மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கதை

இந்த மண்ணிலும் பூக்கள் மலரும்!
கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், நவம்பர் 16-30, 2025


ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியப் பொழுதில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது தான் அவள் வந்தாள். அழைப்பு மணி ஒலித்ததும், ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்..?’

என்கிற  யோசனையுடன்  கதவைத்  திறந்தால்  வெள்ளை முக்காடுடன் அவள் நின்றிருந்தாள். ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று மலர்ந்த முகத்துடன் அப்படியே என்னை ஆரத் தழுவிக் கொண்டாள். மாவு கையுடன் நின்ற நான் திக்குமுக்காடிப் போனேன். ‘யார்? யார்?’ கேள்விகள் மனத்துக்குள் அலைமோத மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றேன்.

எனது திகைப்பைக் கண்டு, ‘என் பெயர் நயீமா. உங்க பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடி வந்திருக்கின்றோம். அங்கே அவங்க வீட்டுச் சாமான்களையெல்லாம் இறக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவரையில் உங்களைப் பார்த்துப் பேசி விட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்று இயல்பாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளுக்குப் பின்னால் நண்டும் சிண்டுமாய் நான்கு குழந்தைகள்.

தேநீர் அருந்திக் கொண்டே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென் றாள் நயீமா. அது முதல் சந்திப்பு என்றாலும் ஏதோ நீண்ட காலம் பிரிந்திருந்து சந்திக்கும் பால்ய சிநேகிதி போல் இயல்பாகப் பழகியது எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது. அவளுடைய குழந்தைகளும் எந்தத் தொல்லையும் தராமல் அடக்கஒடுக்கமாக அமர்ந்திருந்ததும் இலயிப்புடன் அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்ததும்கூட வித்தியாசமாக இருந்தது.

இவ்வாறாக முதல் சந்திப்பிலேயே மனதைக் கவர்ந்துவிட்டாள் நயீமா..!

அவள் வெளியேறிய பின்பும் அவளுடைய இனிமையான பேச்சும், நடத்தையும் வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன், நபிவழி என்று மேற்கோள் காட்டியதும் மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருந்தன.

சில நாள்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் பக்கத்து வீட்டு கொல்லைப்புறத்திலிருந்து  கடப்பாரையõல் குத்தும் சத்தம் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தபோது நயீமாவின் கணவர் கடப்பாரையால் தரையைத் தோண்டிக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் நயீமாவும் அவளுடைய மகள்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகே பாலிதீன் பைகளில் பல்வேறு மலர்ச் செடிகள்..!

அன்று மாலையில் தபால்காரர் தவறுதலாக எங்கள் வீட்டில் போட்டுவிட்ட ‘சமரசம்’ பத்திரிகையைக் கொடுக்கச் சென்ற போது, ‘வாங்க, ஷாஹீன்’ என்று முகம் மலர வரவேற்றாள் நயீமா. முந்தைய நாள் நட்ட ரோஜாச் செடிகளையும் பேரார்வத்துடன் காண்பித்தாள். ‘ஏலகிரியிலிருந்து அவர் வாங்கி வந்தார்..!’ ‘இதெல்லாம் இங்கே வளராது. இது திருப்பத்தூர் மண். கட்டாந்தரை. ரோஜாச் செடி என்ன, புற்பூண்டும் முளைக்காது’ என்று வெடுக்கென்று சொல்லிவிட்டேன். எனக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்று நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

ஆனால் நயீமாவோ முகமலர்ச்சியுடன், ‘அதனாலென்ன..! இந்த மண்ணிலும் பூக்கள் மலர நான் இறைவனிடம் பிரார்த்திப்பேன்..’ என்றாள். பிறகு என்னைக் கூடத்தில் உட்கார வைத்துவிட்டு, ‘இன்று இரவு அவர் தமது நண்பர்களுக்குப் பார்ட்டி கொடுக்கின்றாராம்.

சிக்கன் பொறித்துக் கொண்டிருந்தேன். ஒரே செகண்டில் வருகின்றேன்’ என்று சிட்டாக சமையலறைக்குப் பறந்தாள். எனது மகள்கள் ஆஃப்ரீனும், அஃபீஃபாவும் ரோஜாச் செடியைப் பார்ப்பதற்காக அங்கு வந்தார்கள். அதற்குள் அங்கு திரும்பிய நயீமா இரண்டு பேரையும் அணைத்துக் கொண்டாள். ஆஃப்ரீன் பெரிய மனுஷித்தனமாக, ‘என்ன சமையல்?’ என்று கேட்டõள். ‘சிக்கன்’ என்று வாய் நிறைய புன்னøகத்தவாறு மகிழ்வாய்ச் சொன்னாள் நயீமா.

