மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை இஸ்லாம்

நூற்றில் ஒருவர் ரஹ்மத்துன்னிஸா!
குளச்சல் ஆசிம், நவம்பர் 16-30


Rising Beyond The Celling எனும் என்.ஜி.ஓ அமைப்பு இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் சமூக சேவை, கலை, இலக்கியம், அரசியல், தொழில், கல்வி என்று துறைவாரியாக மிளிரும் நூறு முஸ்லிம் பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கேரளாவில் பல்வேறு துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்திய முஸ்லிம் பெண் பிரபலங்கள் குறித்த இ  புத்தகம் வெளியாகியுள்ளது. அந்த நூறு பேரில் ஒருவராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மகளிரணி தேசியச் செயலாளர் ரஹ்மத்துன்னிஸா இடம்பிடித்துள்ளார்.

TWEET எனும் தன்னார்வ அமைப்பின் நிறுவனரான ரஹ்மத்துன்னிஸா கிராமப்புற பெண்களின் கல்வி, சுகாதார விழிப்பு உணர்வு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அநாதைச் சிறுமியர் கல்வி உதவி, விதவைப் பெண்களுக்கு கைத்தொழில் போன்ற சமூகப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ரஹ்மத்துன்னிஸா "அவ்ரா' இணைய இதழின் ஆசிரியராகவும், "ஆராமம்' மலையாள இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் உள்ளார். புதுதில்லி இஸ்லாமியப் பதிப்பக வாரிய உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் ரஹ்மத்துன்னிஸா சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமாவார்.

இந்தியாவிலும், சவூதி அரேபியா ஜித்தாவிலும் முதல்வர் பணி உட்பட கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்பட்ட அனுபவமிக்க ரஹ்மத்துன்னிஸா மாணவர்கள், ஆசிரியைகள், பெற்றோர்களுக்குக் கல்வி விழிப்பு உணர்வு பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகிறார்.

Child In Islam எனும் நூலை எழுதியுள்ள ரஹ்மத்துன்னிஸாவின் பெயர் கேரள மாநில இஸ்லாமியச் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய நூறு முஸ்லிம் பெண் ஆளுமைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்