B.A. Arabic And Islamic History படித்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் M.A. Arabic பிரிவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். சமூக சேவைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அப்துல்லா Pain Palliative Care மையத்துடன் இணைந்து ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் செ#து வருகின்றார்.

மாநில அளவில் நடைபெற்ற தொழுகைக்காக அழைப்புவிடுக்கும் பாங்கு சொல்லும் போட்டியில் மூன்று முறை முதல் பரிசு பெற்ற இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான அப்துல்லா திருக்குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செ#யும் ஹாஃபிழ் ஆகும் முயற்சியில் திருக்குர்ஆனின் பத்து அத்தியாயங்களை இதுவரை மனனம் செ#துள்ளார். அவரின் எண்ணம் சிறக்க வாழ்த்துகள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்