மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

முன்மாதிரி அண்டை வீட்டார் முன்மாதிரி சமூகம்
samarasam staff, நவம்பர் 16-30, 2025


இஸ்லாத்தில் அண்டை வீட்டாரின் உரிமைகள் குறித்து தனி முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மகத்துவம் மிக்க குர்ஆனில், ‘மேலும், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்தில் இருக்கும் நண்பர் ஆகியோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 4:36) என்று தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்டை வீட்டாரோடு நல்ல முறையில் நடந்து கொள்வது இறைநம்பிக்கை (ஈமானு)க்கான நிபந்தனையாகவே நபிமொழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘இறைவன் மீது ஆணையாக! எவருடைய தீங்குகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்
லையோ அவர் இறைநம்பிக்கையாளரே அல்லர்’. (புகாரி, முஸ்லிம்)

சுவனத்தில் நுழைவதற்கு அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது அவசியம் என்றும் ஆணித்தரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவருடைய தீங்குகளிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பில்லையோ அவர் சுவனம் புக மாட்டார்.’ (முஸ்லிம்)

மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆனிய வசனத்தில் யார் அண்டை வீட்டார் என்பது குறித்த தெள்ளத் தெளிவான சித்திரம் தரப்பட்டுள்ளது. அதன் படி வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற அண்டை வீட்டாருடன் மட்டுமின்றி ‘பக்கத்தில் இருக்கும் நண்பர்’ உடனும் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்கத்தில் இருக்கும் நண்பர் யார்? அலுவலகத்தில், பணியிடங்களில், தொழிற்சாலைகளில், கடைகளில் உடன் பணியாற்றும் தோழரும், பேருந்திலோ, ரயிலிலோ, விமானத்திலோ உடன் பயணிக்கின்ற சக பயணியும், இன்னும் சொல்லப் போனால் சாலையில் உடன் வாகனம் ஓட்டுகின்ற பயணியும்கூட ஏதேனும் ஒரு வகையில் அண்டை வீட்டார் ஆவர். அவர்களுக்கும் உரிமைகள் உண்டு.

முஸ்லிம்கள் அனைவரும் இந்தப் போதனைகளைப் பேணுதலோடு கடைப்பிடிப்பார்களேயானால் நம்முடைய சமுதாயம் ஒரு முன்மாதிரியான சமுதாயமாக மலரும். அண்டை வீட்டாரைக் கொண்ட சின்னச் சின்ன குழுக்கள் தமக்கிடையே முன்மாதிரியான உறவுகளை அமைத்துக் கொண்டால் ஓர் அழகான, முன்மாதிரியான சமுதாயம் தாமாக உருவாகி நிலைபெறத் தொடங்கி விடும். நல்ல முஸ்லிம் அண்டை வீட்டாராக முத்திரை பதிக்கின்ற முஸ்லிமும், நல்ல முஸ்லிம் அண்டை வீட்டாரைக் கொண்ட ஒரு முஹல்லாவும் மிக மிகச் சிறப்பான முறையில் இஸ்லாத்துக்குச் செயல் சான்று வழங்கக் கூடியவர்களாய் மிளிர்வார்கள்.

வாய்ப்புக்கேடாக இன்று நாம் காணும் சூழலோ இதற்கு முற்றிலும் நேர் மாறானதாக இருக்கின்றது. ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்ற அண்டை வீட்டுக்காரர்களால் அவர்களுக்கு இடையிலான பிணக்குகளால் நம்முடைய சமுதாயமே பிளவுக்கும் பிரிவுக்கும் ஆளாகி நிற்கின்றது. இந்த நிலைமை இஸ்லாத்துக்கும் அவப் பெயரைத் தேடித் தந்து கொண்டிருக்கின்றது.

அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய சகோதர சமுதாயச் சொந்தங்களுடனான உறவும் தொடர்பும் குறித்தும் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.குறிப்பாக போக்குவரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள், சாலைகளின் உரிமைகள், சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்றவை தொடர்பான இஸ்லாமிய போதனைகளைப் பரப்ப வேண்டியது அவசியமாகி உள்ளது.

