மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை இஸ்லாம்

மருத்துவத் துறையில் ஒரு மகுடம்
குளச்சல் ஆசிம், டிசம்பர் 1-15 2022


இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் பெருமைக்குரிய டாக்டர் மர்யம் அபீபா அன்சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.

தெலுங்கானா மாநிலம் மாலேகான் அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உர்து மீடியத்தில் பயின்ற மர்யம் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் முதல் மதிப் பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் குடும்பம் ஹைதராபாத்திற்கு இடம் பெயர 2012இல் மேல்நிலைப்பள்ளி தேர்விலும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு உஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

2017இல் ஐந்து பாடங்களில் தங்கப் பதக்கம் வென்று மருத்துவராகத் தேர்ச்சி பெற்றவருக்கு, உஸ்மானியா கல்லூரி நிர்வாகம் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை மருத்துவம் பயில இலவச அனுமதி வழங்கியது. பின்னர் இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு டிப்ளமோ MRCS சிறப்புத் தகுதி பெற்ற மர்யம் அபீபா மீண்டும் 2020 நீட் நுழைவுத் தேர்வு மூலம் M.Ch அட்மிஷன் கிடைத்து உஸ்மானியாவிலேயே சேர்ந்து பயின்று நாட்டின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராகவும், மிக வயது குறைந்த முதல் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் சிறப்புக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

அரபி ஆசிரியையான தனது தாயின் வழிகாட்டலில் மருத்துவப் படிப்புடன் அரபி காலிகிராஃபி ஓவியம் வரைதலிலும், இஸ்லாமியப் பாடங்கள் கற்பித்தலிலும் சிறந்து விளங்கும் டாக்டர் மர்யம் அபீபா தனது முயற்சிகளை My Success Is A Gift From Allah. And Now A Respon என்று கூறுகிறார்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்