மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

பரண் 22 சமரசம் 1988 பிப்ரவரி 16 - 29 இவர்களைத் தேர்ந்தெடுத்தது யார்?


ஜனவரி 28 தமிழ்நாட்டின்  ஒவ்வொரு  குடிமகனின் முகத்திலும் கரி பூசப்பட்ட நாள். தமிழக சட்டமன்றத்தில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே தலைகுனிய வைத்து விட்டன. ஏற்கனவே எலும்பும், தோலுமாக சோகை பிடித்துக் கிடந்த ஜனநாயகம் அன்று ஒரேயடியாய் சாகடிக்கப்பட்டுவிட்டது. ஆடிக்காற்றில் பறக்கும் பஞ்சுபோல அரசியல் நாகரிகம், நாற்காலிகளாகவும், "மைக்'குகளாகவும் சட்டமன்றத்தில் பறந்தது. விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் எத்தனை இழிநிலைக்கு வந்துவிட்டது என்பதற்கு ஜனவரி 28 சம்பவங்கள் நல்ல எடுத்துக்காட்டாகும். தமிழ கத்தை தலைகுனிய வைத்த அந்த நிகழ்ச்சிக்கு யார் யாரெல்லாமோ கண்டிக்கப்படுகிறார்கள். ஜானகி கோஷ்டி, ஜெயலலிதா கோஷ்டி, முன்னாள் அமைச் சர்கள், இ.காங்கிரஸ் என்று அனைத்துப் பிரிவினரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனால் உண்மை யிலேயே கண்டனத்துக்குரியவர்கள் யார் தெரியுமா? தமிழக மக்கள்தான்! சட்டமன்றத்தில் இருந்தவர்கள் யார்? ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அந்த மக்கள் பிரதிநிதிகள் எங்கிருந்து வந்தவர்கள்? வானத் தில் இருந்து நேரடியாக இறங்கி வந்து சட்டமன்ற இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்களா என்ன...? இல்லையே....! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கள்தானே அவர்கள்..! அதாவது, "பொதுமக்களாகிய நாங்கள் அத்தனைபேரும் ஒரே சமயத்தில் சட்ட மன்றத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த முடியாது. ஆகவே நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பு கிறோம். எங்கள் சார்பாக நீங்கள் நாட்டை ஆளுங் கள்!' என்று சொல்லி நாம் தேர்தலில் ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்து அனுப்பிவைத்த பிரதிநிதிகள்தானே அவர்கள்! நம்முடைய அந்தப் பிரதிநிதிகள் பதவிக்காக வெறி பிடித்தவர்கள்போல நடந்து கொள்கிறார்கள் எனில் அதற்குக் காரணம் யார்? நாம் தான்! இவற்றுக்கான அடிப்படைக்கோளாறு வேறு எங்கேயும் இல்லை; நம்மிடம்தான் இருக்கிறது! இந்தப் பேருண்மையின் அடிப்படையில்தான் ஜன நõயகம் வெற்றி பெற வாக்காளர்கள் விஷயம் தெரிந்த வர்களாய், விழிப்பு உணர்வு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வாக்காளர்கள் விஷயம் தெரியாதவர்களாய் இருந்தால், ஜனநாயகத்திற்கே ஆபத்து தோன்றிவிடும்.

