2000 ஆண்டின் செப்டம்பர் 115 இதழ் சமரசம் கவிதைச் சிறப்பிதழாக மலர்ந் தது. வழக்கமான பகுதிகளைத் துறந்து இலக்கிய நயத்தில் இதழ் முழுவதும் பின்னப்பட்டிருந்ததைக் குறிக்கும் வகையில் "இந்த இதழ் மட்டும் கவிரசம்' என்று முகப்பிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இதழின் தலையங்கம் கூட "இலக்கியம் எனப்படுவது' எனும் தலைப் பில் இலக்கியம் குறித்துப் பேசியது. வி.எஸ்.முஹம்மது அமீனின் இஸ்லாமும் இலக்கியமும் முகப்புக் கட்டுரையாக முகிழ்த்திருந்தது. கவிக்கோவின் கட்டுரை யுடன் கல்யாண்ஜியின் நடைச்சித்திரம் இதழுக்கு இலக்கியச் சுவை கூட்டியது. ரவி சுப்ரமணியன், பா.சத்தியமோகன், நிஷா மன்சூர், ஹெச்.ஜி.ரசூல், ஏ.எஸ்.எம்.அனு, கயஸ், முடவன்குட்டி கவிதைகளால் இதழ் முழுவதும் கவிரசம் நிறைந்திருந்தது. சமரசம் கவிதைச் சிறப்பிதழுக்காக கவிஞர் கலாப்ரியா, கவிஞர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் இன்குலாப் ஆகியோரின் நேர்காணல் இடம் பெற்றிருந்தது. கடந்த டிசம்பர் முதல் நாள் காலமான கவிஞர் இன்குலாபின் நேர்காணலின் ஒரு பகுதியை அவர் இல்லாத இந்த நேரத்தில் வாசிப்பதற்காகப் பரண் ஏகினோம்.

கவிதை வடிவில் நிறைய படைப்புகள் இன்று வெளிவருகின்றன. இதில் உண்மையான கவிதைகளும், கவிதை வடிவத்தில் போலிகளும் அடங்கும். உங்களுடைய அனு பவத்தில் எதை நீங்கள் கவிதையாக வரையறுக்கின்றீர்கள்?
! வெள்ளம்போல் கவிப் பெருக்குக் கண்டு மகிழ்கின்றேன். பெரும்பாலோர் கவிதைவயப்படுவது எவ்வளவு மேன்மை யானது
! இதில் கவிதை எழுதுகிறவர்களும், கவிதைபோல் எழுதுகிறவர்களும் உண்டு. அனுபவம், உண்மை, உன்னத வெளிப்பாடு என்ற தளங்களில் எழுதப்படுகின்ற கவிதைகள் அசலானவை. எது உண்மை, எது போலி என்று வரையறை செய்வதில் குழுமனப்பான்மை தலையெடுப்பதால் என்னளவில் மேற்கண்ட தளங்களில் இயங்குகின்ற கவிஞர்களைச் சரியானவர்கள் என்று காண்கின்றேன்.
? தமிழின் நவீன கவிதைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. கவிதைப்போக்கில் மாற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்திருக்கின்றதா? அவை ஆரோக்கியமான பாதையில் செல்கின்றனவா?
! என்றும் கவிதை புதுமையின் உணர்வு மையமாகத்தான் இருக்கும். நம்முடைய கவிதை வரலாறு இதற்குச் சான்று. படைப்புக்கு நேர்ந்து கொண்டவர்கள் நலமான கவிதைகளையே தந்து கொண்டிருக்கின்றார்கள்.
? உங்கள் படைப்பில் இயங்கும் பிரதேசம், பாடுபொருள் இவை குறித்த உங்கள் படைப்பு சார்ந்த அனுபவம்? ஒடுக்கு முறைகளின் மீதான கோபம், என்னைக் கவிதையை ஆயுதமாக வரிக்கத் தூண்டியது. கவிதையின் கலை இயல்பே, ஒடுங்க மறுப்பது என்று கண்டுகொண்டேன். என்னுடைய சரியும், தவறும் எனக்குத் தெளிவாகிறது. இவற்றிலிருந்து ஓர் உன்னதத்தை நோக்கிச் செல்ல முயல்கிறேன்.
? வாசகர்களிடையே நிலவும் கவிதையின் புரிதல், புரிதலின்மை குறித்து...?
! எந்த ஒரு கலையும் புரிதலை ஒரு கூறாகக் கொண்டது. எந்த ஒரு ரசனையும் புரிய முயல்வதை ஒரு கூறாகக் கொண்டது. கலைஞனும், வாசகனும் முயல்தல் வேண்டும். ? கவிதைகளுக்கென்று ஏதேனும் இலக்கு உண்டா?
! எனக்கு இலக்கு உண்டு. மானுட விடுதலை