
காலி வயிறும்
காய்ந்த உதடுகளும்
ஏந்திய கைகளும்
நின்ற கால்களும்
சாட்சியாகும் நோன்பு நாளில்
வணங்கிய நாள்களும்
வழங்கிய தானமும்
வைகறை ஓதலும்
உச்சரித்த திருப்பெயரும்
நீட்சியாகும் இறுதி நாளில்
பசியின் பகலும்
இரவு வணக்கமும்
ஏழை வரியும்
பாவமன்னிப்பும்
காட்சியாகும் வாழ்நாளில்
கஸ்தூரி வாசமும்
ரய்யான் வாசலும்
இறையின் கூலியும்
நோன்பின் பரிந்துரையும்
மாட்சிமையாகும் தீர்ப்பு நாளில்
தக்பீர் முழக்கமும்
ஈதின் தர்மமும்
உவகையும் உபசரிப்பும்
தொடங்கிடும் பெருநாளில்!