பிறகு "மக்கள் பிரதிநிதிகள்' என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக நாட்டு நலனையே காலில் போட்டு மிதிக்கத் தொடங்கி விடுவார்கள். அந்தக் கொடுமையைத்தான் தமிழக மக்கள் அண்மையில் அனுபவித்தார்கள். ஏறத்தாழ கடந்த ஐம்பது நாள்களாக தமிழ்நாட்டின் அனைத்து முக்கியப் பிரச்னைகளும் பின்தள்ளப் பட்டுவிட்டன. அரசியல்வாதிகள் அடித்த கூத்தில் நிர்வாகமே ஸ்தம்பித்து விட்டது. யார், யாருடைய கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், எந்தக் கோஷ்டியின் கை ஓங்கும், ராஜீவ் காந்தி அதிக நேரம் பேசியது ஜானகி யுடனா, ஜெயலலிதாவுடனா, இ.காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது; ஆர்.வி மூப்பனார் பூசல், ஆடு மாடுகளைப் போல் விலைபேசப்பட்ட எம்எல்ஏக்கள் என்று அசிங்க அரசியலின் களமாகிவிட்டது தமிழ் நாடு! இவற்றுக்கொல்லாம் காரணகர்த்தாக்கள், தகுதி யற்றவர்களைத் தங்களின் பிரதிநிதிகளாக ஆட்சி பீடத்திற்குத் தேர்ந்தெடுத்த பொது மக்கள்தான்! ஒரு வழியாக சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடி யரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. மே மாதம் தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என்ற அடிப்படையில் அதற்கான பூர்வாங்கப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் முன்பு செய்த தவறுகள் மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போட்டியிடும் வேட்பாளார்களில் நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்தவர் யார் என்று சீர்தூக்கிப் பார்த்து, அப்படிப்பட்டவர்களுக்கே அவர்கள் எந்த மதத்தை, கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வாக்களிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு "இவர் நமது ஜாதிக்காரர்; நமது இனத்தைச் சேர்ந்தவர்' என்ற அடிப்படையிலோ, அல்லது சினிமா கவர்ச்சி, பண பலம் ஆகியவற்றில் மயங்கி அவற்றின் அடிப்படை யிலோ வாக்களித்தால், ஜனவரி 28 சம்பவங்கள் தமிழ் நாட்டில் தொடர்கதையாகிவிடும். இச்சமயத்தில் நாட்டு நலனில் அக்கறை கொண்ட சான்றோர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூகவியல் நிபுணர்கள் போன்றோர் முன்வந்து பொது மக்களுக்கு விழிப்பு உணர்வை ஊட்டிடவும், ஒழுக்க மாண்புகளையும், நேர்மைப் பண்புகளையும் மலரச் செய்திடவும் பாடுபடவேண்டும். எதிர்காலத்திலாவது ஒழுக்கமுள்ள ஒரு நல்லாட்சியை, ஊழலற்ற உன்னத ஆட்சியை உருவாக்க நாம் இப்பொழுதிலிருந்தே உழைக்க வேண்டும். இப்போதும் அதுதான் நடந்திருக்கின்றது. அன்று எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் ஜெயலலிதா ஜானகி என இரு அணியாக அதிமுக பிரிந்தது.

நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது ஜெயலலிதா சட்டமன்றத்திலிருந்து தலைவிரி கோலமாக வெளியேறினார். இன்று ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், சசிகலா (எடப்பாடி பழனிச்சாமி) என இரு அணியாக அதிமுக பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்டாலின் சட்டமன்றத்திலிருந்து வேஷ்டி, பனியன் சகிதமாக வெளியேறினார். அன்று ஜெயலலிதா சபதம் செய்தார். இன்று அவருடைய சமாதியில் அடித்து சசிகலா சபதம் செய்திருக்கின்றார். 29 ஆண்டுகளைக் கடந்தும் அதே காட்சிகள்தான் மீண்டும் அரங்கேறியிருக்கின்றன. நமது அரசியல்வாதிகள் மாறவில்லை என்பதல்ல. இவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் மாறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். நீதிக்கும் அநீதிக்கும் இடையேதான் சண்டை நடைபெற வேண்டும். ஆனால் ஒரு அநீதிக்கும் மற்றொரு அநீதிக்குமான சண்டைதான் இங்கு நடைபெறுகிறது. சத்தியத்திற்கும், அசத்தியத்திற்குமான யுத்தத் தில் நாம் சத்தியத்தின்பக்கம் நிற்கலாம். ஆனால் ஒரு பெரிய அசத்தியத்திற்கும், அதைவிடப் பெரிய அசத்தியத்திற்குமிடையேயான சமரில் நமது நிலை தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. நன்மை, தீமைக்கிடையேயான போராட்டத்திற்குப் பதில் இரண்டு தீமைகளுக்கிடையேயான போராட்டத்தில் நாம் இருப்பதில் குறைந்த தீமையை ஆதரிக்கவேண் டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறோம். உதறித்தள்ளுவதற்கு இது உள்கட்சிச் சண்டை அல்ல. நம்மை ஆள்வதற்காக நாம் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்கள் ஆட்சி செய்வதற்குப் பதில் நீயா, நானா பதவிச் சண்டையில் ஈடுபடும் போது ஓட்டுப்போட்ட நமது மைவிரல்களிலிருந்து இயலாமை தெறித்தெழுகிறது. அறத்திற்குக் கட்டுப்பட வேண்டிய மக்களின் பிரதிநிதிகள் பணத்திற்கும், பதவிக்கும் கட்டுப் பட்டு நடப்பதையே இன்றைய சட்டமன்ற அவ லங்கள் உரத்துச் சொல்கின்றன. கூவத்தூர் சொகுசு பங்களாக்களில் ஒருவாரத்திற்கும் மேல் அடைத்துவைத்து அவர்களை "உரிய' முறையில் கவனித்தால்தான் அவர்கள் ஓரணியில் இருப்பார்கள் என்றால் அங்கு கொள்கைக்கும், நியாயத்திற்கும் எந்த வேலையும் இல்லை என்றே அர்த்தம்.

