மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள் பிரதமரே..! உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது

நீதிமன்றங்களே நீதியைக் கொலை செய்கின்றன! 31
பிரகாஷ் ராஜ், Feb 1 - 15


இங்கே இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன்.நாம் அனைவரும் சேர்ந்து சுமக்கும் வலியின் காரணமாக நான் உங்களை அடையாளம் காண்கிறேன்.தொடர்ந்து போராடும் மன உறுதியின் காரணமாக உங்களை என்னால் எளிதில் அடையாளம் காண முடிந்தது.

சில மாதங்களுக்கு முன்பு நான் டெல்லியில் அரசியல் கைதிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.இன்று நான் உமர் காலித் குறித்துப் பேச விரும்பவில்லை.அவர் யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.டெல்லியில் நான் சொன்னதையே இங்கேயும் மீண்டும் கூற விரும்புகிறேன்.தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

இந்த நாட்டில் இப்போது நடந்துகொண்டிருப்பவை அனைத்தும் இனப்படுகொலைக்கான (Genocide) ஆயத்தப் பணிகளே! அவர்கள் முஸ்லிம்கள்,பழங்குடியினர், சிறு-பான்-மையினரை முற்றிலுமாகத் துடைத்தெறிய விரும்புகிறார்கள்.அதுதான் அவர்களின் செயல்திட்டம்.நாம் விதிகள் ஒழுங்குமுறைகளைப் பற்றிப் பேசலாம்.ஆனால் அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை.அவர் களுக்கு மனசாட்சியே கிடையாது.

‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி' என்று உலகம் முழுவதும் நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்.இந்த வாசகம் ஏன் உருவானது?இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த நாட்டில் நமக்கென காவல் நிலையங்கள் இருந்தன. ஆனால் காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும்,சட்டவிரோதமான,அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிற,ஊழல் நிறைந்த காவல் நிலையங்களை உருவாக்கினர்.இதனால் சாமானிய மனிதன் காவல் நிலையத்திற்குச் செல்லவே பயந்தான்.குழந்தைகள் காவல் துறையைக் கண்டு அஞ்சினர்.

இருப்பினும்,கடந்த ஒன்றரை அல்லது இரண்டு தசாப்தங்களுக்கு முன்புவரை,ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டாலோ,யாராவது நம் குரலை ஒடுக்க முயன்றாலோ அல்லது நமக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தினாலோ நாம் ஒரு வார்த்தையைச் சொல்வோம்:‘உங்களை நான் நீதி மன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்.'

நாம் ஏன் அப்படிச் சொன்னோம்? ஏனெனில் நீதிமன்றமே நமது இறுதி நம்பிக்கையாக இருந்தது.நீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும் என்று நாம் உறுதியாக நம்பினோம்.ஒரு நீதிமன்றம் எந்த அரசியல் கட்சிக்-கும்,ஆளும் அரசாங்கத்திற்கும் அல்லது எந்த மத நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதில் நாம் உறுதியாக இருந்தோம்.

ஆனால் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால்,இன்று நான் இந்தத் துணிச்சலான கூற்றை முன்வைக்கிறேன்.இந்திய நீதிமன்றங்களே,உங்களுக்கு வெட்கமாக இல்லையா?நீதியைக் கொலை செய்வது என்ற மிகப் பெரிய குற்றத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் பாஜகவுடன் போராடுகிறீர்களா?பாஜகவுடன் போராடாதீர்கள்.நீங்கள் RSS உடன் தான் போராட வேண்டும்.ஹிட்லர் ஏன் தோல்வியடைந்தார்?முசோலினி ஏன் தோல்வியடைந்தார்? ஏனெனில் அவர்கள் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார்கள்.ஆனால் இங்கே,RSS என்பது ஓர் அரசியல் கட்சி அல்ல.

ஒரு நாடகத்திற்காக நான் ‘பஞ்சதந்திரம்' படித்துக்கொண்டிருந்தேன்.அதில் ஒரு குளம் இருக்கும்.அதற்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு அரக்கன் இருப்பான்.ஆனால் மேலே ஒரு தாமரை மலர்ந்திருக்கும்.நீங்கள் அந்தத் தாமரையுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.அந்தத் தாமரைக்கு வலிமை தரும் ஆழமான வேர்களுடன் போராடுங்கள்.இந்த  அமைப்புக்கு எதிராகவும்,நீதிபதிகளுக்கு எதிராகவும் நீங்கள் செய்யும் போராட்டங்கள் எதுவும் பலனளிக்காது.

