மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள்
கவிஞர் காசிம், கடையநல்லூர், ஜனவரி 1-15, 2026


 

 

அன்று தூளியிலே தாலாட்டு
இன்று கைப்பேசியிலே தாலாட்டு
அன்று தாத்தா பாட்டி சொன்ன கதை
இன்று கைப்பேசியிலே கானக் கதை

அன்று நிழற்படம் நிலையம் சென்று படம்
இன்று நின்று, இருந்து தானே பிடிக்கும் படம்
அன்று திரையரங்கு சென்று திரைப்படம்
இன்று உள்ளங்கையில் பார்க்கும் திரைப்படம்

அன்று எவ்வளவு தூரம்
பயணம் சென்று காண்போம்
இன்று பயணப்படாமலே கண்டு பேசும் உறவு
அன்று வாழ்க்கைப் பயணத்திலே பாதி ஆயுள்

இன்று அவசியப் பயணம் மட்டுமே வாழ்க்கை
அன்று காத்திருப்பு
கடந்த, நிகழ், எதிர்காலக் கனவு
இன்று காத்திருப்பு

கைப்பேசியில் தொலைந்துவிட்டது
அன்று வாய்ப்பாட்டுக் கணக்கு வாயிலே
இன்று செயலியில் கணக்கு கையிலே
அன்று படித்தவர் மட்டுமே புத்தகம் படிப்பர்

இன்று படிக்காதவரும் கைப்பேசியில் படிப்பார்
அன்று நண்பர், நாய், பூனை
பறவையுடன் விளையாட்டு
இன்று இருந்த இடத்திலே

கைவிரலிலே விளையாட்டு
அன்று நிலவே சோறூட்டும்
இன்று கைப்பேசியே சோறூட்டும்
அன்று கடிதங்கள் உறவைப் பேசின

இன்று கைப்பேசியே கண்டு பேசுகிறது
அன்று வீட்டை விட்டுச் சென்றோம்
இன்று வீடே கையுடன் வருகிறது
இன்று அப்பா எப்போ வைப்பார்
அம்மா எப்போ வைப்பார்

கைப்பேசிக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள்
அப்பாவும் அம்மாவும்
தேடுகிறார்கள்
பிள்ளைகளை


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்