முத்தலாக் விவகாரம் இன்று நீதிமன்றத்தில் விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இது புதிதல்ல.. இதற்கு முன்பும் ஷரீஅத் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்கின்றது. அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், அன்றைய முஸ்லிம் தனி யார் சட்ட வாரியத் தலைவராகச் செயல்பட்ட மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களும் என்ன செய்தார்கள்? நீதிமன்றமும், அன்றைய நாளிதழ்களும், அன்றைய நாடாளுமன்ற அவையும், முஸ்லிம் சமுதாயமும் என்ன செய்தன என்ற குறிப்புகளை சமரசத்தின் 1985 86 ஆம் ஆண்டு இதழ்கள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. அன்றைய மத்திய அமைச் சர்கள் பரத்வாஜ், ஆரிப் முஹம்மது கான், அன்சாரி, அகாலிதள உறுப் பினர் ரமோதலிய ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஷரீஅத் தொடர்பாக எழுப்பிய மாறுபட்ட குரல்களையும் அன்றைய இதழ் படம்பிடித்துள்ளது. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (குஐO) அகில இந்திய அளவில் ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் ஷரீஅத் கட்டுரைப் போட்டியையும் நடத்தி 500 ரூபாய் வீதம் மூன்று கட்டுரைகளுக்கு பரிசு வழங்கியுள்ள குறிப்பையும் அவ்விதழ்களில் காண முடிந்தது. ஷரீஅத் சட்டத்திற்கு அருண்ஷோரியும், கிருஷ்ணய்யருமா அதாரிட்டி?' என்ற தலைப்பில் நூர்ஜஹான் அமீர் எழுதிய சூடான கட்டுரை ஒன்றும் அவ்விதழில் இடம் பெற்றிருந்தது. சிறுபான்மைக் கமிஷன் தலைவருக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அன்றைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் நத்வி அவர்கள் எழுதிய மிக முக்கியமான கடிதமும் 1985 நவம்பர் இதழில் வெளியாகி இருந்தது. 21091985 முதல் 27091985 வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டலின் படி ஷரீஅத் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்ட செய்தி தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக ஷரீஅத் விழிப்பு உணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
கான்பூர், மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் 5 இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். பீகாரில் 1985 நவம்பர் 24ஆம் நாள் ஷரீஅத் பாதுகாப்புப் பேரணி நடத்திய குஐO மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடியும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதையும், அதற்கான கண்டனத்தையும் அந்தப் பதிவுகளின் ஊடாக காண முடிந்தது. மஹாராஷ்டிராவில் மிகப்பெரும் அளவில் மகளிர் மாநாடு ஷரீஅத் பாதுகாப்பிற்காகக் கூடி பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது. மத்தியப்பிரதேச ஜமாஅத்தே இஸ்லாமி ஷாபானுவை சந்தித்து விரிவான நேர்காணல் எடுத்திருந்ததையும் சமரசம் வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியார் சட்டம் காப்போம் என்ற புத்தக அறிமுகம் வெளியாகியிருந்தது. இலக்கியத் தென்றல் கலைமாமணி அடியார் எழுதிய அந்தப் புத்தகத்தை நீரோட்டம் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. மீண்டும் மறுவெளியீடு செய்யத் தகுந்த மிக முக்கியமான அந்த நூல் எங்கு கிடைக்கும்? யாரிடம் இருக்கிறது?
அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் துக்ளக் ஆசிரியர் சோ, தனியார் சட்டம் குறித்து சில வினாக்களை எழுப்பியிருக்கின்றார். அதற்கு ராஜீவ் அளித்த பதில்களை 15011986 துக்ளக் இதழ் வெளியிட்டதை சமரசம் இதழ் பதிவு செய்திருக்கின்றது. அந்த நேர்காணலில் ராஜீவ் குறிப்பிடுகிறார்: "இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது முதலில் உணரப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும், தங்கள் மதத்தின் சமூக வழிமுறைகளைப் பின்பற்ற அனு மதிக்கும் நாடுதான் மதச்சார்பற்ற நாடு என்பது பண்டிட்ஜியும், அரசியல் நிர்ணயச் சட்டத்தை உருவாக்கியவர்களும் கூறிய விளக்கம். நானும் இப்படித்தான் இதை உணர்கிறேன். ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பதை கொல்லைப்புறமாக நுழைக்க முயற்சிக்கக் கூடாது. அதனால் சிக்கல்கள் தோன்றும். நமது அமைப்பிலேயே சில பிரிவினருக்கு நம்பிக்கை அற்றுப் போய்விடும். முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை முஸ் லிம் சட்டத்தின் கீழேயே கொடுக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். சில முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரபலமான நபர்கள், வக்கீல்கள், வியா பாரிகள் போன்றவர்களுடன் நான் பேசினேன். மதத் தலைவர்கள், நவீன வாழ்க்கை முறையை ஏற்றுள் ளோர் ஆகியோரிடமும் பேசினேன். முஸ்லிம் சட்டத்தின் கீழேயே நமது நீதிமன்றங்கள் மூலமாகவே பெண்களுக்கு உரிய உரிமையை உத்தரவாதமாகப் பெற்றுத்தர இயலும் என்றே தோன்றுகிறது. நீதிமன்றங்கள் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் முஸ்லிம் சட்டங்களுக்கு அர்த்தம் கற் பிப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

சரியான முறையில் அர்த்தம் செய்யப்பட்டால் தாங்கள் ஆட் சேபிக்க மாட்டோம் என்றும் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக ஒரு குறிப்பையும் அவர்கள் என்னிடம் கொடுத்திருக்கின்றார்கள். நமது சிவில் சட்டங்களோ, வேறு சட்டங்களோ தரக்கூடியதை விட அதிகமான பாதுகாப்பை அவர்களுடைய சட்டம் தருகிறது. அதற்கு எழுத்துவடிவம் (இணிஞீடிஞூடிஞுஞீ) கொடுத்து நமது சட்டங்களின் ஒரு பகுதியாக ஆக்கி விடலாம். பெண்களுக்கு உரிய பாதுகாப்புக் கிட்டும். இதைச் செய்ய முடிந்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முஸ்லிம் சட்டத்தின் பிரச்னைகளில் ஒன்று, அதற்கு எழுத்துவடிவம் இல்லை என்பது. முஸ்லிம் சட்டத்தை எழுத்துவடிவமாக்குவது நான் அல்ல. முஸ்லிம் தலைவர்களும், பெரியவர்களும், முன்வந்து என்ன செய்ய இயலும் என்பது பற்றி ஆலோசிக்க வேண்டுமே தவிர நான் செய்யமுடியாது. அவர்கள் இதைச் செய்வார்கள் என்று நான் நம்பு கிறேன். ஏனென்றால் எழுத்து வடிவம் கொடுத்தால் ஒழிய இச்சட்டங்களுக்கு அர்த்தம் செய்வது நீதிமன்றங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.'