இந்த நாட்டில் ஓர் அமைப்பு இருக்கிறது,இந்திய விடுதலைக்காகப் போராடினோம் என்று சொல்லிக்கொள்ள அந்த அமைப்பில் ஒருவருடைய பெயரோ அல்லது இருவரு டைய பெயர்களோ கூட கிடையாது. ஒரே ஒரு பெயர் கூட இல்லை. அவர்கள் நம் இந்திய தேசியக் கொடியை ஒருபோதும் ஏற்ற மாட்டார்கள்.அண்மையில் பிரதமர் மோடியிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.உங்களில் பலருக்கும் கடந்த 26ஆம் தேதி அது வந்திருக்கலாம்.அது எனக்கு எரிச்சலைத் தந்தது.ஏனெனில் அது எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி.அவர் என் நண்பர் கிடையாது,எனது முகவரியை நான் அவரோடு பகிரவும் இல்லை.அப்படியானால் நம்முடைய தரவுகள் (Data) அனைத்தும் அவர்களிடம் இருக்கின்றன.

அந்தக் கடிதம் முழுவதும் பொய்களால் நிரம்பியிருந்தது.அழகான பொய்கள்.அவர் சொல்கிறார்.‘இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால்,ஒரு சாதாரண நிலையிலிருந்து நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது.அம்பேத்கர் ஒரு மாபெரும் மனிதர்,மகாத்மா காந்தி ஒரு மாபெரும் மனிதர்'என்றெல்லாம் அதில் இருந்தது.அவர் எவ்வளவு பெரிய பொய்யர்!

அதற்கு முந்தைய நாள்,அதாவது 25ஆம் தேதி பார்த்த காட்சிகள் என் நினைவுக்கு வந்தன.பிரதமரும் கீகுகு தலைவரும் முன்னிலையில் இருக்க ராம்மந்திரில் ஒரு கொடி ஏற்றப்பட்டது.அந்தக் காவிக்கொடி மேலே ஏறும்போது நமது பிரதமரின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.நான் வியந்தேன்.இந்த மனிதருக்கு உண்மையிலேயே நமது தேசியக் கொடியின் மீது மரியாதை இருக் கிறதா? இல்லை.அவர்களின் செயல்திட்டம் வேறானது.

அவர்களின் செயல்திட்டம் இனப்படுகொலை.அவர்களின் செயல் திட்டம் மனுஸ்மிருதியை மீண்டும் கொண்டு வருவது.அவர்களின் செயல்திட்டம் அரசிய லமைப்புச் சட்டத்தை மாற்றுவது. ஏனெனில் அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை.நீங்கள்,நான்,உமர் என நாம் அனைவரும் இரண்டாம் தரக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த ஊடகங்களின் வாயிலாக நான் சாமானிய மனிதனிடம் சொல்கிறேன்.விழிப்புடன் இருங்கள்,எச்சரிக்கையாக இருங்கள்.இன்று அவர்கள் முஸ்லிம்களைத் தேடி வருகிறார்கள்.நாளை அவர்கள் உங்களுக்காக வருவார்கள்.

தொடர்ந்து குரல் கொடுப்பது ஒன்றே ஒரே வழி.காலவரிசையைப் (Chronology) புரிந்து கொள்ளுங்கள்.கௌரி லங்கேஷ் கொல் லப்பட்டார்.ஆயுதம் கண்டறியப்பட்டது.கௌரி, பன்சாரே,தபோல்கர்,கல்புர்கி என இந்துத்துவாவுக்கு எதிராகப் பேசியவர்கள் அனைவரும் வரிசையாகக் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் அவர்கள் பிணையில் வெளியே வருகிறார்கள்.RSS பஜ்ரங்தள் அமைப்பினர் அவர்களுக்கு வெளியே மாலை அணிவித்து வரவேற்கிறார்கள்.

பிரிஜ் பூஷன்,குல்தீப் செங்கார் போன்ற பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள் வெளியே வருகிறார்கள்.தேர்தல் நேரத்தில் வெளியே வந்து பாஜவுக்காக வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட்டு,மீண்டும் உள்ளே செல்கிறார்கள்.அவர்களின் செயல்திட்டம் தெளிவானது.ஜனநாயகத்தைக் கொல்ல வேண்டும்,அனைத்து அமைப்புகளையும் அழிக்க வேண்டும்.

நாம் விழித்தெழ வேண்டிய நேரம் இது. நமது குரல்களை உயர்த்தி அவர்களிடம் சொல்ல வேண்டிய நேரம் இது.‘நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்.நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம்.நீங்கள் எங்களிடம் நூறு முறை பொய் சொன்னால்,நாங்கள் ஆயிரம் முறை உண்மையைப் பேசுவோம்.'வாழ்த்துகள்.நன்றி.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்