மீண்டும்  சமையலறைக்குச்  சென்ற நயீமா ஒரு தட்டு நிறைய சிக்கன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்து ‘சாப்பிடுங்க’ என்று புன்னகையுடன் நீட்டினாள். கமகமவென அறையே கோழிக்கறி வாசனையõல் கமழ்ந்தது. எனது இரு மகள்களும் தயக்கத்துடன் ஆளுக்கு ஒரு லெக்பீஸை எடுத்துக் கொண்டார்கள். எனக்கும் ஆசையாக இருந்தும் நான் மறுத்துவிட்டேன். ‘விருந்தினர்களுக்காக சமைத்ததை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு யாருக்குத்தான் மனசு வரும்?’ என்று உள்ளுக்குள் வியந்தேன்.

நயீமாவின் தாராள குணம் எனது குழந்தைகளையும் ஈர்த்துவிட்டது. எனது மகள் சொன்னாள்: ‘நேற்று நாங்க நயீமா ஆன்ட்டி வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவங்க என்ன செய்தாங்க தெரியுமா? எங்களை உள்ளே கூப்பிட்டு ஃபிரிட்ஜிலிருந்து கேரட் அல்வா எடுத்துக் கொடுத்தாங்க..’. எனக்கு வியப்போ வியப்பு. ‘நான் எங்க வீட்டுத் திண்ணையிலேயே மத்த பசங்களை விளையாட விட மாட்டேன். இவளோ கூப்பிட்டு அல்வா கொடுக்கிறாளே’ என்று மிகவும் வியந்தேன்.

அடுத்த நாள் ‘வீட்டு வேலைக்காரி எவரையாவது தெரியுமா’ என்று விசாரித்துக் கொண்டு நயீமா வந்தாள். நான் இல்லையென்று தலையசைத்தேன். ஆனால் அவளோ நான் ஏதோ ஒரு பெரிய பட்டியலே கொடுத்துவிட்டது போல வாய் நிறைய புன்னகைத்தாள். ‘எனக்கு யாரையாவது அனுப்பு என்று இறைவனிடம் கேட்கப் போகின்றேன்’ என்றாள். நான் இமை கொட்டாமல் பார்த்தேன். ‘ஆமா, ஷாஹீன்.இறைவன் நாம் கேட்பதை என்றைக்குமே கொடுக்க மறுப்பதில்லை’ என்று உறுதியாகச் சொன்னாள். ‘நான் இங்கு வருவதற்கு முன்பு அண்டை  வீட்டுக்காரர்கள்  நல்லவர்களாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டுத் தான் வந்தேன்’ என்றும் சொன்னாள்.

அடுத்த வெள்ளியன்று காலனியிலிருந்த எல்லா வீடுகளுக்கும் அவள் கைப்பட எழுதிய கடிதத்தை அவளுடைய குழந்தைகள் தந்தார்கள். மக்ரிபுக்குப் பிறகு திருக்குர்ஆன் விரிவுரை இருப்பதாகவும் அனைவரும் கலந்து கொள்ள வேண் டும் என்றும் அழைத்திருந்தாள் நயீமா. முதலில் மொத்தம் இருப்பத்தியõறு பெண்கள் வந்திருந்தனர். அல்அமீன் காலனியில் நயீமாவின் இறைப்பணி இப்படித்தான் தொடங்கியது. அவ ளுடைய குர்ஆன் விரிவுøரயைக் கேட்டு நான் அசந்து போனேன்.

ஒரு வாரத்திற்குள் அவளுக்கு வேலைக்காரி கிடைத்திருக்கின்றாள். மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. அவற்றில் ரோஜா மொட்டுகள் கண் சிமிட்டின. அவை பூக்களாக மலர்ந்த போது கை நிறைய ரோஜா பூக்களை அள்ளிக்கொண்டு வந்து என்னிடம் தந்தாள், நயீமா. ‘பிரார்த்தனைக்கு மிகப் பெரும் சக்தி உண்டு, ஷாஹீன். நீயும் பிரார்த்தனை செய்து பார். நிச்சயம் பலன் கிடைக்கும். ‘செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்’ என்பது நபிகளாரின் அமுத வாக்கு’ என்றாள் அவள்.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் உண்டாகியிருப்பதாக உணர்ந்தேன். நானும் அவரும் நீண்டகாலமாக இன்னொரு குழந்தைக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தோம். என்னுடைய ஏழாவது மாதத்தில் ஒரு நாள் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்துக் கொண்டே, ‘ஷாஹீன் அம்மா! இரட்டைக் குழந்தைகள்..! யூ ஆர் ஹேவிங் டுவின்ஸ்!’ என்று மகிழ்வோடு சொன்னார் டாக்டர் லீலா சுப்ரமணியம். இந்த மகிழ்ச்சியான செய்தியை உடனே அவருக்குச் சொல்ல வேண்டும் என்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால் அவர் அலுவலகத்திலேயே இல்லை. யாரிடமாவது இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே! மனம் பரபரத்தது. நேராக நயீமாவிடம் சென்றேன். அவளிடம் சொன்னதும் மாஷா அல்லாஹ் என்று மகிழ்ந்தாள். மிருதுவாக அணைத்து உச்சி முகர்ந்து ஆனந்தப்பட்டாள்.

அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களில் நயீமா என்னைத் தினமும் கவனித்துக் கொண்டாள். நான் மருத்துவமனையில் சேர்ந்த போது என்னுடைய குழந்தைகளைக்  கவனித்துக்  கொள்கின்ற பொறுப்பை அவளே முன் வந்து ஏற்றுக் கொண்டாள். ஆஃப்ரீனுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுத்தாள். மதியம் டிபன் செய்து அனுப்பினாள்.

வலிய வந்து நயீமா செய்த சேவைகள் என்னை நெகிழச் செய்துவிட்டது. ‘அல்லாஹ்வே! என்னையும் நயீமாவைப்போல ஆக்க மாட்டாயா?’ என்று பிரார்த்தித்தேன். எப்போதோ அவள் கொடுத்திருந்த ‘முஸ்லிமின் அடிப்படைக் கடமை’ நூலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

கொஞ்சங்கொஞ்சமாக பணிகளை வளர்த்துக் கொண்டே போனாள் நயீமா. குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு காலையிலும் மாலை யிலும் வகுப்பு நடத்தத் தொடங்கினாள். விருப் பப்பட்டவர்களுக்கு அரபியும் கற்றுக் கொடுத்தாள். நோயாளிகளை நலம் விசாரித்தல், மக்கள் சேவை என்று அவளுடைய ஆர்வங்கள் விரிந்தன. என்னுடன் அதிக நேரத்தைக் கழித்த அவள் என்னை அடியோடு மாற்றிவிட்டாள். எனக்குள் அழைப்புப் பணிக்கான ஆர்வத்தை மீட்டி விட்டாள். வெகுசீக்கிரமே அல்அமீன் காலனி வாழ் மக்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்டாள் நயீமா. நயீமா அக்கா, நயீமா ஆன்ட்டி, நயீமா மேடம், நயீமா என பலவாறு அழைக்கப்பட்டாள்.

பிறருக்கு உதவி செய்வதில் அவள் பின் தங்கியதில்லை. மாடி வீட்டு வஹாப் பாய் வீட்டு திருமணத்தின் போது உறவினர்கள், நண்பர்கள் குவிந்துவிட பெண்களைத் தனது வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டாள் அவள். அதே போல் முத்தவல்லி அன்வர் பாய் பாட்டி இறந்து போன போது வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் திரண்டுவிட்டனர். எல்லோருக்கும் மதிய உணவு தயார் செய்து அனுப்பினாள், நயீமா. ரமளான் வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம். குர்ஆன் கூட்டாய்வு, இஃப்தார் நிகழ்ச்சிகள், மகளிருக்கான தொழுகை ஏற்பாடுகள் என்று பிஸியாகிவிடுவாள் நயீமா. இவற்றோடு அக்கம்பக்கத்து வீடுகளுக்கு வடை, கஞ்சி செய்து அனுப்பிவைப்பாள். முத்தாய்ப்பாக சகோதர சமுதாயச் சொந்தங்களுக்காக பெண்களுக்கான பெருநாள் சந்திப்பில் இரண்டாயிரம் பேர் திரண்டபோது, ‘ஆண்களையும் மிஞ்சிவிட்டீர்களே!’ என்று ஜமாஅத் தலைவர் பாராட்டினார்.

இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு உங்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற் படுத்தியது எது என்று நயீமாவிடம் கேட்டேன்’.

என் கணவர் குர்ஆன் பிரதியை எனக்கு அன்பளிப்புச் செய்தார். அதில் ஓர் வசனம் என்னை மாற்றியது என்று வாசித்துக் காட்டினாள். அது அன்னிஸா அத்தியாயத்தின் 36 ஆவது வசனம்..! ‘மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணைவைக்காதீர்கள். தாய் தந்øதயரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்துகொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர்கள், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும் கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.’

வாசிக்கும்போதே இனம் புரியாத உணர்வு! மெய் சிலிர்த்துவிட்டேன். அல்லாஹ் என்னைப் பார்த்துத்தான் கட்டளையிடுவதாக நினைத்தேன். இஸ்லாத்தின் ஒட்டுமொத்த போதனைகளும் இதில் அடக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கின்ற, பழகுகின்ற, உறவும் நட்பும் கொள்கின்ற அத்துணை மனிதர்களுடனும் இஹ்ஸானுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இறைவனின் ஆணை. இஹ்ஸான் என்பது விட்டுக் கொடுத்தல், குறைவாகப் பெற்றுக் கொண்டு அதிகமாக வழங்குதலைக் குறிக்கும். எதைச் செய்தõலும் அழகாக, சிறப்பாக, நேர்த்தியாக, குறையின்றிச் செய்வதையும் குறிக்கும்.
அந்த வசனமும் இஸ்ஹான் எனும் பண்பும் தான் எனக்கான உந்துசக்தி என்று தன் வெற்றியின் ரகசியம் சொன்னாள் நயீமா!

நான் 4:36 வசனத்தைக் குறித்துக் கொண் டேன். எங்கள் தோட்டத்திலும் மலர்கள் மலரும். இன்ஷா அல்லாஹ்!

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்