அண்மைக் காலமாக பெருநகரங்களில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற தனித்துவச் சிந்தனையும் தனிப்பட்ட வாழ்வியலை விரும்புகின்ற போக்கும் அண்டை வீட்டாரைப் பற்றிய அலட்சியத்தையும் அண்டை வீட்டாரின் உரிமைகள் தொடர்பான அக்கறையின்மையையும் அதிகரித்துள்ளது. எனவே இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும், இஸ்லாமிய போதனைகளை நினைவூட்டுவதும், இவ்வாறாக அவற்றைப் பேணி நடப்பதற்கான உந்துதலை ஏற்படுத்துவதும் அவசியமாகின்றது.

நோக்கங்களும் இலக்குகளும்

இதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 2025 நவம்பர் 21 முதல் 30 வரை அகில இந்திய பரப்புரையை முன்னெடுத்துள்ளது. இந்தப் பரப்புரை இயக்கத்தின் மூலமாகப் பின் வரும் இலக்குகள் வென்றெடுக்கப்படும்:

1. முஸ்லிம்கள் மத்தியில் அண்டை வீட்டார் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல்.

2. அண்டை வீட்டாருக்கு இடையில் மனக் கசப்புகள், முரண்பாடுகள், புகார்கள் இருப்பின் அவற்றைக் களைவது. உயிர்த்துடிப்பும் ஊக்கமும் நிறைந்த தொடர்புகளை மலரச் செய்வது.

3. முஸ்லிம்கள் மத்தியில் பக்கத்தில் இருக்கின்ற நண்பர் தொடர்பாக ஊழியர்கள், சக பணியாளர்கள், சக பயணிகள், சாலையில் உடன் வாகனம் ஓட்டி வருகின்றவர்கள், போக்குவரத்து ஒழுங்குமுறைகள் போன்றவை தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல்.

4. அண்டை வீட்டாருடனான நல்லுறவு தொடர்பõன  அழகான,  சிறப்பான முன்மாதிரிகளை பொதுச் சமூகத்துக்கு முன்னால் வாழ்ந்து காட்டுதல்.

5. அண்டை வீட்டார் உரிமைகள் தொடர்பான இஸ்லாமிய போதனைகளை சகேõதர சமுதாயச் சொந்தங்களுக்கு எடுத்துரைத்தல்.

6. சகோதர சமுதாயச் சொந்தங்களுடனான முஸ்லிம்களின் அண்டை வீட்டார் உறவு வலுப்பெறுதல்.

7. இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்கள் பற்றியும் இருக்கக்கூடிய தவறான கருத்துகளையும் அவநம்பிக்கைகளையும் களைவதற்கான அழகான வழிவகையாய் அண்டை வீட்டாருடனான நல்லுறவை ஆக்கிக் கொள்ளுதல்.

8. மற்றவர்களின் உரிமைகளைப் பாதிக்கின்ற, உரிமை மீறல்களுக்கு வித்திடுகின்ற, மற்றவர்களுக்குச் சிரமத்தை உண்டõக்குகின்ற, மன உளைச்சலில் தள்ளு கின்ற பொதுவான பலவீனங்களையும் பிழைகளையும் அடையாளம் காணுதல்; அவற்றைக் களைதல்.

9. அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பேணி நடக்கின்ற, நல்லிணக்கமும் இனிமையும் நிறைந்த உறவுகளைத் தழைத்தோங்கச் செய்கின்ற வகையில் முஹல்லாக்களிலும் வசிப்பிடங்களிலும் சூழலை மாற்றியமைத்தல்.

10. பரஸ்பர பரிவு, ஒத்துழைப்பு, ஒழுங்கும் கட்டுக்கோப்பும், துப்புரவாக வைத்திருத்தல் போன்ற சமூகப் பொறுப்புகள் தொடர்பாக சமுதாயத்தில் அழுத்தமான மாற்றத்தை ஏற்படுத்துதல்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்