மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழுமை

அருந்தொண்டு புரியும் இளங்கன்று
குளச்சல் ஆசிம், 1-15 ஜனவரி 2023


தனது வயதை ஒத்த சிறுவர்கள் வார விடுமுறை நாள்களில் மைதானங்களில் பொழுதைக் கழிக்கும் வேளையில் 12 வயதான முஹம்மது நிஹால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஐம்பது பேரின் பசியாற்றும் சிந்தனையோடு வலம் வருகிறார்.

கோழிக்கோடு மாவட்டம் கக்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஷிஹாப் நூர்ஜஹான் தம்பதியரின் மகனான முஹம்மது நிஹால் கீராலூர் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றார்.

35 வீடுகள் அடங்கிய கிராமத்தில் சனிக்கிழமை மாலை சென்று மறுநாள் உணவு வழங்குபவர்களைக் குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதோடு ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த வீடுகளுக்குச் சென்று உணவுகளைச் சேகரித்து வந்து அவற்றைப் பொட்டலங்களாக ஆக்கி அருகில் உள்ள நகர் பகுதியில் சைக்கிளில் கொண்டு சென்று தெருவோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு வழங்குவதைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

முஹம்மது நிஹாலின் அறப்பணிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் பெற்றோருடன், இவரது மனிதநேயச் சிந்தனையை ஊக்குவிக்கும் கக்கோடி கிராமத்தினர் ஞாயிறு தோறும் உணவு வழங்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் பெருமழை பாதிப்பின்போது தனது நண்பர்களுடன் இணைந்து 25000 ரூபாய் வசூலித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியதற்காக மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றவர் முஹம்மது நிஹால்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இவரது தந்தை, உறவினர்கள் இணைந்து ஆதரவற்றோர், புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உணவும் உதவிகளும் வழங்கியதை நேரில் பார்த்ததன் தாக்கம் தற்போது இவரை 12 வயதில் ஒரு மனிதநேயம் மிக்கவராக மாற்றியுள்ளது.

இந்த இளம் பருவத்திலேயே இத்தகைய தொண்டுள்ளத்துடன் சேவையாற்றும் நிஹால் வருங்காலத்தில் மகத்தான மக்கள் சேவகராக மலர்வார் என்பது திண்ணம். வாழ்த்துகள் நிஹால்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கடைசிப் பக்கம்

மேலும் தேடல்