"குதிரை பேரத்திற்கு' வழிவகுக்கும் என்ற சொல்லாடல் ஒன்றே நமது சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தைச் சீர்குலைப்பதற்குப் போதுமானதாகும். குதிரை பேரத்தை முகத்திலறைந்தாற்போல் சொல்ல வேண்டுமென்றால்.. "இவர்களை வெளியில் விட் டால் அடிமாட்டு விலைக்கு விலைபோய் விடு வார்கள். எனவே அவர்கள் விலைபோவதற்கு முன்பாக காரியத்தை முடித்துவிடுங்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் அந்தக் குற்றவாளிதான் இந்த அரசை வழி நடத்துகிறார் என்பதை விட அவலம் தமிழகத் திற்கு வேறு என்னதான் இருக்க முடியும்? முதன் மைக் குற்றவாளியின் பெயரைச் சொல்லித் தான் இன்றைய நாற்காலியைக் காப்பாற்ற முடியும் என்றால் விழுமம் சார்ந்த அரசியலைக் குழிதோண் டிப் புதைத்துவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். குற்றவாளியின் பெயரை உச்சரிக்கும் போதெல் லாம் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மேசை மீது அடித்து மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரம் செய்கின்றார்கள் என்றால் இவர்கள் ஒருபோதும் மக்களின் பிரதிநிதிகள் அல்லர். குற்றவாளிகளின் பிரதிநிதிகள். யார் வேண்டு மானாலும் வரட்டும், எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் எங்களுக்கு எஞ்சிய நான்கரை ஆண்டுகள் பதவி வேண்டும் என்பதைச் சொல்லும் இந்த நாற்கõலி வெறியர்களால் நமது ஜனநாயகத்தை ஒருபோதும் கட்டி எழுப்ப முடியாது. இந்த பதவிச்சண்டையால் ஆட்சி கவிழ்ந்து அந்த சந்தர்ப்பத்தில் நமக்கு நாற்காலி கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் வெறியாக மாறியதைத்தான் எதிர்க்கட்சியின் அவைக்கூச்சலும், அநாகரிக அவை நடவடிக்கைகளும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

தேர்தல் காலத்தில் உச்சி வெயிலில் வியர்வை ஒழுக கைகூப்பி "உங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்' என்று கெஞ்சியவர்கள் இவர்கள்தாமா? என்று ஒவ்வொரு வாக்காளனும் தம்மையே நொந்து நோக்கும் நிலைதான் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்தேறியது. "நான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவன் என்பதனால்தான்' என்று தமது உளக்கிடக்கையை அழகாக தட்டச்சு செய்து ஒரு செய்தி வாசிப்பாளரைப் போன்று சபாநாயகர் வாசித்துக் காட்டிய போது ஒட்டுமொத்த ஜனநாயகக் கூறுகளும் உடைந்து நொறுங்கின. இதைவிட ஒரு இழிவான வாக்கு மூலத்தை எவரும் வழங்கிட முடியாது. இன்றைய அரசியல் ஜாதி, மத, இனத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன என்பதை சபநாயகர் தனபாலின் அன்றைய உரை எடுத்தியம்பியது. ஊழல்கறை படிந்த குற்றவாளிகள், மாஃபியா கும்பல்கள், பதவி வெறிபிடித்தவர்கள், பிம்ப அரசியலைத் தூக்கிப் பிடிப்பவர்கள், ஜாதிய, மத அரசியலை முன்னெடுப்பவர்கள், எப்படியேனும் நாற்கõலியைத் தட்டிப்பிடித்திட வேண்டுமென்று நாடகமாடுபவர்கள் ஆகியோருக்கு மத்தியில் இன்றைய தமிழக அரசியல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னுமொரு தேர்தலினால் இந்த அவலத்தைப் போக்கிவிட முடியாது. அந்தத் தேர்தலின்÷பாதும் நாம் இவர்களையோ, இவர்களைப் போன்றவர்களையோதானே தேர்ந்தெடுக்கப் போகிறோம். மாறவேண்டியதும்,  மாற்ற வேண்டியதும் நமது அரசியல்வாதிகளை அல்ல. மக்கள்தான் மாற வேண்டும். நாம் மாறவில்லை என்றால் எதுவும் இங்கு மாறப்போவதில்லை. நாம் எப்படியோ அப் படித்தான் நமது ஆட்சியாளர்களும்...!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர பரண்

மேலும் தேடல்